ஆறாம் முத்திரை Jeffersonville, Indiana, USA 63-0323 1இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் - தாழ்த்துவோமாக. கர்த்தாவே, ஆராதனைக்கென்று நாங்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறோம். பழைய ஏற்பாட்டின் காலங்களில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற அவர்கள் சீலோவிலே (Shiloh) கூடி வந்ததை நாங்கள் நினைவுகூறுகிறோம். ஆகவே, உம் வார்த்தையைக் கேட்க இன்றிரவு நாங்கள் கூடி வந்துள்ளோம். ஆட்டுக்குட்டியானவர் ஒருவரே முத்திரைகளை உடைக்கவும், அதை அவிழ்க்கவும் பாத்திரவான் என்று நாங்கள் இந்த குறிப்பிட்ட வேத பகுதியில் படித்துக்கொண்டு வருகிறோம். பரலோகப் பிதாவே, இந்தப் பெரிய ஆறாம் முத்திரையைக் குறித்து நாங்கள் இன்றிரவு சிந்திக்கப்போவதால், ஆட்டுக்குட்டியானவர் அதை எங்களுக்குத் திறந்து தர வேண்டுமென்று கெஞ்சுகிறோம். நாங்கள் அதைப் புரிந்துகொள்ள இங்கே இருக்கிறோம். வானத்திலாவது, பூமியிலாவது ஒருவனும் அதைத் திறக்கப் பாத்திரவானாய்க் காணப்படவில்லை. எனவே, எல்லாம் வல்ல நீர் இன்றிரவு இம்முத்திரையை உடைத்து, காலமாகிய திரைக்குப் பின்னால் இருப்பவைகளை நாங்கள் காண அருள்புரியும். பாவமென்னும் இந்த மிகப்பெரிய அந்தகாரம் சூழ்ந்துள்ள இந்நாட்களில் அது எங்களுக்கு ஒத்தாசையாக இருந்து, தைரியத்தையளிக்குமென்று நம்புகிறோம். நாங்கள் உம் சமூகத்தில் இப்பொழுது கிருபையைக் கண்டடைகிறோம் என்று நம்புகிறோம். நாங்கள் எங்களை உமது வார்த்தையுடன் உமக்கு சமர்ப்பிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். 2மாலை வணக்கம் நண்பர்களே, கர்த்தருடைய ஊழியத்திற்கென்று மீண்டும் இன்றிரவு இங்கிருப்பது சிலாக்கியமான ஒன்றாகும். நான் சிறிது தாமதமாக வரநேர்ந்தது, நான்... அவசரமாகச் செல்ல வேண்டியதாயிருந்தது, மரிக்கும் தருவாயிலிருந்த ஒரு மனிதன், இந்த சபையின் அங்கத்தினர்; அவருடைய தாயாரும், இல்லை அவர் இங்கே வருபவர். ஆகவே அந்த பையன் மரித்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்கள் கூறினர். ஆதலால் நான் நான் அங்கு சென்று ஒரு-ஒரு மனிதனுடைய நிழலைப் போன்று படுத்திருந்ததைப் பார்த்தேன். மரிக்கும் தருவாயிலிருந்த அவருக்கு ஏறக்குறைய என் வயது இருக்கும். ஜெபித்த மாத்திரத்தில் அவர் எழுந்து உட்கார்ந்து, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். ஆகையால் நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு, சரியானவைகளை மாத்திரம் செய்து, அவருடைய இரக்கத்திற்காக அவரை நோக்கிக் கூப்பிடும்போது, தேவன் நமக்கு வேண்டியவைகளை அளிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் அதை நமக்கு அளிக்க காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்பொழுது இங்கு உஷ்ணமாயுள்ளது என்று நானறிவேன். இல்லை உஷ்ணமாளிக்கும் உபகரணம் மூடப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம்... நான் கடந்த இரவு இல்லை இன்று கவனித்தேன். வெளிச்சமற்ற ஒரு அறையில் கர்த்தருடைய வெளிப்பாட்டுக்காக நான் காத்திருப்பது இது ஏழாம் நாளாகும். அறையில் மின்சார விளக்குகளைத்தவிர வேறு வெளிச்சம் எதுவுமில்லை. பாருங்கள். அங்கு நான் வேதத்தை படித்துக் கொண்டு தேவன் இம்முத்திரைகளைத் திறக்க வேண்டுமென்றும் ஜெபித்துக்கொண்டு வருகிறேன். 3அநேகர் கேள்விகளை எழுதி அனுப்பியுள்ளனர். பெரும்பாலோர் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை எங்ஙனமாயினும் நடத்த வேண்டுமென்றும், இன்னும் ஒரு நாள் தங்கியிருந்து திங்களன்று அதை நடத்த வேண்டுமென்றும் கோரியுள்ளனர். அதுவே ஜனங்களுடைய விருப்பமாய் இருக்குமானால், அதைச் செய்ய அவர்கள் விரும்பினால், என்னால் என்னால்என்னால் உண்மையாகவே அதை நடத்த முடியும். நான் இங்கு தங்கியிருந்து வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் அதைக் குறித்து, நன்கு ஆலோசனை செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். 4ஏனெனில் நான் என் நேரம் யாவையும், முழுமையாக இந்த முத்திரைகளுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளேன். நான் அந்த முத்திரைகளுக்காகவே என்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஆகவே நீங்கள் அதைக் குறித்து ஆலோசனை செய்து, ஜெபித்து, எனக்குத் தெரியப்படுத்துங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் சுகமளிக்கும் ஆராதனையை நான் நடத்துவேன், என்னால் நடத்த முடியும். அடுத்ததாக நான் நியூ மெக்ஸிகோவிலுள்ள அல்பர்க்யூ பட்டிணத்தில் பிரசங்கிக்க வேண்டும். இதற்கிடையில் சில நாட்கள் இருக்கின்றன. ஆனால் சில வேலைகளுக்காக வீடு சென்று, அரிசோனாவில் அங்கு கூட்டங்கள் நடத்தை ஒழுங்கு செய்யவேண்டும். எனவே, சுகமளிக்கும் ஆராதனை நடத்துவது கர்த்தருக்கு சித்தமாயிருக்குமானால் அதை நடத்தலாம். அதற்கென்று நீங்கள் ஜெபியுங்கள். நானும் ஜெபிப்பேன். அதன்பின்னர் நாம் அதைக் குறித்து அதிகமாக தெரிந்துகொள்ளலாம். 5நான் சற்று கூர்ந்து காண்பது என்னவென்றால், இப்பொழுது நான் காண்கிறேன். நீங்கள் வியாதியைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, எனக்கு பகுத்தறிதல் உண்டாகிறது இந்தப் பெண்மணி இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். இந்த ஸ்திரீக்கு ஏதாவதொன்று உதவினாலொழிய ஜீவிக்க முடியாது. ஆகவே, பாருங்கள், தேவன் உதவி செய்யும்படியாய் நாம்-நாம் அவ்வாறு ஜெபிப்போம். பாருங்கள். ஜெபத்திற்காக நீங்கள் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். ஆகவே, பாருங்கள் பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நீங்கள் பாருங்கள். ஆகவே அவர்... ஆனால் இந்த சமயத்தை நான் முத்திரைகளுக்கென்று ஒதுக்க முயற்சித்திருக்கிறேன். ஏனெனில் அதற்கென்றே நாம் முன்னரே முடிவு செய்திருந்தோம். நீங்கள் பாருங்கள். ஆனால் ஏதாவது.. எத்தனை பேர் இங்கு வியாதியாயிருக்கிறீர்கள்? ஜெபம் செய்துகொள்வதற்கென எத்தனைப்பேர் வந்திருக்கிறீர்கள்? நீங்கள் கைகளை உயர்த்துவதை நாங்கள் காணட்டும். எல்லாவிடங்களிலுமிருந்து கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஓ, என்னே! ஹும்! திங்கள் இரவன்று சுகமளிக்கும் ஆராதனை நடத்துவது, திங்கள் இரவன்று வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது தேவனுடைய சித்தம் என்று உங்களில் எத்தனைப் பேர் நினைக்கின்றீர்கள்? நீங்கள் அதை விரும்புகின்றீர்களா? உங்களால் அதற்கு இருக்க முடியுமா? சரி. கர்த்தருக்குச் சித்தமானால் திங்கள் இரவன்று வியாதியஸ்தருக்காக நாம் ஜெபிப்போம். பாருங்கள்? வியாதியஸ்தருக்காக சுகமளிக்கும் ஆராதனையை நாம் நாம் புதன் அல்லது ஞாயிறு இரவு அல்லது.. திங்கள் இரவன்று நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். 6இப்பொழுது, நான் அரிசோனாவில் நடத்த இருக்கின்ற கூட்டங்களுக்கு இது குறுக்கிடாது என்று நான் நம்புகிறேன். சகோதரன் நார்மன், இது உங்களுடைய திட்டத்தில் ஏதாவது குறுக்கிடுதா? (சகோதரன் ஜீன் நார்மன், “இல்லை ” என்று கூறுகிறார்.-ஆசி.] சகோதரன் ஃபிரெட், ஏனையோருக்கும், இது சரியாக இருக்கின்றதா? (மற்றவர்களும், “சரி” என்கின்றனர்.] பாருங்கள்? அப்படியென்றால் சரி. சரி. 7கர்த்தருக்குச் சித்தமானால் திங்கள் இரவு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கென்றே அந்த ஒரு இரவை ஒதுக்கிவைப்போம். இப்பொழுது, முத்திரைகளுக்காக இனிமேல் வேறே நாட்களை ஒதுக்கவேண்டியதில்லை. தேவன் இம்முத்திரைகளைத் திறந்து கொடுப்பாரானால், இப்பொழுது திங்கள் இரவன்று வியாதியஸ்தருக்காக நாம் ஜெபிக்கலாம். இப்பொழுது, ஓ, இந்த முத்திரைகளின் கீழாக நான் கர்த்தருக்கு செய்கின்ற இந்த ஊழியத்தில் நான் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். முத்திரைகள் வெளிப்படுவதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். நீங்களும் மகிழ்ச்சியுறுகிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.] இப்பொழுது, ஐந்தாம் முத்திரையிலிருந்து நாம் பேசுகையில் அல்லது...இந்த ஆறாம் முத்திரை. அது வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தில் 12-ம் வசனம்தொடங்கி 17-ம் வசனம் முடியவுள்ள பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது சற்று நீண்டதாயிருக்கிறது. அநேக சம்பவங்கள் அப்பொழுது நிகழ்கின்றன. இப்பொழுது... 16 சென்ற இரவு பிரசங்கித்ததை ஒவ்வொரு முறையும் செய்வதுபோல சற்று பிண்ணனிக்காக மறுபடியும் விமர்சனமாக கூறுவோம். 8அதற்கு முன்பு நான் நான் வேறொன்றைக் கூற விரும்புகிறேன். கேள்விப்பெட்டியில் நான்கைந்து முக்கியமான கேள்விகள் இருந்ததை நான் கண்டேன். அதற்காக நான் மன்னிப்பைப் கோரிட விரும்புகிறேன். ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறதா? ஒலிநாடாவில் பதிவாகிறதா? ஊழியம் செய்யும் சகோதரரிடமும், இங்குள்ள உங்களிடமும் நான் மன்னிப்பைக் கேட்க விரும்புகிறேன். அவர்கள் சொல்வதாவது, அன்று இரவு நான் எலியாவைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் எலியா ஒருவன் மாத்திரம் எடுத்துக்கொள்ளப்படுதலில் இருப்பதாக அல்லது இரட்சிக்கப்பட இருப்பதாக அவன் எண்ணினபோது, நான்-நான் ஏழாயிரம் என்று சொல்வதற்குப் பதிலாக எழுநூறு என்று சொல்லிவிட்டேன். அது உண்மையா? [சபையோர், “ஆம்” என்கின்றனர்.-ஆசி.] நல்லது சபையோரே, இதற்காக நிச்சயமாகவே நான் வருந்துகிறேன். அதைவிட நான் நான் நான் நன்றாக அறிந்துள்ளேன். அது ஏழாயிரம் என்று நான் அறிவேன். ஆகவே இது பேச்சின் புரியா ஒலிப்பு மாத்திரமேயாகும். நான் அதைச் சற்று சரியாகக் கூறவில்லை . நான்... நான் நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அதன் கருத்தாவது... நான் கூறுவதை நீங்கள் கவனமாகக் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நீங்கள் பாருங்கள், அப்பொழுது, அது.. ஏனெனில் அது அது ஏழாயிரமாக இருக்கின்றது. இரண்டு, மூன்று குறிப்புகள் அதன் பேரில் எழுதப்பட்டிருந்ததை நான் வைத்துள்ளேன். நான் “சகோ, பிரான்ஹாம், நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது எழுநூறு என்பதற்கு பதிலாக ஏழாயிரம் பேர் என்று இருக்கவில்லையா?” என்றிருந்தது. நிச்சயமாக நான் “ஏழுநூறு என்று சொல்லவில்லையே” என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்? அதாவது அதன்பின், நான்... பில்லி .. அதன்பின், முதலாவது நீங்கள் அறிவது என்னவெனில், நான் மற்றொரு குறிப்பை எடுத்தேன். அது, “சகோதரன் பிரான்ஹாம். நீங்கள் எழுநூறு பேர் என்று கூறியதாக நான் நம்புகிறன்,” என்றிருந்தது. வேறொரு சகோதரன், “எழுநூறு பேர்கள் எடுக்கப்படுதலில் செல்வார்கள் என்று நீர் ஆவிக்குரிய தரிசனம் கண்டீரா? அந்த ஏழாயிரம்...அதனை முன்னடையாளமாக்கிக் காண்பிக்கிறீரா” என்று எழுதியிருந்தார். இவ்விதம் யோசிப்பதனால் ஜனங்கள் குழப்பமுறுகின்றனர். இது என்னை அப்படிப்பட்ட காரியத்தின் முனையில் வைத்துவிடுகிறது என்பது போதுமானதாயிருக்கிறது. இந்த முத்திரை இன்று எனக்கு வெளிப்பட்டபோது ஒன்று சம்பவித்தது. அதனால் நான் முற்றத்தில் சிறிது இங்கு மங்கும் நடந்தேன். அது உண்மை . அதனால் ஏறக்குறைய என் சுவாசமே நின்று விடுவது போலாயிற்று. பாருங்கள்? ஆகவே நாம் பேசுகிறோம், அவ்வளவு மூளை இறுக்கம். (Tension) ஓ, என்னே ! பாருங்கள்? வேறொரு காரியம், பாருங்கள், நான் கூறுவதை நீங்கள் உண்மையென்று ஏற்றுக்கொள்வதனால், நான் உங்களுக்கு என்ன கூறுகிறேனோ, அதற்கு தேவன் என்னை உத்திரவாதமுள்ளவராக்குவார். பாருங்கள்? எனவே, நான் - நான் உங்களுக்கு ஒன்றை எடுத்துக் கூறுமுன்பு அது முற்றிலும் உண்மை என்று நான் அறிந்துகொள்ளுதல் அவசியம். ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு-ஒரு மகத்தான காலமாகும். ஆம். 9திங்கள் இரவன்று நடத்தப்போகும் சுகமளிக்கும் ஆராதனையைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். சகோதரன் நெவில் அது உங்களுக்கு தடங்கலாயிருக்குமா? (சகோதரன் நெவில், “ஒரு தடங்கலுமில்லை. நானும் இங்கு இருப்பேன்” என்று சொல்லுகிறார். ஆசி.) அது அருமையானது. சகோதரன் நெவில் அருமையான ஒரு சகோதரன். அவர்கள்அவர்கள் ஒன்றை உருவாக்கி, அதன்பின் அதன் மாதிரியை இழந்து போனார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் உங்களுக்கு கூறுகிறேன். அது ஒரு.. அவர் எனக்கு ஒரு ஒரு ஆப்த நண்பராய் இருந்து வருகிறார். இந்தக் கூடாரம் கட்டிமுடிந்துவிட்டது. ஞாயிறு பள்ளி அனைத்தும் நடத்த அறைகளும் ஆயத்தமாகவும், ஒழுங்குடனும் இங்கு உள்ளன. இங்குள்ள ஜனங்களாகிய உங்களில் சிலர் ஜெபர்ஸன்வில்ப ட்டிணத்திலுள்ளவர்கள் ஆராதனைக்கு வருவதற்கும், ஞாயிறு பள்ளி நடத்துவதற்கும் ஒரு நல்ல ஸ்தலம் இங்குள்ளது. 10சகோதரன் நெவில் ஒரு நல்ல போதகர். பருவம் வந்தவர்க்கு வகுப்புகள் நன்றாக நடத்துவார். அவர் உண்மையான போதகர். அவருக்கு பூச்செண்டு கொடுத்து அவரைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக நான் இதைக் கூறவில்லை. அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருக்கு மலர் வளையம் செலுத்துவதைக் காட்டிலும் இப்பொழுது ஒரு சிறு ரோஜாப்பூ அவருக்களிக்க விரும்புகிறேன். நான் சிறு பையனாக இருந்த முதற்கொண்டு சகோதரன் சகோதரன் நெவில் அவர்களை எனக்குத் தெரியும். அப்பொழுது முதல் அவர் இம்மியேனும் மாறவில்லை. எப்போதும் இருந்து வந்த ஆர்மன் நெவிலாகவே இன்னமும் அதே போன்றேயிருக்கிறார். அவரை சந்தித்ததை நினைவு கூருகிறேன். அவர் மெதோடிஸ்ட் போதகராயிருந்த போதும், என்னை அங்கு பிரசங்கிக்க அழைத்தார். கிளார்க்ஸ்வில் பட்டிணத்தில் அவருக்கு ஒரு நல்ல சபை இருந்தது. அது ஹாவர்ட் பார்க் என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஹாரிஸன் அவென்யூ மெதோடிஸ்ட் சபை. சகோதரி நெவில், அங்கு தான் அவர் உங்களைச் சந்தித்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் சகோதரி நெவிலும் மெதோடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர். 11நான் திரும்பி வந்து என் சபையாரிடம் “சகோதரன். நெவில் மிகவும் அருமையான மனிதர். என்றாவது ஒரு நாள் அவருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்போகிறேன்” என்றேன். நான் கூறினவாறே நிகழ்ந்தது. | இதோ அவர் இப்பொழுது என் நண்பர் என்பக்கத்தில் இருக்கிறார். அவர் கனத்திற்கும், மரியாதைக்குமுரிய மனிதர். அவர் தன்னால் இயன்றவரை என் ஊழியத்தி என்னைத் தாங்குகிறார். நான் எதைக் கூறினாலும் அதை அவர் ஏற்றுக்கொண்டு அதில் நிலைகொள்கிறார். முதலில் அவர் இந்த செய்திக்குள் வந்தபோது, அப்பொழுது அவருக்குச் செய்தி புரியாமலிருந்தது. என்றாலும் அவர் அதை விசுவாசித்து அதில் நிலைநின்றார். அதுவே செய்திக்களித்த கெளரவம். அவரை எவ்வளவாகப் புகழ்ந்தாலும் போதாது, கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. சரி. இப்பொழுது ஐந்தாம் முத்திரையைக் குறித்து நாம் சென்ற இரவு சிந்தித்ததைச் சற்று விமர்சனம் செய்வோம். நாம் அதை முழுவதுமாக ஆராயாமல், ஐந்தாம் முத்திரை என்ன என்பதைக் குறித்து மட்டும் நாம் பார்ப்போம். இப்பொழுது, அந்திக்கிறிஸ்து குதிரையின்மேல் சவாரி செய்து, மூன்று வித வல்லமைகளைப் பெற்று, முடிவில் மூன்று வல்லமைகளையும் ஒருங்கே கொண்டு, மங்கின நிறமுள்ள குதிரையின்மேல் சவாரி செய்கின்றான். “மரணம்”, அடிப்பகுதியே இல்லாத ஆழம் காண முடியாது (bottomless pit) பாதாளத்திற்குள், முடிவில் அவன் புறப்பட்டு வந்த அதே பாதாளமாகிய கேட்டிற்குள் செல்கிறான். 12“வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்” என்னும் வேதம் கூறுகிறது. அது வார்த்தையில் பரிபூரணமாய் ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் நேற்று இரவு அறிந்துகொண்டோம். அந்திக்கிறிஸ்து நான் குதிரைகளின் மேல் சவாரி செய்தானென்றும், அந்த நான்கு முறைகளிலும் நான்கு ஜீவன்கள் அவைகளைச் சிந்தித்தன் என்றும் நாம் பார்த்தோம். அந்திக்கிறிஸ்து ஒவ்வொரு முறையும் வித்தியாசமுள்ள நான்கு குதிரைகள் மீது-வெள்ளை , சிகப்பு, கறுப்பு, மங்கின நிறம்சவாரி செய்தான். ஒவ்வொரு நிறமும் எதைக் குறிக்கின்றது என்றும், அது என்ன செய்தது என்றும் நாம் கண்டறிந்தோம். அவை சபை காலங்களில் நிகழ்ந்தவைகளை அறிவித்தன என்றும் நாம் பார்த்தோம். எனவே நீங்கள் பாருங்கள், தேவனுடைய வார்த்தை ஒன்றோடொன்று சரிவர பொருந்தினால், அது சரியென்று அர்த்தம். நீங்கள் பாருங்கள். ஆம் தேவனுடைய வார்த்தையுடன் பொருந்தும் எதுவும் எப்பொழுதும் “ஆமென்” என்று இருக்கிறது என்பதை நான் முற்றிலும் நம்புகிறேன். புரிகிறதா? இப்பொழுது ஒரு சகோதரன், தான் தரிசனம் கண்டதாகவும், அது வல்லமையாக இருந்தால், கர்த்தர் மாத்திரமே அதை அளித்திருக்க முடியும் என்று கூறினார். அவர் தரிசனம் உண்மையாயிருக்கலாம். ஆனால் அது தேவனுடைய வார்த்தையுடன் இணங்காமல் அதற்கு மாறாக அமந்திருந்தால், அது சரியான தரிசனம் அல்ல. பாருங்கள்? 13இப்பொழுது, இங்கு மார்மோன் ஸ்தாபனத்தைச் சார்ந்த சில சகோதரரும் இருக்கலாம். சிலர் இந்த ஒலிநாடாக்களை வாங்கிக் கேட்கலாம். நான் இதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை. நானும் நீங்களும் சந்திக்க விரும்புகிற மிகச் சிறந்தவர்கள் மார்மோன் ஸ்தாபனத்தில் உள்ளனர். மார்மோன் ஸ்தாபனத்தார் மிகவும் நல்லவர்கள். அவர்களுடைய அவர்களுடைய தீர்க்கதரிசியாகிய ஜோசப் ஸ்மித் என்பவரை மெதோடிஸ்ட் ஜனங்கள் இல்லினாய் பட்டிணத்தில் கொன்று போட்டனர். அவரும் மிக அருமையான மனிதர், தரிசனம் கண்டவர்தான். ஆனால் அவர் தரிசனம் கண்டாரென்பதை நான் சந்தேகிக்கவில்லை. அவர் மிகவும் உத்தமமானவர். ஆனால் அவர் கண்ட தரிசனம் வேதத்திற்கு முரண்பாடாய் அமைந்திருந்தது. பாருங்கள்? ஆகவே அவர்கள் மார்மோன் வேதாகமம் ஒன்றை அவர்களுக்கென ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? என்னிடத்தில் இங்கே இருக்கிற இதுதான் வேதாகமம். அதுவே வார்த்தையாகும். அவ்வளவுதான். பார்த்தீர்களா? ஒரு சமயம் ஒரு ஒரு போதகர் அயல் நாட்டிலிருந்து ஒரு பெண்ணுடன் காரில் வந்ததை நான் கண்டேன். அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிருவரும் கூட்டத்திற்கு வர மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் பிரயாணம் செய்ய வேண்டியதாயிருந்தது என்பதை நான் அறிந்தேன். அந்தப் பெண் மூன்று இல்லை நான்கு முறை விவாகம் செய்தவள். அந்தப் போதகர் நான் தங்கியிருந்த உணவக நடை கூடத்தில் என்னைச் சந்தித்து என்னுடன் கைகுலுக்கினார். நானும் அவரது கரத்தைக் குலுக்கி அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம், “உங்களுக்கு ஓய்வு இருந்தால், சிறிது நேரம் உங்களிடம் என் அறையில் பேசமுடியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நிச்சயமாக, சகோதரன் பிரான்ஹாம்” என்றார். 41 அப்பொழுது நான் அவரை என் அறைக்கு அழைத்துச் சென்றேன். நான் அந்த ஊழியக்காரரிடம், “சங்கை, ஐயா, நீங்கள் இந்த தேசத்தில் ஒரு அன்னியர். உங்களுடனே வந்திருக்கும் பெண்ணுக்கு நல்ல பெயரில்லை. நீங்கள் இன்னின்ன இடத்திலிருந்து இன்னின்ன இடத்திலிருந்தே வருகிறீர்கள்” என்றேன். அவரும் “ஆம், ஐயா” என்று பதிலளித்தார். நான், “இதைக் குறித்த பயம் உமக்கில்லையா?... நான் உம்மை சந்தேகிக்கவில்லை. ஆனால் இது போதகன் என்னும் உங்கள் நன்மதிப்பைக் கெடுத்துவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அதைக் காட்டிலும் மேலான ஓர் நன்மரியாதையைக் நாம் காண்பிக்க வேண்டும் என்று நீர் கருதவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர் மாறுத்தரமாக, “ஓ, அந்தப் பெண் ஒரு பரிசுத்தவாட்டி” என்றார். அப்பொழுது, “நான் - நான் அதைச் சந்தேகிக்கவில்லை” என்றேன். ஆனால், அதைக் குறித்த காரியம் என்னவெனில், சகோதரனே, அவளைக் காண்பவர் எல்லோரும் பரிசுத்தவான்கள் அல்ல. நீங்கள் செய்வதென்னவென்று உங்களை அவர்கள் கவனிக்கின்றார்கள். ஆகவே நீங்கள் ஜாக்கிரதையாயிப்பது மேலானது என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்? இது சகோதரர்கள் என்னும் முறையில், ஒரு சகோதரனுக்கு ஒரு சகோதரன் என்று மட்டும் இருக்கட்டும். மேலும் நான், “அந்தப் பெண்மணி நான்கு இல்லை ஐந்து முறை விவாகம் செய்தவள்” என்றேன். அவர், “ஆம், அது எனக்குத் தெரியும்”. “உமக்குத் தெரியும், எனக்கு எனக்கு...” என்று ஒன்றைக் கூற வந்தார். உடனே நான், “நீர் உம்முடைய சொந்த சபையில் அதைப் போதிக்கிறதில்லையா, நீர் அதைப் போதிக்கிறீரா?” என்றார். அவர், 'இல்லை , ஆனால், உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் பிரான்ஹாம். ஒரு தரிசனம் கண்டேன்“ என்றார். நான், “நல்லது, அது சிறந்தது” என்றேன். அவர், “அதைக் குறித்த உங்களுடைய போதகத்தைப் பற்றி, நான் உங்களை சிறிது நேர்மைப்படுத்தக்கூடும் என்று நம்புகிறேன். நீர் அதைத் தவறாகக் கருதுவீரா?” என்றார். 14நான் “சரி” என்றேன். அவர். நான் “ஐயா, நான்-நான்- நான் அதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றேன். அவர், “நல்லது, நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு தரிசனம் கண்டேன்” என்றார். நான், “சரி கூறுங்கள்” என்றேன். நான் அப்பொழுது கண்டதோ, ஒரு சொப்பனமாயிருந்தது என்று கூறினார். பார்த்தீர்களா? அவர், “அந்த சொப்பனத்தில் என் என் மனைவி வேறொருவனுடன் வாழ்வதைக் கண்டேன். பின்னர் அவள் என்னிடம் வந்து என் அன்பே, என்னை மன்னித்து விடுங்கள். என்னை மன்னித்து விடுங்கள். அவ்விதம் செய்ததற்கு நான்நான் நான் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இனிமேல் நான் உங்களுக்கு உண்மையாக வாழ்வேன்” என்றாள். எனவே, “நான் அவளை மிகவும் சிநேகித்ததால், நான் அவளை மன்னித்து விட்டேன்” என்றார். மேலும், “அதன்பின்னர்...” அவர் மேலும், “உங்களுக்குத் தெரியுமா? அத்தரிசனத்தின் அர்த்தம் எனக்குக் கிடைத்தது. நான் தரிசனத்தின் கண்டவள்தான் இவள். அவள் அநேகமுறை விவாகம் செய்து கொண்டது உண்மைதான். ஆனால் அவளை அதிகமாக நேசித்தால், அநேகமுறை அவள் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை ” என்றார். அப்பொழுது நான், “உங்கள் தரிசனம் மிகவும் இனிமையாக உள்ளது. ஆனால் சத்தியத்தின் பாதையிலிருந்து அது மிகவும் அகன்றுள்ளது. அது தவறு. அதை நீங்கள் செய்யவே கூடாது” என்றேன். ஆகவே...பாருங்கள்? 15வேதவாக்கியங்கள் வேதவாக்கியங்களுடன் ஒன்றோடொன்று இணைந்து, இவ்வாறு தொடர்ச்சியாக காணப்படுகின்றது. வேதவாக்கியங்களில், இங்கே விடுகின்ற இடத்தில், அங்கே உள்ள மற்றொன்று இதனுடன் பொருந்தி முழுக் காட்சியையும் உங்களுக்கு வரைந்து காண்பிக்கிறது. குறுக்கு விடுகதையில் (Crossword Puzzle) ஒன்றுடன் மற்றொன்றைப் பொருத்துவது போன்று, அது இருக்கிறது. இதில், நீங்கள் ஒரு பங்கை அதில் பொருத்துகிறீர்கள். வேறொன்றும் அதில் பொருந்தாது. அப்பொழுது நீங்கள் முழுக்காட்சியையும் பெற்றுக்கொள்கிறீர்கள். அவ்விதம் இணைக்கக்கூடியவர் ஒருவரே. அவர்தான் ஆட்டுக்குட்டியானவர். எனவே அவரை நாம் நோக்கிப் பார்க்கிறோம். இந்தக் குதிரைகளின் மேலும் சவாரி செய்வதன் ஒரே ஆள் என்று நாம் பார்த்தோம். நான் அவனைக் குறித்து தொடர்ந்து பார்த்தபோது, அவன் செய்தது என்னவென்பதை நாம் அறிந்து கொண்டோம். சபையின் காலங்களில் அவன் சரியாக என்ன செய்தான் என்பதையும் நாம் கண்டு கொண்டோம். 16அவன் ஒரு குறிப்பிட்ட மிருகத்தின் மீது ஏறி, ஒரு குறிப்பிட்டக் காரியத்தைச் செய்தபோது, அவன் செய்ததை எதிர்க்க ஒரு மிருகம் அனுப்பப்பட்டது என்பதை நாம் கண்டோம். முதலாம் காலத்தில் தேவனால் அனுப்பப்பட்ட மிருகம்...ஒரு சிங்கம், அது தேவனுடைய வார்த்தையைக் குறிக்கின்றது, கிறிஸ்து. அடுத்தபடியாக இருளின் காலங்களில் சபையானது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை எதிர்க்க ஒரு காளை அனுப்பப்பட்டது. எல்லாமே இருவரின் பேரில் ஆதாரம் கொண்டுள்ளன என்பது உங்கள் நினைவிலிருக்கட்டும். ஒன்று அந்திக்கிறிஸ்து, மற்றொரு கிறிஸ்து. இன்றைக்கும் அவ்விதமாகவே இருந்து வருகின்றது. பாதிவழி கிறிஸ்தவராக இருக்கவே முடியாது. குடித்தும், அதே சமயத்தில் புத்தித் தெளிவுள்ள மனிதனாய் ஒருபோதும் இருக்க முடியாது. அவ்வாறு ஒரே சமயத்தில் கறுப்பு வெள்ளை நிறங்கள் முழுமையாகக் கொண்ட பறவைகளாக, ஒரே சமயத்தில் பாவியாகவும் பரிசுத்தவனாகவும் உள்ள மனிதனாக இருக்கவே முடியாது. இல்லையேல் நீங்கள் பரிசுத்தவானாக இருக்க வேண்டும். பாருங்கள்? இதற்கிடையே உள்ள நிலையில் நீங்கள் இருக்க முடியாது. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் இருக்க வேண்டும். மறுபடியும் பிறவாதவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாதவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவாக உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாவிடில், நீங்கள் அதனால் நிரப்பப்படாவிடில், ஒரு உபயோகமுமில்லை . பாருங்கள்? ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், உங்களுடைய ஜீவியம் அதை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கும். அதனுடன் உங்கள் வாழ்க்கை சரியாகச் சொல்லும். பாருங்கள்? நீங்கள் ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறீர்கள் என்று யாருமே மற்றவருக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் அதைக் காண்கிறீர்கள், பாருங்கள், ஏனென்றால் அது ஒரு முத்திரையாயுள்ளது. 17இப்பொழுது, நாம் அந்த ஜீவன்களைக் கண்டோம், அந்திக்கிறிஸ்து ஒவ்வொரு குதிரையின் மேலும் எப்படி சவாரி செய்தான் என்பதையும் கண்டோம். அவன் சபை ஆதிக்கத்தையும் ஒருங்கே கொண்டிருந்தான். அவனை எதிர்க்க தேவன், அவர் கொண்டிருந்த வல்லமைகளை அனுப்பினார் என்று நாம் காண்கிறோம். சபைக் காலங்களில் இவையே சம்பவித்தன என்று நாம் சபை சரித்திரத்தின் மூலம் அறிந்துகொள்கிறோம். வேறொரு காலம் தோன்றினபோது, சத்துரு அந்திக்கிறிஸ்துவை மதத்தின் பெயரால் - சபையின் பெயரால் கிறிஸ்துவின் பெயரால் அனுப்பினான். ஆம் ஐயா! சபையின் பெயரில் அவன் சென்று, அதுதான் உண்மையான சபை என்று கூறினான். பாருங்கள்? ருஷியா தேசம் அந்திக்கிறிஸ்துவல்ல. அந்திக்கிறிஸ்து என்பவன் ருஷியாவல்ல. அந்திக்கிறிஸ்து மார்க்கம் உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் போன்றே அமைந்திருந்தது, அதன் விளைவாக தெரிந்துகொள்ளப்படாதவர் அனைவரும் ஏமாற்றப்படுவர் என்று வேதம் கூறுகின்றது. அது உண்மை . வேதம், “கடைசி நாளில், முன்குறிக்கப்படாத, தெரிந்துகொள்ளப்படாத அனைவரும் ஏமாற்றப்படுவர்” என்று உரைத்துள்ளது. அது, “தெரிந்துகொள்ளப்பட்டவர்” என்று கூறுகின்றது. எவருமே அந்த வார்த்தையை எடுத்துக்கொண்டு வேதத்தின் ஓரக் குறிப்பேட்டை (Margin) நீங்கள் ஆராய்ந்தால் அது எதைக் குறிப்பிடுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். அது, “தெரிந்துகொள்ளப்பட்டவர், முன்குறிக்கப்பட்டவர்” என்றிருப்பதைக் காணலாம். பாருங்கள்? “உலகத்தோற்றமுதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்படாதவர் அனைவரையும் அது ஏமாற்றிவிடும்” 18ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, அவர்கள் பெயர்கள் புஸ்தகத்தில் எழுதப்பட்டன. அவர் இப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தில் மகிமையில் நின்றுகொண்டு, புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள ஒவ்வொரு ஆத்துமாக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் யாரென்று அவரைத் தவிர வேறு யாரும் அறியார். அவர் தான் அப்புஸ்தகத்தை கையிலேந்திக்கொண்டிருக்கிறார். பெயரெழுதப்பட்டுள்ள கடைசி நபர் உட்பிரவேசிக்கும்போது அவருடைய மத்தியஸ்த ஊழியம் முடிவடையும். அப்பொழுது அவர் புறப்பட்டு வந்து, அவர் யாருக்காக பரிந்து பேசினாரோ, அவர்களை மீட்டுக் கொள்கிறார். அவர் இப்பொழுது மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்துகொண்டிருந்து, அதை நிறைவேற்றின பின்பு தமக்கு சொந்தமானவர்களை ஏற்றுக்கொள்கிறார். ஓ, என்னே! 19இதையறியும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னை ஆராய்ந்து பார்த்து, தேவனுக்கு முன்பாக தன்னுடைய கரங்களையுயர்த்தி, “ஓ, கர்த்தாவே, என்னைச் சுத்திகரியும்! என் ஜீவியத்தில் காணப்படும் தவறுகளை நான் காணட்டும். நான் அதனின்று உடனடியாக விலக உதவிசெய்யும்” என்று கூற வேண்டும். “நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?” நம்மை ஆராய்ந்து பார்க்கும் காலம் இதுவாகும். 20நீங்கள் இதை இங்கு பொருத்த விரும்பினால்... இந்த வார்த்தை ... இப்பொழுது நீங்கள் உங்கள் கேள்விகளை எழுதும்போது இதைக் குறித்து உங்கள் கேள்விகள் வேண்டாம் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில் அது என்னை வேறொரு தலைப்பிற்கு கொண்டு செல்லும். கேள்விகளை நீங்கள் எழுதி அனுப்பிவிட்டீர்கள் என்றே நான் எண்ணுகிறேன். இது தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து துருவித்தேடுகிற காலமாயிருக்கிறது. அது உண்மை . இப்பொழுது, கர்த்தர் நமக்கு நேரத்தை அளிக்கும்போது, எக்காளங்களைக் குறித்தோ அல்லது கலசங்களைக் குறித்தோ நாம் பேசும்போது இவைகளை நாம் விவரிக்கலாம். தேவனுடைய ஆக்கினை புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் பூமியை வாதித்த மூன்று தூதர்களும், “பூமியில் வாசம் பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! ஐயோ! என்று சத்தமிடுகின்றனர்.” அது உண்மை என்றே நாம் காண்கிறோம். நாம் பயங்கரமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... அதாவது.. 21இப்பொழுது நாம் ஆராய்ந்து கொண்டிருப்பவை, சபை எடுக்கப்பட்ட பின்னர் உபத்திரவ காலத்தில் சம்பவிக்கின்றன. சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிப்பதில்லையென்னும் சத்தியம் ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் பதிய வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த மணவாட்டி சபை, ஒருபோதும் உபத்திரவ காலத்திற்குள் செல்வதில்லை. பாருங்கள். அவள் எடுக்கப்பட்ட பிறகு, எஞ்சியுள்ள சபை உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்கும், மணவாட்டி அல்ல, பாருங்கள், மணவாட்டி அப்பொழுது போய்விட்டிருப்பாள். பாருங்கள், ஏனெனில், மணவாட்டியின் பேரில் எந்தவித பாவமுமில்லை. அவளுக்கு விரோதமாக ஒரு காரியமுமில்லை. தேவனுடைய கிருபை அவளை மூடிக்கொண்டிருக்கிறது. வெண்மையாக்கும் திரவம் அவள் பாவமனைத்தையும் அறவே அகற்றிவிட்டது. அதைக் குறித்து இனி நினைக்கப்படுவதும் இல்லை. அவள் தேவனுடைய பார்வையில் பரிசுத்தமுள்ளவளாய், பரிபூரணமானவளாய் இருக்கிறாள். ஓ, இதையறியும் மணவாட்டி முழங்காற்படியிட்டு தேவனிடம் கதற வேண்டியவளாயிருக்கிறாள். 22ஒரு கதை இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. உங்கள் சமயத்தை வீணாக்குகிறேன் என்று எண்ணவேண்டாம். நான்... இன்று பேச வேண்டிய பொருளைத் தொடங்குவதற்கு ஏற்ற ஆவியின் நிறைவு வரும் வரை, நான் ஆரம்பத்தில் இவ்விதம் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். 23இது ஒரு- இது ஒரு புனிதமான காரியமாயுள்ளது. பாருங்கள்? அது என்னவென்று தேவனைத் தவிர வேறொருவரும் அறியார். நாம் வாழும் இந்தக் கடைசி நாள் வரைக்கும் அது வெளிப்படாது என்று வேதத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அது முற்றிலும் உண்மை. புரிகிறதா? இதுவரை ஜனங்கள் அது என்னவாயிருக்குமென்று ஊகித்து வந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுது நாம் அதை அப்படியே சத்தியமாக, நிரூபிக்கப்பட்ட சத்தியமாகப் பெறவேண்டியவராயிருக்கிறோம். பாருங்கள்? கவனியுங்கள். 71 இப்பொழுது, மேற்கு பாகத்திலுள்ள ஒரு பெண் எப்படி அன்பு கொண்டாள் என்றால், ஒரு வாலிப மனிதன் அவள்மேல் அன்பு கொண்டான். அவன் கால்நடை வாங்கும் ஆர்மர் நிர்வாக முதலாளியின் மகன். அவர்கள் ஒரு ஒரு பெரிய... 24ஒரு நாள் அந்த முதலாளி வர, அவனோடு அவனுடைய மகன் பெண்கொள்வதற்கென சிக்காகோவிலிருந்து வந்திருந்தான். அவர்கள் மேற்கத்திய எல்லையிலிருந்து வரவேற்றனர். எல்லாப் பெண்களும் அவனைக் கவர்ச்சிக்க எண்ணி, பழங்காலத்தில் மேற்கத்திய பாகத்தில் அணியும் பிரத்யேகமான ஆடைகளை அணிந்துக் கொண்டு அழகாகக் காணப்பட்டனர். ஏனென்றால் அவன் முக்கியமான மனிதருடைய பையனாயிருந்தான். மேற்கு பாகத்தில் அவர்கள் இவ்விதமாக செய்கின்றனர். இவ்விதமாக சுவாரஸ்யமான ஒரு சம்பவம் அங்கு நிகழ்ந்தது. அதாவது, சகோதரன் மகியர் அவர் இங்கிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் மேற்கத்திய ஆடைகளை அணிந்துகொள்ளாததன் காரணத்தினால் அவர்கள் அவரைப் பிடித்து சிறையிலடைத்தனர். அதன்பின்னர் காங்ரூ நீதிமன்றத்தில் அவரை நிறுத்தி அபராதமிட வைத்தனர். அதன்பின்னர் அவர் மேற்கத்திய ஆடைகளை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டார். அங்குள்ளவர்கள் துப்பாக்கிகளை ஆடையில் தொங்கவிட்டவாறு, அந்த அளவு நீளமாக தொங்கிக்கொண்டிருக்க, அவர்கள் நடந்து வருவதை நான் கண்டேன். பழங்காலத்தவர் அந்நாட்களில் வாழ்ந்தது போன்று அவர்களும் வாழத்தலைபடுகின்றனர். பாருங்கள்? அவ்வாறே கென்டக்கி (Kentucky) நாட்டிலும், கிழக்கு பாகத்திலிருந்த ரென்ஃபுரோ பள்ளத்தாக்கில் இருந்த பழங்காலத்தவர் வாழ்ந்தது போன்று அவர்களும் வாழத்தலைபடுகின்றனர். ஏதோ ஒன்று அவர்கள் அவ்விதம் செய்யக்காரணமாயுள்ளது. 25ஆனால் பழங்காலத்தவர் கடைபிடித்திருந்த மூல சுவிசேஷத்தைக் கைக்கொள்வது மாத்திரம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நவீனமான ஒன்றைக் கைக்கொள்ள நீங்கள் விரும்புகின்றீர்கள். நீங்கள் பாருங்கள், அது எதைக் காண்பிக்கிறதெனில், நீங்கள் நீங்கள். அங்கே... ஒரு மனிதன் தவறு செய்யக்காரணம் யாது? அவன் குடிப்பதற்கும், ஒரு ஸ்திரீ தவறு செய்வதற்கும் காரணம் என்ன? ஏனெனில் அவன் முயற்சி செய்வது. அவனுக்குள் ஒருவித தாகம் ஏற்படுகின்றது. அவர்கள் அந்த பரிசுத்த தாகத்தை உலகத்தின் காரியங்களினால் தணித்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவரே அந்த விதமாக தாகத்தை உண்டாக்குகிறார். அந்தக் காரணத்தினால்தான் நீங்கள் ஏதோ ஒன்றுக்காக தாகமடைகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் தேவனிடம் திரும்பவேண்டும். பாருங்கள்? ஆனால் உலக காரியங்களின் மூலம் அதைத் தீர்த்துக்கொள்ள உங்களுக்கு எவ்வளவு தைரியம்! உங்களுக்குள்ள ஏதோ ஒன்றிற்காக ஏற்படுகின்ற அந்த தாகத்தை, அந்தப் பரிசுத்த தாகத்தை, உலகத்திற்குத் திரும்பி, உலகத்தின் காரியங்களால் அதை தீர்க்க முயற்சிக்க, அவ்வாறே உங்களுக்கு உரிமையில்லை. நீங்கள் அதைச் செய்ய முடியாது. அந்த தாகத்தைத் தீர்க்க ஒருவர் மாத்திரம்தான் இருக்கிறார். அவர் தான் தேவன். உங்களை அவ்விதமாகவே அவர் சிருஷ்டித்துள்ளார். 26ஆகவே, அந்தப்-அந்தப் பெண்கள் எல்லாரும் அந்த வாலிபனைக் கவர்ச்சிக்க மேற்கத்திய பாகத்தில் அணிந்துகொள்ளும் உடைகளை உடுத்தியிருந்தனர். அந்த வாலிபன் கிடைத்துவிடுவான் என்று ஒவ்வொருவரும் நம்பியிருந்தனர். ஆனால் அந்த ஸ்தலத்தில் அந்தப் பெண்களின் சொந்தக்காரப் பெண் ஒருவன் இருந்தாள். அவள் ஒரு அனாதை. இந்தப் பெண்கள் அனைவருக்காகவும் அவள் வேலை செய்து கொடுத்து வந்தாள், ஏனெனில் அவர்கள் நகங்களில் வர்ணம் தீட்டியிருந்ததால், பாத்திரங்களைக் கழுவி அவைகளைப் பாழாக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆகவே அந்தப் பெண் எல்லா கடினமான வேலைகளையும் செய்தாள். 79 அந்த வாலிபன் வந்தபோது, மேற்கத்திய பாகத்தின் சம்பரதாயத்தின்படி, அவர்கள் துப்பாக்கிகளை மேல் நோக்கியவாறு சுட்டு அவனை வரவேற்றனர். அன்றிரவு பழங்காலத்தவர் ஆடினது போன்று நடனங்களை அவர்கள் ஆடினர். அந்த ஸ்தலத்திலிருந்த அனைவரும் நடனத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மூன்று நாட்களாக நடந்து வந்தது. ஒரு நாளிரவு அந்த வாலிபன் சற்று இளைப்பாறுவதற்கென நடனமாடும் ஸ்தலத்தை விட்டு வெளியே வந்து மாடுகள் அடைக்கப்பட்டிருக்கும் பட்டியை நோக்கி நடந்தான். அங்கு கந்தை உடுத்தியிருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டான். பாத்திரங்களைக் கழுவுவதற்கென தண்ணீர் நிரம்பின பாத்திரத்தை அவள் கையில் பிடித்து இருந்தாள். அப்பொழுது அவன், “நான் இவளை இதுவரை கண்டதில்லையே. அவள் எங்கிருந்து வருகிறாள் என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறதே” என்று எண்ணினான். எனவே அவன் அங்கு பின்பக்கமாக அங்கிருந்த மாடுகள் அடைக்கப்பட்டிருக்கும் பட்டியை நோக்கியவாறு இருந்த வழியாக நடந்து வந்து அவளை சந்தித்தான். 27அவள் வெறுங்காலில் இருந்தாள். அவள் நின்றாள். அவனை யார் என்று கண்டுகொண்டாள். அவள் வெட்கமுற்று அவள் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். அந்த மகத்தான நபர் யார் என்று அவள் அறிந்து கொண்டாள். அவள் அந்தப் பெண்களுக்கு சொந்தகாரியாக இருந்தாள். அவர்களுடைய தகப்பனார் அந்த நிறுவனத்தில் தொழிலாளர் மேன்முறையாளராக வேலை பார்த்து வந்தார். அவள் தரையையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் வெறுங்காலில் இருந்ததற்காக மிகவும் வெட்கப்பட்டாள். அவன் “உன் பெயர் என்ன” வென்று கேட்டான். அவள் தன் பெயரைக் கூறினாள். “அவர்கள் எல்லாம் அங்கிருக்கும்போது, நீங்கள் ஏன் அங்கில்லை?” என்று அவன் கேட்டான். அதற்கு அவள் சில சாக்குபோக்குகளைக் கூறினாள். அடுத்த நாள் இரவும் அவன் அவ்வண்ணமாகவே அவளை மீண்டும் காண அவன் காத்துக்கொண்டிருந்தான். எனவே அவன் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தான். மற்றவர்களோ தொடர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தனர். அவன் அந்த பட்டியின் வேலியின் மீது அமர்ந்து, அவள் பாத்திரம் கழுவின தண்ணீரை வெளியே உற்ற வருவாள் என்று காத்துக் கொண்டிருந்தான். அவன் அவளைக் கவனித்துப் பார்த்தான். அவள் வந்தபோது அவன் அவளை அணுகி, “நான் இங்கு வந்திருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அவள் “இல்லை ஐயா. எனக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தாள். 28அவன், “மனைவியைக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். உன்னில் காணப்படும் நற்பண்பு அவர்களிடம் இல்லை” என்றான். அப்பொழுது நான் என் சபையைக் குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் பாருங்கள். எனவே அவன், “நீ என்னை விவாகம் செய்து கொள்வாயா?” என்று கேட்டான். அதற்கு அவள், “நானா? என்னையா? என்னால் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாதே” என்றாள். பாருங்கள்? அவன் முதலாளியின் மகன். நாட்டிலுள்ள அநேக நிறுவனங்களும், நிலங்களும் அவனுக்குச் சொந்தமானவை. நீங்கள் பாருங்கள். அப்பொழுது அப்பெண்ணிடம் அவள், “ஆம் உன்னைத் தான் கேட்கிறேன்” என்றான். மேலும் அவன், “என்னால் ஒரு நல்லப் பெண்ணைக் கூட சிக்காகோ பட்டிணத்தில் காண முடியவில்லை. எனக்கு ஒரு உண்மையான மனைவி வேண்டும். எனக்கு நற்பண்புகொண்ட ஒரு மனைவி தேவை. நான் அதைத்தான் தேடிக்கொண்டிருந்தபோது, நான் அதை உனக்குள்ளாக கண்டேன்” என்று கூறினான். மீண்டும், “நீ என்னை மணந்து கொள்வாயா?” என்றான். அது அவனை திடுக்கிடச் செய்தது. அப்பொழுது அவன், “சரி” என்றாள். அப்பொழுது அவன், “நல்லது... நான் மீண்டும் திரும்பி வருவேன்” என்று அவன் அவளிடத்தில் கூறினான். மேலும் அவன், “நீ ஆயத்தமாயிரு. சரியாக ஒரு வருடம் கழித்து நான் திரும்பவும் வந்து உன்னை நிச்சயம் இங்கிருந்து அழைத்துச் செல்வேன். அதன் பின்பு நீ இவ்விதம் உழைக்க வேண்டிய அவசியமில்லை. உன்னை நான் அழைத்துச் செல்வேன். நான் சிக்காகோவுக்குச் சென்று, நீ ஒருபோதும் என்றுமே கண்டிராத ஒரு வீட்டை உனக்குக் கட்டி தருவேன்” என்றான். அதற்கு அவளோ, “எனக்கு வீடு என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. நான் ஒரு அனாதை” என்றாள். “நான் உனக்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டித்தருவேன். நான் திரும்ப வருவேன்” என்றான். அந்த ஒரு வருடத்தில் அவன் அவளைக் குறித்து கவனித்துக் கொண்டே வந்தான். கலியாண உடை வாங்குவதற்கென அவளால் முடிந்தவரை அவள் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்தாள். சபைக்கு ஒரு பரிபூரணமான எடுத்துக்காட்டு. பார்த்தீர்களா? புரிகிறதா? அதன்பின்னர் அவள் தன்னுடைய கலியாண வஸ்திரத்தை ஆயத்தப்படுத்தினாள். அவள் அந்த கலியாண வஸ்திரத்தை அவர்கள் அறிய காண்பித்தபோது, அதைக் கண்ட அந்தப் பெண்கள், 'நீயோ பரம ஏழை, முட்டாள்தனமான பெண்ணே , பெரிய அந்தஸ்து உள்ள அப்படிப்பட்ட ஒரு மனிதன் உன்னைக் கலியாணம் செய்துகொள்வான் என்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாயா“ என்று கூறினர். 29அவளோ, “அவர் எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்” என்றாள் ஆமென். மேலும், “அவர் வாக்களித்திருக்கிறார். அவருடைய வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். அவர்களோ, “ஓ! அவன் உன்னை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறான். அவன் மனைவியாக ஒருவளை பெறவேண்டியிருந்தால், எங்களில் ஒருவனையே அவன் மனைவியாய் பெற்றிருப்பான்” என்றார்கள். அவளோ “ஆம், அவர் எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். நான் அதற்காகவே காத்திருக்கிறேன்” என்றாள். ஆமென். நானுங்கூட காத்திருக்கிறேன். ஆகவே, நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. கடைசியாக அந்த நாள் வந்தது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அங்கு வருவதாக அவன் கூறியிருந்தான். அவள் கலியான உடை உடுத்திக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தான். அவனுடைய வருகையைக் குறித்து அவனிடத்திலிருந்து அவள் வேறெந்த வழியிலும் கேள்விப்படவில்லை. ஆயினும் அவன் நிச்சயம் வருவானென்று அவள் அறிந்திருந்தாள். எனவே, கலியாண வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவள் அவனுடன் செல்ல ஆயத்தமானாள். அப்பொழுது அதைக் கண்ட அந்தப் பெண்கள் அவளைப் பார்த்து நகைத்தனர். ஏனெனில், அந்த முதலாளி. அந்த தொழிலாளர் மேன்முறையாளருக்கு ஒரு வார்த்தையும்... அல்லது அந்தப் பெண்களால் ஒருவருக்குங்கூட அதைக் குறித்து ஒன்றும் தெரியாதிருந்தது. ஆகவே அது அவர்களுக்கு மர்மமாகவே இருந்தது. அது அப்படித்தான். நிச்சயமாகவே அது இரகசியமாகும். ஆனால் அந்தப் பெண்ணே அவன் நிச்சயம் வருவதாகச் சொன்ன அந்த வாக்குத்தத்தின் பேரில் சார்ந்திருந்து அவனுக்காகக் காத்திருந்தாள். 30ஆகவே, அவர்கள் அவளைப் பார்த்து நகைக்க ஆரம்பித்தனர். அவர்கள் அவளைச் சுற்றி இவ்விதமாக தங்கள் கரங்களைக் கோர்த்துக் கொண்டு, “ஹ!” என்று நடனமாடி நகைத்தனர். “பாவம், முட்டாள்தனமான ஒரு பெண்” என்றனர். அவள் அங்கேயே உறுதியாய் நின்றாள். அதற்காக எந்த அவமான உணர்வும் அவளிடம் சிறிதளவும் இல்லை . அவள் மலர்களை தன் கரங்களில் ஏந்திக் கொண்டிருந்தாள். அவளுடைய கலியாண வஸ்திரம் அவளுக்கு பொருத்தமாக பொருந்தியிருந்தது; அவன் வருகைக்காக அவள் துடித்துக் கொண்டிருந்தாள். “அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினாள்.” பாருங்கள்? அவள் அந்த மலர்களை தொடர்ந்து ஏந்திக்கொண்டு காத்திருந்தாள். அவர்கள் “இப்பொழுது, அது தவறு என்று நாங்கள் சொல்லவில்லையா? பார், அவன் வரமாட்டான்” என்றனர். அவள், “இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் உள்ளன. அவர் நிச்சயம் வந்துவிடுவார்” என்று உறுதியாகக் கூறினாள். ஓ, அவர்கள் அவளை மிகவும் கேலி செய்து நகைத்தனர். ஆகவே அந்த நேரத்தில் அந்த பழைய கடிகாரமானது ஐந்து நிமிடங்கள் ஆனதைக் காட்டியது. குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவந்ததை அவர்கள் கேட்டனர். சக்கரங்களின் கீழிருந்து புழுதியைக் கிளப்பிற்று. குதிரைகள் இழுத்துகொண்டு வந்த வண்டியோ வந்து நின்றது. அதைக் கண்டவுடன் அவள் குதித்தெழுந்து ஓடினாள். அவனும் வண்டியிலிருந்து கீழே குதித்தான். அவள் அவனுடைய கரங்களில் கட்டி அணைக்கப்பட்டாள். அவன், “தேனே, எல்லாம் முடிவடைந்தது” என்றான். அவள் தன் சொந்தக்காரப் பெண்களை, பழைய ஸ்தாபனங்களை விட்டு விட்டு அவனுடன் அவனுடைய சிக்காகோவை அடைந்தாள். அந்தப் பெண்கள் ஏமாற்றமடைந்து அவளையே நோக்கி கொண்டிருந்தனர். 31இத்தகைய வேறொரு மகத்தான வாக்குத்தத்தத்தை நானறிவேன். “உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் மறுபடியும் வந்து உங்களைச் சேர்த்துக் கொள்வேன்.” நாமெல்லாரும் பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறலாம். ஆனால் சகோதரனே, என்னைப் பொருத்தவரை அந்த சமயம் நெருங்கிவிட்டது. இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இந்த முத்திரைகள் உடைவதைக் காணும்போது, சமயம் கடந்து காலமாகிய கடிகாரம் “டிக், டிக்” என்று அடித்து நேரமானது நித்தியத்திற்குள் கடந்து செல்வதை ஏறக்குறைய என்னால் கேட்கமுடிகின்றது. ஏழாம் தூதனின் செய்தியின் முடிவில் அந்த தூதன் நின்று கொண்டு, “இனி காலம் செல்லாது” என்று சொல்வதை என்னால் காண முடிகிறது. அவருக்கு உண்மையாயிருந்த அந்த சிறு மணவாட்டி, வரப்போகும் ஒரு நாளில் பறந்து சென்று இயேசுவின் கரங்களையடைவாள். அப்பொழுது அவர் அவளை தம் பிதாவின் வீட்டிற்கு கொண்டு செல்வார். இப்பொழுது நாம் தொடர்ந்து செல்லுகையில், இக்காரியங்களை நாம் நினைப்போமாக. 32சிங்கம் - வார்த்தை ; காளை-உழைப்பும் பலியும்; மனிதன் சீர்திருத்தக்காரரின் ஞானம் என்னும் ஊழியங்களை கவனியுங்கள், முடிவில் கழுகின் காலம் தோன்றி அதுவரை வெளிப்படாமலிருந்த இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்திக் காண்பிக்கும். இப்பொழுது, சென்ற இரவு ஆராதனையில் நமக்கு அந்த முத்திரையில் வெளியான மகத்தான இரகசியம் அதுவரை, அதைக் குறித்து நான் கொண்டிருந்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. அதை வேறுவிதமாக யூகித்துக்க்ண்டிருந்தோம். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் ஆதிகால சபையில் இரத்த சாட்சிகளாக மரித்த கிறிஸ்தவர்களென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த இரவு தேவனாகிய கர்த்தர் நமக்காக அம்முத்திரையை உடைத்தபோது, அது முற்றிலும் அறிவிற்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. அது அந்த ஆத்துமாக்கள் அல்ல என்று நாம் கண்டறிந்தோம். அந்த ஆத்துமாக்கள் இரத்த சாட்சிகளாக மரித்த கிறிஸ்தவர்களல்லவென்றும். அவர்கள் ஏற்கனவே மகிமையில் பிரவேசித்துவிட்டனர், அவர்கள் அந்த நேரத்தில்...வருகின்ற யூதர்கள் என்று நாம் காண்கிறோம். 33அந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் அழைக்கப்படுவதை நாம் இன்று இரவும், நாளை இரவும் காணப்போகிறோம். அந்த 1,44,000 பேர்கள் ஆறாவது ஏழாவது முத்திரைகளுக்கிடையே அழைக்கப்படுகின்றனர். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள், கொல்லப்பட்ட இரத்த சாட்சிகள்-யூதர்கள். இன்னும் கொடுக்கப்படாமல்... அவர்கள் வெள்ளை அங்கி உடையவராயிருந்தனர். அவர்களுடைய பெயர்கள் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளையங்கி கொடுக்கப்பட்டது. நாம் அதைப் படித்தோம். இனிவரப்போகும் உபத்திரவ காலத்திற்கு முன்பிருந்த காலத்தில் நடந்த யுத்தத்தின்போது, எல்லோராலும் வெறுக்கப்பட்டனர். ஜெர்மானிய தேசத்தில் எய்க்மன் கோடிக்கணக்கான யூதர்களைக்கொன்று போட்டான். அதைப் பற்றிய விசாரணையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர்கள் யூதர்கள் என்ற ஒரேக் காரணத்தால் கோடிக்கணக்கில் குற்றமற்ற அந்த மக்கள் கொலை செய்யப்பட்டனர். 34“அவர்கள் தேவ வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டதாக” வேதம் உரைக்கிறது. ஆனால் மணவாட்டி தேவனுடைய வார்த்தையாகவும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியையும் கொண்டிருப்பாள் என்று நாம் காண்கிறோம். இவர்களிடம் இயேசுவைப் பற்றிய சாட்சி இல்லை. “இஸ்ரவேலர் எல்லோரும்-முன்குறிக்கப்பட்ட இஸ்ரவேலர் இரட்சிக்கப்படுவார்களென்று” ரோமர் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதை நாம் இப்பொழுது அறிந்துள்ளோம். அந்த ஆத்துமாக்கள் அங்கே உள்ளன என்று நாம் காண்கிறோம். 35இப்பொழுது நாம் அதை கூர்ந்து கவனிப்போம். ஏன் அது முன்பு இல்லாதிருந்தது? ஏனெனில் அது முன்பு சம்பவிக்கவில்லை. இப்பொழுது அதை நம்மால் காணமுடிகின்றது. நீங்கள் பாருங்கள். பாருங்கள், மகா பரிசுத்தாவியானவர் காலங்கள்தோறும் நடக்க இருப்பவைகளைக் கண்டவைகள் இப்பொழுது நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இப்பொழுது நாம் அங்கே சம்பவித்தவைகளைப் பார்க்கிறோம். அது சத்தியம் என்று காண்கிறோம். அந்த ஆத்துமாக்கள் அங்கேதான் இருக்கின்றன. இப்பொழுது, பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் உபத்திரவ காலம் வருமுன்பு எய்க்மன் போன்றவரால் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே உயிர்த்தியாகம் செய்யும் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களுக்கு முன்னடையாளமாயிருக்கின்றனர். பாருங்கள்? ஏழாம் முத்திரையைக் குறித்து ஒரே ஒரு வாக்கியம் மாத்திரமே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. “பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிற்று” என்றுள்ளது. அவ்வளவே. தேவன் மாத்திரம் அது என்னவென்று வெளிப்படுத்த முடியும். அடையாளங்களின் மூலமாகவுங்கூட அது சித்திரிக்கப்படவில்லை. அதை நாம் நாளை இரவு காண்போம். அது எனக்கு வெளிப்பட வேண்டுமென்று ஊக்கமாக ஜெபியுங்கள். பாருங்கள்? 36இப்பொழுது நாம் இந்த ஆறாம் முத்திரையைத் தியானிக்கையில்... நாம் இப்பொழுது கவனிப்போம். ஆறாம் முத்திரையை நாம் தியானிக்கும்போது அதை அறிந்துகொள்ள பரமபிதா நமக்கு உதவி செய்வாராக. இப்பொழுது 6-ம் அதிகாரம் 12-ம் வசனம் முதல் வாசிப்போம். அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன்: இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் (வானங்களும்) சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்றுபோயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத் தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, 37அங்கே கவனித்தீர்களா? இந்த “பராக்கிரமசாலிகளைப்” பாருங்கள். அவர்கள் என்ன செய்தனர்? “அவர்கள் வேசித்தனத்தின் உக்கிரமான மதுவைக் குடித்தனர்.” பாருங்கள்? இத்தகையவர் வேசி கொடுத்த மதுவைக் குடித்தனர். பாருங்கள்? பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக் கூடும் என்றார்கள். 38ஆறாம் முத்திரைக்கு எப்படிப்பட்ட தொடக்க கூறு (introduction)...பாருங்கள். குதிரை சவாரி செய்வதனின் காலமும் அக்குதிரைகளை எதிர்த்த ஜீவன்களின் காலமும் முடிவடைந்து விட்டது. அதன்பின்னர் உயிர்த்தியாகம் செய்த ஆத்துமாக்களை சிங்காசனத்தின் கீழ் நாம் கண்டோம். அவர்கள் கடைபிடித்திருந்த கொள்கையின் காரணமாக கொலை செய்யப்பட்ட வைதீக யூதர்கள் தாம் இவர்கள், ஏனென்றால் இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. தேவன் அவர்கள் கண்களைக் குருடாக்கினார் என்று நினைவில் கொள்ளுங்கள். புறஜாதி சபை எடுக்கப்படும் நாள்வரை, அவர்கள் கண்கள் குருடாயிருக்க வேண்டும்; ஏனெனில் தேவன் ஒரே சமயத்தில் இருவகை மக்களுடன் ஈடுபடுவதில்லை . அவ்விதம் செய்வாரானால் அது வேதத்திற்கு முரணாயிருக்கும். 39அவர் இஸ்ரவேலரிடம் எப்பொழுதுமே ஒரு தேசமாகத் தொடர்பு கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது இஸ்ரவேல் தேசமாயுள்ளது. ஆனால் புறஜாதிகளிடம் தனிப்பட்ட நபராகத் தொடர்பு கொண்டு, “புறஜாதிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஜனங்கள்,” அவர்களை வேறு பிரிக்கிறார். புறஜாதி சபை உலகின் எல்லா பாகங்களிலும் வாழும் மக்களிடையே தெரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகவே அந்தச் சபையிலே ஒன்றிரண்டு யூதர்களும் காணப்படலாம். பாருங்கள்? அந்த புறஜாதி மணவாட்டிஅரேபியன், ஐயர்லாந்தியர், இந்தியர் மற்றும் உலகிலுள்ள மக்களிலிருந்து இந்த மணவாட்டி மலர்ச் செண்டு (Bouquet Bride) உண்டாக்கப்படும். பாருங்கள்? ஆனால் இப்பொழுது, தானியேலின் எழுபது வாரங்களின் கடைசி பகுதியில் அவர் இஸ்ரவேலருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களிடம் ஒரு தேசமாகவே ஈடுபடுகிறார். ஏனெனில், புறஜாதியார் முடிந்துவிட்டனர். அப்பொழுது புறஜாதியாரை முழுவதுமாக விட்டு யூதர்களிடம் திரும்பப் போகும் காலம் மிகவும் அருகாமையில் உள்ளது, அது ஒருக்கால் இன்றிரவாகவே இருக்கலாம். முற்றிலுமாக, அவரே அவ்வண்ணம் கூறினார். “புறஜாதியாரின் யுகம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும் காலங்கள் முடிவடைகின்றன” என்று அவர் கூறியுள்ளார், எனவே ஆம், ஐயா. 40“அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்.” பாருங்கள்? அந்தப் புனித இடத்தில் இரத்தம் இனிமேல் இருக்காது. பலிபீடத்தின் மேல் இரத்தம் இனி இருக்காது. பலியானது அகற்றப்பட்டுவிட்டது. அங்கு புகையும், மின்னல்களும் நியாயத்தீர்ப்பும் தவிர வேறொன்றுமில்லை. இவையனைத்தும் ஊற்றப்பட்டதாக இன்றிரவு நாம் காணப்போகிறோம். பாருங்கள், ஆட்டுக்குட்டியானவர் தம் மத்தியஸ்த ஊழியத்தை விட்டு ஏற்கனவே புறப்பட்டுவிட்டார். மத்தியஸ்த ஊழியம் சிங்காசனத்திலிருந்து முடிவடைந்து விட்டது. நாம் விவரித்துக் காண்பித்தபடி, பலிப்பொருளாகிய மீட்பின் இனத்தான் இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் முன்னே வருகிறார்-அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற இரத்தம் தோய்ந்த அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவிட்டார். அங்ஙனமாயின், காலம் முடிவடைந்துவிட்டது. இப்பொழுது அவர் தாம் மீட்டுக்கொண்டவர்களைப் பெற்றுக்கொள்ள வருகிறார். ஆமென்! அது எனக்கு ஒருவித உணர்ச்சியை உண்டாக்குகிறது. 41“அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன். இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது” என்று யோவான் கூறுகிறான் என்று நாம் இப்பொழுது காண்கிறோம். இயற்கை யாவும் தடை செய்யப்படுகின்றன. பாருங்கள்? தேவன் பிணியாளிகளைக் குணமாக்குவது, குருடரின் கண்களைத் திறப்பது போன்ற பெரிய காரியங்களைச் செய்துகொண்டு வருகிறார், மகத்தான கிரியை செய்கிறார். இப்பொழுது இயற்கை யாவும் குப்புற விழுவதை நாம் காண்கிறோம். ஆம். என்ன நிகழ்ந்ததென்பதைக் கவனியுங்கள். பூமி அதிர்ச்சி, சூரியன் கறுக்கின்றது. சந்திரன் ஒளியைக் கொடாமல் போகின்றது. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. ஆறாம் முத்திரை உடைக்கப்படும்போது இவையனைத்தும் சம்பவிக்கின்றன. ஏன்? ஐந்தாம் முத்திரையின் கீழ், காணப்பட்ட ஆத்துமாக்களைக்குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு, இது சம்பவிக்கின்றது. பலிபீடத்திலுள்ள ஆத்துமாக்களும் முடிவுற்றனர். 42பாருங்கள். இவை நிகழும் தருணம் மிக அருகாமையில் உள்ளது. அது எப்பொழுது வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். ஏனெனில் சபை எடுக்கப்பட்டுவதற்கென சற்று ஏறக்குறைய ஆயத்தமாயிருக்கின்றது. ஆனால் இவை நிகழும்போது, மணவாட்டி இங்கி இருக்கமாட்டாள் என்பது ஞாபகமிருக்கட்டும். அவள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள் என்பது நினைவிருக்கட்டும். அவள் உபத்திரவக் காலத்தில் கடந்து போக வேண்டியதில்லை. சபை சுத்திகரிக்கப்படுவதற்கென உபத்திரவ காலத்தில் இவை நிகழ்கின்றன. ஆகவே சபையானது இவையனைத்தையும் அனுபவிக்க வேண்டும். மணவாட்டியல்ல. அவர் தமது இருதயத்துக்கேற்ற மணவாட்டியை ஏற்கனவே கொண்டு சென்றுவிட்டிருப்பார். ஆம் ஐயா. அவர் அவளை மீட்டுக்கொண்டார். ஒரு மனிதன் தன் மணவாட்டியைத் தெரிந்துகொள்வது போன்று அவரும் அவளைத் தாமாகவே தெரிந்து கொண்டார். பார்த்தீர்களா? இப்பொழுது, அந்த பூமி அதிர்ச்சி... 43இப்பொழுது நாம் வேத வாக்கியங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். நான் நான் விரும்பவது. உங்களிடம் காகிதமும், பென்சிலும் இருக்கின்றதா? எனக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இச்செய்தியடங்கிய ஒலிநாடாக்களை நீங்கள் வாங்கவில்லையென்றால், நான் கூறும் வேத வாக்கியங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வேதவாக்கியங்களை நீங்கள் என்னுடன் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். மீட்பின் புஸ்தகத்தின் ஆறாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இம்மகத்தான நிகழ்ச்சிகளையும் இரகசியங்களையும் குறித்து நாம் வேதவாக்கியங்களை ஒப்பிட்டுப் படிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இவை யாவும் மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆறாம் முத்திரையின் இரகசியங்கள் ஒரு பெரிய புத்தகத்தில் அடங்கியுள்ளது. ஆறு சுருள்கள் ஒன்றாக சுருட்டப்பட்டுள்ளன, அது மீட்பின் புஸ்தகம் முழுவதையும் அவிழ்க்கிறது. அந்தவிதமாகவே முழு பூமியும் மீட்கப்பட்டது. 44அந்தப் புஸ்தகத்தை யாரும் வாங்காமற்போனால் சர்வ சிருஷ்டியும் அழிந்துவிடுமே என்று கருதியே யோவான் அழுதான்; அவள் மூல் அணுக்களாகவும், ஆகாய வெளிச்சமாகவும் மாறி, சிருஷ்டியாகவே இருக்க முடியாது. இயலுலக அண்டத்துக்குரிய ஒளியோ, சிருஷ்டிப்போ, எந்த நபரோ, ஒன்றும் இருக்காது. ஏனெனில் ஆதாம் அப்புஸ்தகத்தின் மேலுள்ள உரிமையை இழந்து போனான். அவன் தன்னுடைய மனைவிக்கு செவிகொடுத்ததினால் அதை இழந்துபோனான். அவளோ தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக சாத்தானின் விவேகத்திற்குச் செவிகொடுத்தாள். பாருங்கள்? அந்தப் புஸ்தகம் இழக்கப்பட்டது. ஆதாம் உரிமையை இழந்தபோது, அப்புஸ்தகம் ஏவாளைச் சோதித்த சாத்தானின் மாசுபடிந்த கரங்களை அடையவில்லை. அது சிருஷ்டி கர்த்தரான மூல சொந்தக்காரரின் கரங்களையடைந்தது. எந்த ஒரு உரிமைப் பத்திரமும் அவ்வாறே மூல சொந்தக்காரரிடம் செல்ல வேண்டும். அவர் அப்புஸ்தகத்தை தம் கரங்களில் பிடித்துக்கொண்டிருக்கிறார். 45அதற்கு ஒரு கிரயம் உண்டு. அதுதான் மீட்பாகும். அந்த புஸ்தகத்தை மீட்பதற்கு ஒரு கிரயம் செலுத்தப்பட வேண்டும். அதை யாராலும் செலுத்தமுடியவில்லை. எனவே அவர் மீட்பின் இனத்தானைக் குறித்த தம் சொந்த சட்டத்தை வகுத்தார். அவர்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை . எந்த ஒரு மனிதனும் இனச்சேர்க்கையின் மூலமாக, இச்சையினால் பிறந்தவனாதலால், அவன் சாத்தானும் ஏவாளும் செய்த மூல பாவத்தில் இருக்கிறான். ஆகவே அவ்விதம் பிறந்த மனிதன் கிரயத்தைச் செலுத்த முடியாது. அவனிடத்தில் ஒன்று இல்லை. எந்த பரிசுத்த போப்பாண்டவரும், குருவானவர், வேத சாஸ்திரபட்டம் பெற்ற பண்டிதரும் அதற்குப் பாத்திரவானல்ல. ஒரு தேவதூதன் கிரயத்தைச் செலுத்த முடியாது. ஏனெனில் அது ஒரு இனத்தானாக இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் ஒரு மனிதனாக வேண்டியதாயிருந்தது. 46ஆகையால் தேவனே கன்னிப்பிறப்பினூடாக மனிதனாக அவதரித்து, இனத்தானாகி, தம் இரத்ததைச் சிந்தினர். சிந்தப்பட்ட இரத்தம் யூதனின் இரத்தமல்ல; அல்லது புறஜாதியானின் இரத்தமல்ல. அது தேவனுடைய இரத்தமாகும். பாருங்கள்? “தேவனுடைய இரத்தத்தின் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம்” என்று வேதம் கூறுகிறது. ஒரு குழந்தை அதன் தகப்பனாரின் இரத்ததைப் பெறுகின்றது. ஆணின் மூலமாக ஹீமோக்குளோபின் (Hemoglobin) உண்டாகிறது என்று நாம் அறிந்துள்ளோம். ஒரு பெட்டைக்கோழிமுட்டையிடுகின்றது. சேவல் அதனுடன் சேராமல் அது முட்டையிட்டால், அந்த முட்டை பொறிக்காது. ஏனெனில் அதில் ஜீவனில்லை. அவ்வாறே ஒரு பெண், முட்டையைச் சுமக்கும் ஒரு கருவியாக மட்டும் இருக்கிறாள். ஆனால் ஜீவனையளிக்கும் கிருமி ஆணிடமிருந்து வருகின்றது. 47இயேசுவின் பிறப்பில் தேவனே ஆணின் பாகத்தை ஏற்றார். ஆகையால்தான், மேல் இருக்க வேண்டியது கீழேயுள்ளதென்றும், பெரியதென்பது சிறியதாயிருக்கிறது என்றும் நான் கூறுவதுண்டு. (Up is down and big is little). மகத்தான தேவன் ஒரு நுண்ணிய கிருமியாக கன்னியின் வயிற்றில் புகுந்து, தம்மைச் சுற்றிலும் இரத்த அணுக்களையும் (Cells) இரத்தத்தையும் உண்டாக்கினார். கலப்பற்றவராய், இனச்சேர்க்கைக்கு அப்பாற்பட்டவராகப் பூமியில் பிறந்து வளர்ந்தார். அவர் மாம்சத்தில் நமது இனத்தானாகத் தோன்றி, தமது இரத்தத்தைச் சிந்தினார். அவரே மீட்பின் இனத்தானாயிருந்தார். அவர் தமது இரத்தத்தை எவ்வித கிரயமுமின்றி அளித்து நம்மை மீட்டார். அவர் அவ்விதம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நம்மை மீட்பதற்கென்று அவர் தாமே அதை இலவசமாகக் கொடுத்தார். 48பிறகு அவர் தேவனுடைய பலிபீடத்திற்கு செல்கின்றார். அங்கு காத்திருக்கிறார். அதே வேளையிலே தேவன் மீட்பின் புஸ்தகத்தை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கின்றார். இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் பலிபீடத்தின் மேல் நின்று கொண்டிருக்கின்றார். அங்கே அந்த ஆட்டுக்குட்டியானவர் மீட்பதற்கு இருக்கின்றார், பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார். அங்ஙனமிருக்க, மரியாள் அல்லது யோசேப்பு அல்லது அழிந்து போகக் கூடிய வேறெந்த மனிதனும் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்கிறான் என்று சொல்லும் துணிவு எப்படி உண்டாகிறது? இரத்தமின்றி அங்கு யாரும் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்ய முடியாது. ஆம் ஐயா. “தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்த ஒருவரே, அவர்தாம் கிறிஸ்து இயேசு.” அதைத்தான் வேதம் கூறுகின்றது. கடைசி ஆத்துமா மீட்கப்படும் வரைக்கும் அவர் அங்கு நின்றுகொண்டிருந்து, அதன் பின்னர் தாம் மீட்டுக்கொண்டவர்களை உரிமையாக்கிக்கொள்ள அவர் புறப்பட்டு வருவார். ஓ! என்னஎன்ன மகத்தான பிதாவாக அவர் இருக்கிறார். “எந்த ஒரு வார்த்தையும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் நிலை வரப்பட வேண்டுமென்று நான் அடிக்கடி கூறியுள்ளேன்” என்று இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள். ஒரு வேதவாக்கியத்துடன் வேறொன்று இணைந்து போகாவிடில், உங்களால் ஒன்றையுமே நிரூபிக்க இயலாது. பாருங்கள்? பாருங்கள், உதாரணமாக நான், “யூதாஸ் நான்று கொண்டு செத்தான்” என்னும் வேத வாக்கியத்தையும் “நீ போய் அந்தப்படியே செய்” என்னும் வேத வாக்கியத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை ஒன்றோடொன்று இணைக்க முடியாது. பாருங்கள்? ஏனெனில் அவை மற்றைய வேதவாக்கியங்களுடன் பொருந்தாது. 49ஆறாம் முத்திரையின் கீழடங்கியுள்ள இரகசியத்தைப் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உடைத்துக்கொடுத்தபோது அதனை நான் புரிந்துகொண்டேன். இன்றைய வேதவகுப்பில் வித்தியாசமான ஒன்றை நான் அளிக்க விரும்புகிறேன். பாருங்கள்? ஏனெனில் நான் பேசுவதை கேட்டுக் கேட்டு நீங்கள் சலிப்படைந்திருக்க வகையுண்டு. ஆகையால் இன்றைக்கு வேறுவிதமாக இதை நடத்தலாமென்று நான் எண்ணியுள்ளேன். 50இப்பொழுது கவனியுங்கள். இந்த மகத்தான சம்பவம், இந்த இரகசிய புஸ்தகமாகிட மீட்பின் புஸ்தகத்தில் முத்திரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, அந்த புத்தகத்தை ஆட்டுக்குட்டியானவர் தமது கரத்தில் வைத்துள்ளார். அதை உடைத்துத் தரப்போகின்றார். இப்பொழுது மத்தேயு 24-ம் அதிகாரத்தில் ஆட்டுக்குட்டியானவர் எப்ப சொல்லியிருக்கிறாரென்று பார்ப்போம். கிறிஸ்துவே வேதாகமம் முழுமைக்கும் ஆக்கியோன் (Author) என்பதை யாவரும் அறிவர். இந்த 24-ம் அதிகாரத்தில் அவர்அவர் பேச்சு அல்லது அவரது-அவரது பிரசங்கம், யூத ஜனங்களுக்குப் பிரசங்கிக்கிறார். சரி. 51இப்பொழுது நீங்கள் மத்தேயு 24-ம் அதிகாரத்தையும் வெளிப்படுத்தின விஷேஷம் 6-ம் அதிகாரத்தையும் உங்கள் வேதாகமத்தில் இவ்விதம் திறந்து இங்கே வைத்துக் கொண்டு ஒன்றோடொன்றை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். (சகோதரன் பிரான்ஹாம் இந்த இரண்டு அத்தியாயங்களையும் அவ்விதமாக திறந்து கொள்கிறார்.-ஆசி.) இப்பொழுது, இதைக் கவனியுங்கள். இது எவ்விதம் உள்ளது என்பதை நீங்கள் காணலாம். ஒன்றில் ஆட்டுக்குட்டியானவர் இங்கே அடையாளங்களின் மூலம் வார்த்தையில் சித்திரிப்பவை இங்கே வேறொன்றில் வெளிப்படையாக அறிவிக்கிறார். ஒன்றில் இங்கே என்ன நிகழும் என்பதைக் கூறுகின்றார். மற்றொன்றில் இங்கே அது நிகழுகின்றது. பாருங்கள்? இது பரிபூரண ரூபகாரப்படுத்துதலாயிருக்கிறது. இப்பொழுது, நாம் பரிசுத்த மத்தேயு 24-ம் அதிகாரத்தையும், வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போமாக. மத்தேயு 24-ம் அதிகாரத்தில் கூறப்பட்டவை உபத்திரவக் காலத்தில் சம்பவிக்கும் ஒன்று என்பதை வேத பண்டிதர் யாவருமே அறிவர். நாம் பார்ப்போம். அது அப்படியானால் இப்பொழுது நாம். அவ்வாறே ஆறாம் முத்திரையும் நியாயத்தீர்ப்பின் முத்திரையாயிருக்கிறது என்று நாம் அறிவோம். அது நியாயத்தீர்ப்பு முத்திரை என்பது முற்றிலும் சரியானதாகும். 52இப்பொழுது அந்திக்கிறிஸ்து குதிரைகள் மேல் சவாரி செய்வதை நாம் கண்டோம். பின்னர் சபை எடுக்கப்படுகின்றது. சபையின் காலம் முடிவடைந்து அதுமேலே செல்கின்றது. அதன் பின்பு உயிர்த்தியாகம் செய்த யூதர்களை நாம் பீடத்தின்கீழ் கண்டோம். இப்பொழுது நியாயத்தீர்ப்பு இங்கே, இந்த ஜனங்களின்மேல் விழுகிறது. இந்த உபத்திரகால நியாயத்தீர்ப்பின் மூலம் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் மீட்கப்படுகின்றனர். இவர்கள் யூதர்களே என்றும், புறஜாதிகள் அல்லவென்றும் நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்தேன். இவர்களுக்கும் மணவாட்டிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இது நிகழும்போது மணவாட்டி ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள் என்று நாம் கண்டோம். ஆகையால் இவர்களை வேறெங்கும் நீங்கள் பொருத்த முடியாது. மணவாட்டி மறுபடியும் 19ம் அதிகாரம் வரையில் திரும்பி வருகிறதில்லை. 53இப்பொழுது கவனியுங்கள். ஆறாம் முத்திரை வார்த்தையின் முத்திரையாகிய நியாயத்தீர்ப்பின் முத்திரையாயிருக்கிறது. இப்பொழுது, இங்கே நாம் பரிசுத்த மத்தேயு 24-ம் அதிகாரத்தை படிக்க ஆரம்பிப்போம். இப்பொழுது, நான் உங்களுக்கு ஒன்றை அளிக்க விரும்புகிறேன். அதைக் கண்டுபிடிக்க, நான் வேதத்தைப் பார்த்தேன். இப்பொழுது பரிசுத்த மத்தேயு 24-ம் அதிகாரம் 1 முதல் 3 வசனங்களைப் படிப்போம். இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (இப்பொழுது மூன்றாம் வசனம்). பின்பு அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள். 54இப்பொழுது, இம்மூன்று வசனங்களுடன் நாம் தற்பொழுது நிறுத்திக் கொள்வோம். இந்த மூன்று வசனங்களும் சரியாக கி.பி. 30ம் வருடம் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்தது. முதலிரண்டு வசனங்கள் கி.பி.30 ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதியன்று பகலில் நிறைவேறியது. மூன்றாம் வசனம் அதே நாள் சாயங்காலம் நிகந்தது. பாருங்கள்? அவர்கள் தேவாலயத்திற்கு வருகிறார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, “இது என்ன? அதுவென்ன? இந்த ஆலயத்தைப் பாருங்கள். எவ்வளவு பிரம்மாண்டமாயிருக்கிறது? அது அற்புதமாக இல்லையா?” என்றனர். அதற்கு அவரோ, “ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி அது இடிக்கப்பட்டுப்போகும்” என்றார். அப்பொழுது அவர் அந்த மலையின் மீது உட்கார்ந்தார். பாருங்கள், அங்கே, அங்கே அவர் பேச ஆரம்பிக்கின்றார்; அது பிற்பகலாயிருந்தது. ஆகவே அப்பொழுது அவர்கள் அங்கே அவரிடம், “சில காரியங்களைக் குறித்து நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர். 55அவருடைய சீஷராகிய யூதர்கள் இங்கே இங்கே அவரை மூன்று கேள்விகள் கேட்கின்றனர் என்பதைக் கவனிக்கவும். இப்பொழுது கவனியுங்கள். முதலாவதாக, முதலாவதாக “என்ன”“என்ன... இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? 'அதாவது ஒரு கல்லின்மேல் கல்லிராதபடி இடிக்கப்படுவது.'” “உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன?” இரண்டாம் கேள்வி. “உலகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன?” பாருங்கள்? அங்கே மூன்று கேள்விகள் உள்ளன. இப்பொழுது அநேகர் இம்மூன்று கேள்விகளையும் வேறோரு காலத்துடன் பொருத்தும் தவறைச் செய்கின்றனர். அவர் மூன்று கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். அவர்கள்... இப்பொழுது கவனியுங்கள் இது எவ்வளவு எவ்வளவு அழகாக இருக்கிறது. பாருங்கள்? மூன்றாவது வசனத்தின் கடைசி பகுதியைக் கவனியுங்கள். “அடையாளம் என்ன...” முதலாவதாக அவர்கள் அவரைத் தனியாக ஒலிவ மலைக்கு அழைத்தார்கள். முதல் கேள்வியாக. “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் என்று எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டனர். இரண்டாவது கேள்வி, “உமது வருகையின் அடையாளம் என்ன?”-மூன்றாவது கேள்வி. பாருங்கள்? அங்கே மூன்று வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டனர். இப்பொழுது நீங்கள் வேதத்தைத் திருப்பி இக்காரியங்களைக் குறித்து இயேசு எவ்விதம் கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள். 56ஓ! இது மிகவும் அழகாக உள்ளது. நான். அது என்னை .. நான்-நான்-நான்-அதைப் பெறுகிறேன்... நாம் அந்த இரவு அதற்கு எந்த வார்த்தை கூறினோம்? (சபையோர், “ஊக்குவிக்கப்படுதல்” என்கின்றனர்.-ஆசி.]வெளிப்பாட்டிலிருந்து வருகின்ற ஊக்குவிக்கப்படுதல். கவனியுங்கள். இப்பொழுது நாம் இந்த புத்தகத்தின் முத்திரைகளில் உள்ள முதலாம் முத்திரைக்கு திருப்புவோம். இந்த முதல் கேள்வியை முதல் முத்திரையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். 156 சபைக் காலங்களையும், மற்றவற்றையும் நாம் சரியாக ஒப்பிட்டது போல, இவ்விதம் ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு கேள்வியுடன் ஒத்துப் போகின்றதா என்று பார்ப்போம். அவ்விதம் அவை ஒத்துப்போனால், முத்திரையின் இரகசியங்கள் பூரணமாக நமக்கு வெளியாகிவிட்டன என்று அர்த்தம். கவனியுங்கள். “அவர் அவர்களுக்கு பதிலளித்தார்.” இப்பொழுது முதலாவதாக நாம் படிக்க இருப்பது. அவர் அவர் பதிலளிக்க ஆரம்பிக்கிறார். அதை இப்பொழுது நாம் முத்திரையுடன் ஒப்பிடப் போகிறோம். 57இப்பொழுது கவனியுங்கள். முதலாம் முத்திரை இப்பொழுது வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் 1 மற்றும் 2-ம் வசனங்களில் உள்ளது. இப்பொழுது நாம் வெளிப்படுத்தல் 6:1-2-ஐப் படிப்போம். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். இப்பொழுது நான்கு ஜீவங்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது. இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்க் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். இந்த நபர் யாரென்று நாம் பார்த்தோம்? [சபையோர், “அந்திக்கிறிஸ்து” என்கின்றனர்.—ஆசி.) அந்திக்கிறிஸ்து. இப்பொழுது மத்தேயு 24-ம் அதிகாரத்திற்கு வருவோம், 4மற்றும் 5-ம் வசனம். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் ஏனென்னில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 58அதைப் பாருங்கள்? அந்திக்கிறிஸ்து, அதுதான் உங்கள் முத்திரை. பாருங்கள்? பாருங்கள்? அவர் அதைக் குறித்து இங்கு பேசியுள்ளார். முத்திரை திறக்கப்படும்போது இங்கே அது வெளிப்படுகின்றது. அதுவே வெளிப்படுகின்றது, மிகவும் பரிபூரணமாகப் பொருந்துகின்றது. இப்பொழுது இரண்டாம் முத்திரை, மத்தேயு 24:6, வெளிப்படுத்தல் 6:3-4. மத்தேயு 24:6 ஐ இப்பொழுது கவனிப்போம். அது என்ன சொல்லுகிறதென்று இப்பொழுது நாம் பார்ப்போம். யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்: இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே: ஆனாலும் முடிவு உடனே வராது. சரி. இரண்டாம் முத்திரையை எடுத்துக் கொள்வோம் வெளிப்படுத்தல் 6:3-4. அவர் என்ன சொல்கிறார் என்பதை இப்பொழுது கவனியுங்கள். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்து போடும்படியான் அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 59பரிபூரணமாக, சரியாகப் பொருந்துகின்றது. ஓ! வேத வாக்கியங்களுக்கு வேத வாக்கியங்களே பதிலுரைப்பதை நான் விரும்புகிறேன். நீங்களும் அதை விரும்புகிறீர்கள் அல்லவா? (சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] பரிசுத்த ஆவியானவர் தாமே இவையாவையும் எழுதினார். ஆனால் அவர் அதை வெளிப்படுத்தித்தரக் கூடியவராயிருக்கிறார். இப்பொழுது நாம் மூன்றாம் முத்திரையைக் கவனிப்போம். அப்பொழுது இது பஞ்சமாய் உள்ளது. இப்பொழுது மத்தேயு 24:78. நாம் மத்தேயுவில் 7:8 வசனங்களை எடுப்போமாக. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜயமும் எழும்பும்; பஞ்சங்களும் கொள்ளிய நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். பாருங்கள், நாம் இப்பொழுது சரியாக வந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம். இப்பொழுது நாம் மூன்றாவது முத்திரையை திறக்கப்போகிறோம். அது வெளிப்படுத்தல் 6:5-6ல் காணப்படுகின்றது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனாது: நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன். அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தாராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். பஞ்சம்! பாருங்கள், மூன்றாம் முத்திரையில் இயேசு சொன்னதே கூறப்பட்டுள்ளது. சரி. நான்காம் முத்திரை -“கொள்ளை நோய்களும்” “மரணமும்”. மத்தேயு 24. நாம் 8வது வசனத்தை , 7வது, 8வது வசனங்களைப் படிப்போம். அது நான்காம் முத்திரையின் பேரில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் இங்கு குறித்து வைத்திருக்கிறேன். சரி. 60இப்பொழுது, நான் இங்கு என்ன வாஞ்சித்தேன்? நான் ஏதாவது தவறாக வாசித்தேனா? ஆம். நான் அதைக் குறித்து வைத்துள்ளேன். ஆம். நாம் அதை அங்கே காணலாம். இப்பொழுது நாம் அதைத் தொடர்ந்து வாசிக்கப்போகிறோம். இப்பொழுது நாம் பார்ப்போம். சரி ஐயா. இப்பொழுது. நான்காவது முத்திரையைக் குறித்து நாம் 7ம் வசனத்தில் தொடங்கி வாசிப்போம். வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் 7-8 வசனங்களில் உள்ளது. இப்பொழுது. நாம் மத்தேயு 24:7,8 வசனங்களைப் பார்ப்போம். சரி. இப்பொழுது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். நாம் அங்கே வாசித்தபடி இப்பொழுது நான்காவது முத்திரை... நான்காம் முத்திரை 7, 8-ல் துவங்கியது. இப்பொழுது இது மற்றது... அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்;... 61இப்பொழுது பொறுத்துக் கொள்ளுங்கள். நான் இதைத் தவறாக எழுதி வைத்துள்ளேன். ஆம், ஆம், இப்பொழுது சற்று ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது 7-ம் 8-ம் வசனங்கள். இப்பொழுது மத்தேயு 24:7-8 வசனங்களை நாம் பார்ப்போம். நாம் இப்பொழுது பார்ப்போம். நாம் அதைப் புரிந்து கொள்ளலாம், அது மூன்றாவது முத்திரை அல்லவா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.- ஆசி.]மத்தேயு 24:7-8 வசனங்கள். என்னே மன்னிக்கவும். இப்பொழுது அது மழையைக் குறித்து... அல்லது பஞ்சம் என்பதைத் திறந்து காண்பிக்கிறது. சரி. இப்பொழுது, “பஞ்சம்” “மரணம்” ஆம். ஐயா, நாம் இப்பொழுது 7-8 வசனங்களுக்குச் செல்கிறோம். இப்பொழுது அது நான்காவது முத்திரை எங்குள்ளது என்று நாம் பார்ப்போம். “அவர் நான்காம்நான்காம் முத்திரை...” ஆம், அது மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்பவன், “மரணம்” ஆகும். பாருங்கள். | நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. 62இப்பொழுது, பாருங்கள்-அது “மரணம்” ஆகும். இப்பொழுது ஐந்தாம் முத்திரை -மத்தேயு 24:9-13. இதைச் சரியாகக் குறித்து வைத்துள்ளேனா என்று நான் மறுபடியும் பார்க்கட்டும். பாருங்கள்? அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: (அங்கே பாருங்கள்) என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். இப்பொழுது நாம் ஐந்தாவது முத்திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், சென்ற இரவு நாம் ஐந்தாம் முத்திரையைக் குறித்து சிந்தித்தோம். “அவர்கள் உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்.” ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பார்கள் போன்றவை. 63இப்பொழுது ஐந்தாம் முத்திரையைக் கவனியுங்கள். வெளிப்படுத்தல் 6:9-11. இப்பொழுது அந்த ஒன்றை நாம் வெளிப்படுத்தல் 6:9 to 11-ல் பார்ப்போம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 64இப்பொழுது ஐந்தம் முத்திரையில், கொலை செய்யப்பட்டுவர்களை நாம் காண்கிறோம், நாம் இங்கே காண்கிறோம். மத்தேயு 24:9-13 வசனங்கள் அதையே உரைக்கின்றன. அது கொலை செய்யப்பட்டவர்கள் என்பதையும் கூட நாம் கண்டோம். “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்,” போன்றவை. பாருங்கள், அதே முத்திரை திறக்கப்படுகின்றது. இப்பொழுது நாம் ஆறாம் முத்திரைக்கு வருவோம். அதையே நாம் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மத்தேயு 24:2930. 24-ம் அதிகாரம் 29 மற்றும் 30-ம் வசனங்களைப் பார்ப்போம். இதோ நாம் படிப்போம். இப்பொழுது, இதனுடன் நாம் வெளிப்படுத்தல் 6:12-17ஐயும் படிக்கப் போகிறோம். இதைத் தான் நாம் ஆரம்பத்தில் படித்தோம்: கேளுங்கள். இதுதான் இயேசு மத்தேயு 24:29-30 வசனங்களில் கூறியுள்ளார். அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே... என்ன? அப்பொழுது... இந்த உபத்திரவ காலம், இந்த தற்காலிக உபத்திரவ காலம் (amateur tribulation) இங்கே அவர்கள் அதனுள் பிரவேசித்தனர். பாருங்கள். சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 65இப்பொழுது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆறாம் முத்திரையை இங்கே வெளிப்படுத்துதலில் படிப்போம். அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்: இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; (பாருங்கள்?) சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் (வானங்களும்) சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்று போயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும் சேனைத் தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும், கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி; நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக் கூடும் என்றார்கள். 66எவ்வளவு பரிபூரணமாகப் பொருந்துகின்றது. இயேசு மத்தேயு 24:29-ல் என்ன சொன்னார் என்பதை திரும்பிப் பார்த்து கவனியுங்கள். கவனியுங்கள். எய்க்மனின் விவகாரம் போன்றவை. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும். சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். இப்பொழுது கவனியுங்கள்... அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். 67பாருங்கள். இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத்தில் கூறியதும், ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது இங்கே வெளிப்படுத்துபவன் கண்டதும் ஒன்றாகவே இருக்கிறது. இயேசு உபத்திரவ காலத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்.-ஆசி.] புரிகிறதா? அவர்கள் இயேசுவை நோக்கி, இவைகள் எப்பொழுதாவது சம்பவிக்குமென்றும், தேவலாயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதவடி எப்பொழுது இடிக்கப்படுமென்றும் கேட்கின்றனர். அதற்கு அவர் விடையளித்தார். அடுத்தபடியாக அவர் கேட்பார். அங்கே இரத்த சாட்சிகளின் காலம் வருகின்றது. இது நடக்கும்போது, அந்திக்கிறிஸ்து எப்பொழுது எழும்புவானென்றும், அவன் எப்பொழுது தேவாலயத்தில் உட்காருவானென்றும் கூறினார். 68தானியேல் புஸ்தகத்தில், வரப்போகும் அதிபதியைக் குறித்து சொல்லப்பட்டிருக்கும் பாகத்தை நாம் இப்பொழுது படித்தால் நலமாயிருக்கும். வேதத்தைப் படித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் அது தெரியும், அவன் என்ன செய்வான்? அவன் அன்றாட பலிகளை எடுத்துப் போடுவான். அச்சமயத்தில் என்னவெல்லாம் நடைபெறும் என்பது அதில் எழுதப்பட்டிருக்கிறது... இயேசுங்கூட அதை வலியுறுத்தியுள்ளார். அவர் “பாழாக்கும் அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது...” என்று கூறியுள்ளார். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்.- ஆசி.] அது என்ன? தேவாலயம் சுட்டெரிக்கப்பட்ட பின்னர் அந்தவிடத்தில் ஒமரின் மசூதி நின்றது. அவர் மேலும், “யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருகக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களே எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். ஏனெனில் மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்று கூறினார். நீங்கள் பாருங்கள்? இவையாவும் நிறைவேறும் ஆறாம் முத்திரை திறக்கப்படும் இச்சமயத்தில் இது வரையிலும் அசைந்து வந்த இது சரியென நிரூபிக்கப்படுகின்றது. 69இயேசு ஏழாம் முத்திரையைக் குறித்த போதகத்தை ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நாளை இரவு ஏழாம் முத்திரையைப் பற்றி சிந்திக்கப் போகிறோம். அது இங்கேயும் இல்லை. கவனியுங்கள், அதன்பின் அவர் உடனே உவமைகளைச் சொல்லத் தொடங்கி விடுகிறார். அவ்வாறே யோவானும், ஏழாம் முத்திரையை விவரிக்காமல் விட்டுவிடுகிறான். ஏழாவது, கடைசியான ஏழாவது முத்திரை ஒரு மகத்தான காரியமாய் இருக்கும். பாருங்கள்? அது இங்கு எழுதப்படவும் இல்லை. இயேசுவும் யோவானும், ஏழாவது முத்திரையை விட்டு விட்டனர். “பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிற்று” என்றும் மாத்திரம் அவன் கூறுகிறான். ஆனால் இயேசு அதைக் குறித்து ஒரு வார்த்தையுடங்கூட சொல்லவில்லை. இப்பொழுது கவனியுங்கள். வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில், ஆறாம் முத்திரை உடைக்கப்படுவதைக் குறித்துச் சொல்லப் பட்டிருக்கிறது. ஐந்தாம் முத்திரையைப் போன்றே ஆறாம் முத்திரை உடைக்கப்படும் போது அதை அறிவிக்க அங்கு ஒரு ஜீவன் இல்லை. ஏன்? இவை சுவிசேஷ காலம் முடிவு பெற்ற பின்னர், உபத்திரவ காலத்தில் சம்பவிக்கின்றன. இந்த ஆறாம் முத்திரை உபத்திரவ காலத்தை வர்ணிக்கிறது. மணவாட்டி அப்பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள். பாருங்கள்? அதை அறிவிக்க ஒரு ஜீவன் அங்கில்லை . அது வெறும்... இப்பொழுது அச்சமயம் தேவன் சபையுடன் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அது அப்பொழுது எடுக்கப்பட்டிருக்கும். 70அவர் அப்பொழுது இஸ்ரவேலருடன் ஈடுபடுகிறார். பாருங்கள். இது மறுபக்கத்தில் நடைபெறுகிறது. அச்சமயம் வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்க்கதரிசிகளின் மூலம் பிரசங்கிக்கப்படும் ராஜ்யத்தின் செய்தியை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இஸ்ரவேல் ஒரு தேசம்- தேவனுடைய ஊழியக்காரர் (Servants) கொண்ட தேசம். ஆகவே, அந்த வேளையிலே-இஸ்ரவேலர் உள்ளே கொண்டு வரப்படும்போது. அது ஒரு தேசிய விவகாரமாயிருக்கும். இஸ்ரவேல், ராஜ்யத்தின் காலத்தில், தாவீது. தாவீதின் குமாரன் சிங்காசனத்தில் உட்கார்ந்து கொண்டு, ராஜ்யத்தின் காலத்தில் ஆளுகை செய்வார். எனவேதான் அந்த ஸ்திரீ, “தாவீதின் குமாரனே” என்று இயேசுவைக் கூப்பிட்டாள், தாவீதுக்கு அவர் தாவீதின் குமாரனுமாவார், தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி அவன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவதாக தேவன் தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தார். அது நித்தியமான சிங்காசனமாயிருக்கும், பாருங்கள்? அதற்கு முடிவிராது. அதற்கு முன்னடையாளமாகத் திகழவே சாலமோன் ஒரு தேவாலயத்தைக் கட்டினான். ஆகவே இயேசு இங்கே அவர்களிடம் “அது ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி. அழிக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார். ஆனால் இங்கே அவர் அவர்களிடம் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கின்றார் என்றால் என்ன.. அவர் திரும்ப வரப்போகிறார். நீர் எப்பொழுது வரப் போகிறீர்?' 71“நான் வரும் முன்பு இவை யாவும் சம்பவிக்கும்.” இப்பொழுது அவைகள் இங்கு இருக்கின்றன. நாம் இப்பொழுது உபத்திரவ காலத்தின் நேரத்தில் இருக்கிறோம். ஞாபகங் கொள்ளுங்கள். பூமியில் ராஜ்யபாரம் நிறுவப்படும் போது... இப்பொழுது நான் கூறப்போவது உங்களுக்கு சற்று அதிர்ச்சியையளிக்கலாம். இதைக் குறித்து உங்களுக்கு உங்களுக்கு கேள்வி ஏதாவது இருக்குமானால் இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திராவிட்டால் அதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஆயிர வருஷ அரசாட்சியின்போது, இஸ்ரவேல் ஒரு நாடாக இருக்கும். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் ஒரு நாடாக அப்பொழுது இருக்கும். ஆனால் மணவாட்டியோ அரண்மனையில் இருப்பாள். அவள் அப்பொழுது ஒரு ராணியாக இருப்பாள். அவளுக்குக் கலியாணம் முடிந்திருக்கும். பூமியிலுள்ள அனைவரும் எருசலேம் பட்டிணத்திற்குத் தங்கள் மகிமையைக் கொண்டு வருவார்கள். “அதன் கதவுகள் இரவில் அடைக்கப்படாது. ஏனெனில் இராக்காலம் என்பது அப்பொழுது இருக்காது.” பாருங்கள்? கதவுகள் எப்பொதும் திறவுண்டிருக்கும். “பூமியிலுள்ள இராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் இப்பட்டிணத்திற்குள் கொண்டு வருவார்கள்.” வெளிப்படுத்தல் 22-ம் அதிகாரம். ஆனால் மணவாட்டியோ ஆட்டுக்குட்டியானவருடன் அங்கே இருப்பாள். ஓ! என்னே! இது உங்களுக்குப் புரிகின்றதா? மணவாட்டி திராட்சை தோட்டத்தில் பணிபுரியமாட்டாள். இல்லை ஐயா. அவள் மணவாட்டியாயிருக்கிறாள். அவள் ராஜாவுக்கு ராணியாக இருக்கிறாள். அங்கே வெளியில் மற்றவர்கள் தான் அப்பொழுது வேலை செய்வார்கள். அந்த தேசம் மணவாட்டியல்ல. ஆமென். சரி. 72இப்பொழுது இந்த செய்தியாளர்களை, வெளிப்படுத்தல்... 12-ல் கூறப்பட்டுள்ள இந்த செய்தியாளர்கள் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளை கவனியுங்கள். அவர்கள் “பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது” என்று பிரசங்கம் செய்வார்கள். பாருங்கள்? பரலோக ராஜ்யமானது நிறுவப்பட இருக்கின்றது. அதுதான் தம் ஜனங்களாகிய யூதர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தானியேலின் எழுபதாம் வாரத்தின் கடைசி மூன்றரை வருட காலமாகும். தானியேலின் எழுபதாம் வாரத்தின் கடை பாகம் இதுவே அன்று நிரூபிக்க வேண்டுமானாயின்...அதைக் குறித்த ஒரு கேள்விக்கு நாளை நான் பதிலுரைப்பேன். பாருங்கள்? இப்பொழுது எழுபது வாரங்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. அது ஏழு வருடங்களாகும். ஏழு வாரங்களின் மத்தியில் மேசியா சங்கரிக்கப்படுவார். அவர் மூன்றரை வருட காலம் தீர்க்கதரிசனம் உரைத்து ஜனங்களுக்காக பலி செலுத்தப்படுவார். இன்னும் இஸ்ரவேலுக்கு மூன்றரை வருட கால நியமிக்கப்பட்டுள்ளது. மேசியா சங்கரிக்கப்படும்போது, யூதர்கள் குருடாக்கப்பட்டபடியால் அவரை மேசியாவென்று அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆகவே அப்பொழுது மேசியா சங்கரிக்கப்பட்ட பின்னர், சுவிசேஷமும் கிருபையின் காலமும் புறஜாதிகளுக்கு வருகின்றது. அப்பொழுது தேவன் இங்கொருவர், அங்கொருவராக மற்றும் இங்கொருவர் அங்கொருவராக ஒவ்வொரு காலத்திலும் தெரிந்தெடுத்து, அந்தந்த காலத்திற்கென்று நியமிக்கப்பட்ட செய்தியாளர்களின் கீழ் அவர்களைக் கொண்டு வருகிறார். இங்கொருவர் அங்கொருவரோ மற்றும் இங்கொருவர் அங்கொருவராக அவர்களை செய்தியாளர்களின்கீழ் கொண்டு வருகிறார். 73ஆகவே முதலாம் செய்தியாளனை அவர் அனுப்பினார். அவன் பிரசங்கத்தான் அப்பொழுது ஒரு எக்காளம் முழங்கினது, அதைப் பற்றி சற்று கழித்து சிந்திப்போம். ஆகவே இப்பொழுது, எக்காளத்தொனி, போரை அறிவித்தது. எக்காளம் எப்பொழுதுமே யுத்தத்திற்கு அறிகுறியாயுள்ளது. அந்தச் செய்தியாளன், அந்த மணி நேரத்திற்குரிய செய்தியாளன், அந்த தூதன் பூமியின் மேல் வந்தான். லூத்தரைப் போன்று, நாம் பேசிய எல்லாச் செய்தியாளர்களைப் போன்று அவன் என்ன செய்கிறான்? அவன் வந்தவுடன் ஒரு முத்திரை திறக்கப்பட்டு வெளிப்படுகிறது. எக்காளம் தொனிக்கப்பட்டு போர் அறிவிக்கப்படுகிறது. பின்னர் அந்தச் செய்தியாளன் மரிக்கிறான். அவன் செய்தியை ஏற்றுக்கொண்டவர்களை அவன் முத்தரிக்கிறான். அவர்கள் உள்ளே கொண்டுவரப்படுகின்றனர். அதைப் புறக்கணித்தவர் மீது வாதை விழுகின்றது. பாருங்கள்? அதன்பின்பு அவர்கள் ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். நாம் இவைகளைக் குறித்து ஏற்கனவே பார்த்தோம். பின்னர் வேறொரு சபையின் காலத்தில், வேறொரு வல்லமை அந்திக்கிறிஸ்து அவனுடைய ஊழியத்துடன் புறப்பட்டு வரும்போது, தேவன் தமது ஊழியத்துடன் அங்கு வருகிறார். பாருங்கள், அந்தி என்றால் “எதிராக” என்று பொருள்படும். இவ்விரண்டு வல்லமைகளும் ஒன்றாகச் (Side by Side) சென்று கொண்டிருக்கின்றன. 74நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். காயீன் பூமிக்கு வந்தபோது, ஆபேலும் பூமிக்கு வந்தான். நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபோது, யூதாசும் இங்கு வந்தான். கிறிஸ்து பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஏறக்குறைய அதே சமயத்தில் யூதாசும் பூமியிலிருந்து அகன்றான். பரிசுத்த ஆவி சபையின் மேல் விழுந்த அதே சமயத்தில்தான் அந்திக்கிறிஸ்துவின் ஆவியும் விழுந்தது. இக்கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அந்திக்கிறிஸ்து அரசியல் போன்றவைகளின் மூலமாக தன் உண்மையான தன்மையைக் காண்பிக்கிறான். அந்திக்கிறிஸ்து முழுவதுமாக கிரியை செய்யும் இச்சமயத்தில் தேவனும் முழுவதுமாக கிரியை செய்து நம்மை மீட்டுக் கொள்கிறார். பாருங்கள், இவைகள் சரியாய் ஒன்றாகச் செல்வதைக் கவனியுங்கள். இவ்விரண்டும் இணையாகச் சென்று கொண்டேயிருக்கின்றன. காயீனும் ஆபேலும், பாருங்கள், நோவாவின் பேழையில் காகமும், புறாவும்; யூதாசும்! இப்படி தொடர்ச்சியாக சென்று கொண்டேயிருக்கிறது. இப்படியாக... 75இங்கே யோவாப் இஸ்ரவேல் இரண்டும் இருக்கின்றன. மோவாப் ஒரு அஞ்ஞான தேசமல்ல. இல்லை, ஐயா! இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்தின அதே பலியையே அவர்களும் செலுத்தினர். ஒரே தேவனுக்கு இருவரும் ஜெபங்களை ஏறெடுத்தனர். அது முற்றிலும் சரியானதாகும். லோத்தின் குமாரத்திகளில் ஒருவர், அவள் தகப்பனாரின் மூலம் பெற்ற குமாரன் தான் மோவாப் என்பவள். அவன் மூலம் மோவாபிய சந்ததி, தேசம் உண்டானது. மீட்கப்பட்ட அவர்களுடைய சகோதரரான இஸ்ரவேலரை அவர்கள் கண்டபோது.. மோவாபியர் அடிப்படை தத்துவத்தைக் கொண்டவர்கள் (Fundamentalists)-அவர்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருந்தனர். ஆனால் இஸ்ரவேலரோ ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை. அவர்கள் சென்றவிடமெல்லாம் கூடாரங்களில் தங்கியிருந்தனர். ஆனால் மோவாபியருக்கோ கெளரவம் வாய்ந்தவர்களும், ராஜாக்களும் இருந்தனர். ஒரு ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகிய பிலேயாமும் அவர்களுக்கு இருந்தான். அவர்கள் இதையெல்லாம் பெற்றிருந்தனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதற்கென பிரயாணம் செய்த அவர்கள் சகோதரராகிய இஸ்ரவேலரை அவர்கள் சபிக்க முனைந்தனர். இஸ்ரவேலர் மோவாபியரிடம், “உங்கள் தேசத்தின் வழியாகப் பயணம் செய்ய எங்களை அனுமதியுங்கள். எங்கள் மாடுகள் தண்ணீர் குடித்தாலும், புல்லைத் தின்றாலும் அதற்குரிய கிரயத்தை நாங்கள் செலுத்திவிடுவோம்.” என்றார். மோவாபியரோ, “இல்லை . இவ்வித எழுப்புதல் கூட்டங்கள் இங்கு நடத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம்; அது உண்மை . இங்கே எங்களைச் சுற்றி அப்படிப்பட்டவைகள் நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்றனர். 76மேலும் அவர்கள் என்ன செய்தனர் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் யேசபேல் உருவில் வந்து, கள்ளத் தீர்க்கதரிசியாகிய பிலேயாமின் மூலம், தேவனுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேலரை பாவத்தில் விழிந்திடச் செய்தனர். இஸ்ரவேலர் மோவாபிய பெண்களை மணந்ததன் மூலம் விபச்சாரம் செய்தனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிப்பதற்கென இக்காலத்தில் பிரயாணம் செய்யும் நம்மையும் சாத்தான் அவ்வாறே பாவத்தில் விழ்ந்திடச் செய்கிறான். அவன் என்ன செய்தான்? கள்ளத் தீர்க்கதரிசி பிராடெஸ்டெண்ட் சபைகள் அனைத்தையும் வரவழைத்து விவாகம் செய்து ஸ்தாபனங்களை உண்டாக்கினான். மோவாபியரின் காலத்தில் நடந்ததே மீண்டும் நடந்தது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி.] ஆனால் அந்த பழைய சிறிய இஸ்ரவேலரோ அதை கடந்து சென்றனர். அவள் வனாந்தரத்தில் அநேக வருடங்கள் கழித்தாள். போராட்டத்தில் ஈடுபட்ட முதியோர் அனைவரும் மரிக்க வேண்டியதாயிருந்தது. ஆயினும் அவள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தாள். ஆம். ஆம். யோர்தானைக் கடக்கும் முன்பு அவர்கள் அணிவகுத்து அவர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் கோர்த்துக் கொண்டு செல்வதைக் கவனியுங்கள். ஹா ஹா! அதை நான் மிகவும் விரும்புகிறேன். இப்பொழுது நாம் இங்கேயே, இப்பொழுதே அந்தக் காலத்தில் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம். கவனியுங்கள். 77தானியேலின் எழுபது வாரங்களில் அடங்கியுள்ள மூன்றரை வருட காலத்தைப் பற்றி (நான் கூறினேன்.) நாம் அதைக் கண்டறிந்தோம். அதை இன்னும் நான் விவரிக்க விரும்புகிறேன். ஏனெனில் இங்குள்ள சிலர் அதை நன்றாகக் கவனிக்கின்றனர். வேத போதகன் என்ற முறையில் நான் நான் இதனைத் தெளிவாக்க விரும்புகிறேன். அந்த எழுபது வாரங்கள் வருவதைக் கவனியுங்கள். தானியேல் யூதர்களின் முடிவில் அந்த நேரமானது வருவதை தரிசனத்தில் காண்கிறான். எழுபது வாரங்கள் நியமிக்கப்பட்டுள்ளதென்றும், அந்த ஏழாவது வாரத்தினில், அதன் மத்தியில் மேசியா பலியாக சங்கரிக்கப்படுவாரென்றும் அவன் கூறினான். அவன் கூறியவாரே அது நிகழ்ந்தது. அதன்பின்பு தேவன் புறஜாதிகளுடன் தொடர்புகொண்டு அவருடைய நாமத்திற்கென்று ஒரு கூட்ட ஜனத்தைத் தெரிந்தெடுக்கிறார். அது முடிவு பெற்றவுடன் புறஜாதி சபை மணவாட்டி மேலே எடுக்கப்படுகிறாள். ஆகவே அவர் அதைச் செய்தபோது, அந்த புத்தியில்லாத கன்னிகை, சபையானது. மணவாட்டி மேலே சென்றுவிட்டாள். சபையானது புறம்பான இருளில் தள்ளப்படுகின்றது. “அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்”. அதே சமயத்தில் ஜனங்களின் மேல் உபத்திரவம் விழுகின்றது. 78உபத்திரவம் அவ்வாறு விழும்போது, வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர்களிடம் வருகின்றனர். அவர்கள் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் பிரசங்கிக்கின்றனர். பாருங்கள்? ஒரு மாதத்தில் முப்பது நாட்கள் என்னும் உண்மையான கணக்கின்படி அது மூன்றரை வருட காலமாகும். அதுதான் தானியேலின் எழுபதாம் வாரத்தின் கடைசி பாகம், எழுபதாவது வாரத்தின் கடைசி பாகம். பாருங்கள்? தேவன் இப்பொழுது இஸ்ரவேல் ஜனங்களுடன் ஈடுபடுவதில்லை . இல்லை ஐயா. நமது சபையைச் சேர்ந்த ஒரு விலையேறப்பெற்ற அருமை சகோதரன் என்னிடம், “நான் இஸ்ரவேல் நாட்டுக்குச் சென்று பிரசங்கிக்க விரும்புகிறேன். அங்கு எழுப்புதல் உண்டாயிருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்றார். ஒருவர் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் இஸ்ரவேல் நாட்டிற்கு இப்பொழுது செல்ல வேண்டும். அவர்கள் சத்தியத்தை இப்பொழுது புரிந்து கொள்கின்றனர்” என்றார், பாருங்கள், நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நான் அங்கு நின்று யோசித்தேன்... அந்த யூதர்கள், “நான்... நல்லது இது, இயேசு - மேசியாவாயிருப்பாரானால், தீர்க்கதரிசியின் அடையாளத்தை அவர் செய்ய நான் காண வேண்டும். எங்கள் தீர்க்கதரிசிகளை நாங்கள் விசுவாசிக்கின்றோம். ஏனெனில் அவர்கள் அவ்வாறுதான் இருக்க வேண்டும்” என்று கூறினர். “என்ன ஒரு அமைப்பு!” “இதோ நான் போவேன்” என்றே நானும் எண்ணினேன். நான் கெய்ரோவுக்குச் சென்று, அங்கிருந்து இஸ்ரவேல் நாட்டுக்குச் செல்ல பயணச் சீட்டை வாங்கினேன். ஆகவே, “நான், நான் அங்கே அவர்கள் கேட்பார்களா என்று பார்ப்பேன், அவர்கள் தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கண்டால், இயேசுவை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்க்கலாம்,” என்று நினைத்தேன். ஸ்டாக்ஹோம் சபையைச் சேர்ந்த லூயி பெட்ரூஸ் என்பவர் யூதர்களுக்கு லட்சக்கணக்கான வேதாகமப் பிரதிகளை அனுப்பி வைத்தார். 79அந்த யூதர்கள் அங்கே வருகின்றனர். நீங்கள் அந்த படதைப் பார்த்திருக்கிறீர்கள். அதை நீங்கள் “நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்” என்னும் படக்காட்சியில் கண்டிருப்பீர்கள், நான் அதை வைத்துள்ளேன். உலகெங்கிலுமுள்ள யூதர்கள் புறப்பட்டு இஸ்ரவேல் நாட்டில் இப்பொழுது ஒன்று சேருகின்றனர். தளபதி ஆலன்பி (General Allenby) என்பவரின் காலத்தில் இங்கிலாந்து இஸ்ரவேல் நாட்டிற்குள் படையெடுத்தபோது, அதைக் கைப்பற்றியிருந்த துருக்கியர் சரணடைந்தனர். உலக மகா யுத்தத்தின் வீழ்ச்சி என்னும் தலைப்பு கொண்ட புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் அது காணப்படுகின்றது என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அந்நாட்டை இஸ்ரவேலருக்கு அளித்தது. இஸ்ரவேல் இப்பொழுது ஒரு தேசமாக வளர்ந்துக் கொண்டு வருகிறது. இப்பொழுது அது ஒரு முழுமையான தேசமாக உள்ளது. அவளுக்கு சொந்த நாணயம், நோட்டுகள், கொடி, இராணுவம் இவ்வனைத்தும் உள்ளன. பாருங்கள்? 80இந்த யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டிற்கு திரும்பி வருகிறபோது... முதலாவது அவர்கள் ஈரானிற்கு சென்று, அங்கே அவர்களிடத்தில் கேட்டனர். அப்பொழுது அவர்கள் அவர்களிடத்தில் கூறினது என்னவென்றால்... தாங்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். தங்களுடைய இடம் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும், அவர்களுடைய சொந்த தேசத்திற்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றனர். பாலஸ்தீனா தேசம், அங்கு தான் அவர்கள் இருக்க வேண்டிய இடமாகும். ஆகவே, இஸ்ரவேலர் தங்கள் தேசத்தை விட்டு வெளியே இருக்கும்வரை, தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாயிருக்கின்றனர் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். ஆபிரகாமைப் போல, அது அவனுக்கு வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டது. அப்பொழுது... இஸ்ரவேலர் ஆகாய விமானத்தில் செல்ல மறுத்தனர். அவர்கள் அதைப் போன்ற ஒன்றைக் கண்டதேயில்லை. ஒரு வயோதிக ரபீ, “இஸ்ரவேல் ஜனங்கள் தாய் நாட்டிற்குத் திரும்பும்போது, கழுகின் செட்டைகளில் சுமந்து கொண்டு செல்லப்படுவர் என்று எங்கள் தீர்க்கதரிசி கூறியுள்ளர்.” என்று கூறினாராம்-அதுதான் ஆகாய விமானம். 81இப்பொழுது அந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. அத்திமரம் துளிர் விட்டு வளரத் தொடங்கிவிட்டது. ஆமென்! தாவீதின் ஆறுமுனை கொண்ட கொடி மறுபடியும் அந்நாட்டில் பறக்கின்றது. “புறஜாதியின் நாட்கள் என்னப்படுகின்றன. அது அழிவால் நிரம்பி உள்ளது” உபத்திரவ காலம் மிகவும் அருகாமையில் உள்ளது. ஆகவே சரியாக இங்கே முத்திரைகள் உடைக்கப்படுகின்றன. சபையும் பறந்து செல்ல ஆயத்தமாயிருக்கிறது. அவள் சென்றவுடன், உபத்திரவ காலம் தொடங்கும். அப்பொழுது தேவன் கீழே வந்து அங்கிருந்து ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை வெளியே இழுத்துக் கொள்வார். ஆமென். ஓ, அது பரிபூரணமாயுள்ளதே!' முத்திரைகள் திறக்கப்படுவதன் மூலம் இது எந்தக் காலத்தில் சம்பவிக்கின்றது என்பதை அறியலாம். இப்பொழுது இது ஜனங்களுக்கு அளிக்கப்படும் கடைசி மூன்றரை வருட காலமாகும். நீங்கள் கவனிப்பீர்களானால் இந்தக் கடைசி மூன்றரை வருட காலத்தில் தேவன் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களை அழைப்பார். 82பாருங்கள், அவர் இன்னமும் அவர்களுடன் ஈடுபடத் தொடங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இப்பொழுது இல்லை. தீர்க்கதரிசியைத் தவிர வேறு யாரையும் அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. ஆதலால் அவர்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்கப்போகிறார்கள், ஆம் ஐயா, அவ்வளவுதான், அவர்கள் அதனோடு தரித்திருக்க வேண்டும் என்று தேவன் தொடக்கத்திலேயே அவர்களுக்குக் கூறியுள்ளார். மோசே, “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை உங்கள் நடுவில் எழும்பப் பண்ணுவார். அவருக்கு நீங்கள் செவி கொடுப்பீர்களாக” என்று சொல்லியிருக்கிறான். “தீர்க்கதரிசிக்கு செவி கொடாதவன் ஜனங்களின் மத்தியிலிருந்து அறுப்புண்டு போவான்.” அது உண்மை . ஆகவே நீங்கள், பாருங்கள், அவர்கள் கண்கள் குருடாக்கப்படாமலிருந்தால், அவரை எளிதில் கண்டு கொண்டிருப்பார்கள், அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தால் அவர்கள்... சாத்தானுக்கு இடங்கொடுத்து “அவன் குறி சொல்லுகிறவன், பெயல்செபூல் என்றும், அவனுடைய இரத்தப் பழி எங்கள் மேல் சுமரட்டும். அவன் ஒன்றுமில்லை ” என்றும் கூறினர். பாருங்கள்? 83பாவம், அந்த ஜனங்கள் குருடாக்கப்பட்டன. ஆகவேதான் அவர்கள் ஏய்க்மன் போன்றவரால் கொல்லப்பட்டனர். உட்பிரவேசிக்க அவர்களுக்கு உரிமையிருந்து. ஆனால் நம்மைத் தெரிந்து கொள்வதற்கென அவர்கள் சொந்த பிதா அவர்களைக் குருடாக்க வேண்டியதாயிற்று. இது வேதத்தில் காணப்படும் மிகவும் பரிதாபமான ஒரு செயலாகும். யூதர்கள் தங்கள் சொந்த பிதாவின் இரத்தம் சிந்தப்பட வேண்டுமென்று கூக்குரலிடும் காட்சியைப் பாவனை செய்து பாருங்கள்! அவர்களுடைய சொந்த தேவன் இரத்தம் சிந்தினவராய் அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறார். பாருங்கள், “அங்கே அவர்கள் அவரைச் சிலுவையிலறைந்தார்கள்” என்று வேதம் கூறுகின்றது. அவை மிகவும் முக்கியம் வாய்ந்த நான்கு வார்த்தைகளாம். பாருங்கள், “அங்கே” உலகிலேயே மிகவும் புனிதமான பட்டிணமாகிய எருசலேமில், “அவர்கள்”-உலகிலேயே மிகவும் பரிசுத்தமான ஜனங்கள், “அவரை”-உலகிலேயே மிகவும் முக்கியம் வாய்ந்த ஒருவரை “சிலுவையிலறைந்தார்கள்”. உலகிலேயே மிகவும் கொடூரமான மரணம். பாருங்கள்? ஏன்? பக்தியுள்ள அந்த ஜனங்கள் உலகிலேயே மிகப் பெரிய மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் உலகில் காணப்படும் ஒரே ஒரு உண்மையான மார்க்கத்தைச் சார்ந்தவர்கள், வருவார் என்று வேதம் அறிவித்திருந்த அதே தேவனைச் சிலுவையிலறைந்தனர். அவர்கள் ஏன் அதைக் காணவில்லை ? அவர்கள் காணாதவாறு தேவன் அவர்களைக் குருடாக்கினாரென்று வேதம் கூறுகின்றது. அவர்கள்... “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும்?” என்று இயேசு அவர்களைக் கேட்டார். வேறுவிதமாகக் கூறினால், “நான் செய்வேனென்று வேதம் தீர்க்கதரிசனம் உரைத்ததை நான் செய்யாமல் இருந்தால் என்னைக் கேளுங்கள்” என்று அவர் சொன்னார். “அவிசுவாசமே” பாவமாகும். தேவன் கூறியதை அவர் அவ்வாறே செய்து முடித்தார். அவர்களோ அதைக் காணக் கூடாமற் போயிற்று. 84நீங்கள் ஜனங்களிடம் சத்தியத்தைப் பேசும்போது, அது ஒரு வாத்தின் முதுகின் மேல் தண்ணீர் ஊற்றுவது போல உள்ளது. நான் எதைப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா? அது மிகவும் பரிதபிக்கப்பட்டத்தக்க ஒரு காரியம். நாம் வாழும் இத்தேசத்தின் ஜனங்கள் மதப்பற்று கொண்டு அவர்கள் விரும்பியதையே செய்வதைக் காணும்போது... “அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களையும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு உரைக்கவில்லையா? எனவே, “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று கூறப்பட்டுள்ளது. 85ஸ்தாபனங்கள் சத்தியத்தை மாற்றி அமைக்கின்றன. நாம் இங்குதான் இருக்கிறோம். அவர்கள், எல்லா மகிமையும் தேவ வல்லமையும் அப்போஸ்தலருடைய காலத்துக்கும் ஆயிரம் வருட அரசாட்சிக்கும் உரியவை என்கின்றனர். நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளபடி, ஒரு மனிதன், தேவன் கடந்த காலங்களில் செய்தவைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறான். அவர் எதிர்காலத்தில் செய்யவிருக்கும் காரியங்களையும் எதிர்நோக்கியிருக்கிறான். ஆனால் தற்போது செய்துக்கொண்டிருப்பவைகளை அசட்டை செய்கிறான். அது முற்றிலும் சரி. அவ்விஷயத்தில் மனிதன் மாறவேயில்லை . இன்னுமாக அதேப் போன்று தான் இருக்கிறான். யூதர்கள் அங்கு நின்றுகொண்டு “தேவனுக்கு மகிமை” என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஏன்? யோவான் சுவிசேஷம் 6ம் அதிகாரத்தில் அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்” என்று கூறினர். ஆனால் இயேசு, “அவர்கள் எல்லாரும் மரித்தனர்” என்றனர். 239 “இஸ்ரவேலர் வனாந்தரத்தில் கன்மலையின் தண்ணீரை குடித்தனர்.” 86இயேசு “நானே அந்தக் கன்மலை” என்றார். அது உண்மை . ஆமென். மேலும் அவர், “நானே வனாந்தரத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்-ஏதேன் தோட்டத்தில் இருந்த ஜீவ விருட்சம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் மரிப்பதில்லை. அவனை நான் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். ஆனால் அவர்களால் இன்னும் அவரைக் காண முடியாமல் இருந்தது! அது உண்மை. அந்த அதே மேசியா அங்கே நின்று கொண்டு, அவர்களுடைய இருதயங்களில் இருந்த அதே வார்த்தைகளைப் பேசி, அதே போன்ற காரியங்களைச் செய்து, தாம் தான் மேசியா என்பதைக் காண்பித்தார், மேசியா என்னென்ன காரியங்களைச் செய்வாரோ அதே காரியங்களே! ஆயினும் அவர்கள் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு, அங்கே நின்றுகொண்டு, “ஹூ! அது மேசியாவாக இருக்க முடியாது. இல்லவே இல்லை. அவன் சரியான முறைப்படி தோன்றவில்லை. பாருங்கள்? அவன் பெத்லகேமிலிருந்து வந்திருக்கிறான். அவன் முறை தவறிப் பிறந்தவனேயன்றி வேறு யாருமல்ல. அது பிசாசு அவன் மேல் கிரியை செய்துகொண்டிருப்பதாகும். வேறு யாருமல்ல. அவன் ஒரு பைத்தியக்காரன் என்று எங்களுக்குத் தெரியும். அவன் பைத்தியம் பிடித்தவன். அவன் ஒரு பிசாசு பிடித்தவன்” என்றனர். பாருங்கள், அவர்களுடைய கண்கள் உண்மையாகவே அதற்கு குருடாக்கப்பட்டிருந்தன. இப்பொழுது. ஆனால், அவர்கள் அவர்களுடைய தீர்க்கதரிசியை எதிர்நோக்கியிருக்கின்றனர். நிச்சயம் அவர்கள் தீர்க்கதரிசியை பெறுவார்கள்-இரு தீர்க்கதரிசிகள் அவர்களிடம் வருவார்கள். அது உண்மை . 87இப்பொழுது கவனியுங்கள், மறுபடியுமாக, இப்பொழுது, இந்த யூதர்கள். எடுக்கப்படுதல் நிகழ்ந்த பின்பு உள்ள யூதர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அது முன்னடையாளமாக உள்ளது. நமக்கு இங்கு நேரமில்லாதபடியால், நான் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டேன். முன்னடையாளமான.. அது “யாக்கோபின் இக்கட்டுக்காலம்” என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது கவனியுங்கள். இங்குள்ள இந்த யூதர்கள்... கவனியுங்கள். ஓ,... நான்-நான்- நான் இங்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். பாருங்கள். இவ்விதமாக நான் இதைக் கடந்து செல்லத் துவங்கும்போது, நான் நடுங்குகிறேன். பாருங்கள்? கவனியுங்கள். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே நான் நான்நான்... நல்லது தேவன் அதை உங்களுக்கு நிச்சயம் வெளிப்படுத்தித் தருவார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். கவனியுங்கள். யாக்கோபு சேஷ்ட புத்திர பாகத்தை உடையவனாயிருந்தான். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) அவன் வெட்க சுபாவம் கொண்டன். பாருங்கள்? அவன் தன்னுடைய தகப்பனையே வஞ்சித்தான். தன்னுடைய சகோதரனை வஞ்சித்தான். அவன் எல்லாக் காரியங்களையும் செய்தான். ஆயினும் சட்டப்படி சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக்கொண்டான். ஏனெனில் ஏசா அதை அவனுக்கு விற்றுப் போட்டான். பின்பு அவன் மாமனாரிடம் வேலை செய்து, புன்னை மரக் கொப்புகளை வெட்டி வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து, ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாக புள்ளியுள்ள குட்டிகளைப் பொலியும்படி செய்தான், ஆகவே, ஓ, அவன் செய்த எல்லாக் காரியங்களும், பணத்தை சம்பாதிக்கத்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது கவனியுங்கள். அவன் தன் ஜனங்களிடமிருந்து புறம்பாக்கப்பட்டான். 88இப்பொழுது, தற்போதைய யூதர்களுக்கு அவன் ஒரு முன்னடையாளமாயிருக்கிறான். தற்கால யூதர்கள் பணம் அபகரிப்பார்கள். எந்த முறையிலாவது காசு சம்பாதிக்க வேண்டுமென்னும் எண்ணம் கொண்டவர்கள். பணம் சம்பாதிப்பதற்கென்று உயிரோடு உங்கள் தோலையும் உரித்துக் போடுவார்கள். இப்பொழுது, நீங்கள் இதை அறிவீர்கள். ஆனால் அவர்கள் சற்று நாணம் கொண்டவர்கள். “அவனிடம் தொடர்பு கொள்ளாதே, அவன்-அவன் எல்லாவற்றையும் அபகரித்துவிடுவான்” என்று யூதர்களைக் குறித்து சொல்கின்றனர். ஆம், ஐயா. ஏன்? அவர்கள் அவ்விதத் தன்மை கொண்டவர்களாகவே இருக்க வேண்டும். அவ்வித ஆவிதான் அவர்களை ஆட்கொண்டுள்ளது. அந்த சீர்திருத்தக்காரர்களைப் போன்று, இந்த வார்த்தையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு மனிதன் ஆவியே அனுப்பப்பட்டது. 89ஆனால் கழுகின் காலத்தில் வார்த்தையும் அதன் வெளிப்பாடும் கிடைக்கும். இதைப் புரிந்து கொண்டவர்கள் கரங்களை உயர்த்துங்கள்... மிகவும் நல்லது. அது அருமையானது, பாருங்கள்? அது நல்லது. இப்பொழுது முத்திரைகள் திறக்கப்படும்போது, தேவன் தற்பொழுது என்ன சொல்கிறாரென்றும், அவர் முன் காலத்தில் என்ன செய்தாரென்றும், வருங்காலத்தில் என்ன செய்யவிருக்கின்றார் என்பதையும் உங்களால் சரியாகக் காண முடியும். அது அங்கு சரியாக இருக்கின்றது. ஆனால் சீர்திருத்தக்காரர் காலத்தில் முன்னறிவிக்கப்பட்ட அக்காலத்துக்குரிய ஆவி அவர்களுக்கு அனுப்பப்பட்டதனால், அதைக் காட்டிலும் அதிகமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்கள் அவ்விதமாக செயல்பட்டனர். ஆனால் யோவான், பவுல் இவர்களின் காலத்தில், சிங்கத்தின் ஆவி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. வார்த்தையாகிய சிங்கமே அவர்களுடன் இருந்தார். ஆகவே பவுல் வார்த்தையில் நிலைநின்று, “கள்ளச் சகோதரர் உங்கள் மத்தியில் எழும்புவார்கள். அவர்கள் ஸ்தாபனங்கள் மற்றும் எல்லாக் காரியங்களையும் உண்டாக்கிக் கொள்வார்கள் என்று அறிந்திருக்கிறேன். கடைசி காலம் வரைக்கும் அவர்கள் காணப்படுவார்கள். அக்காலம் கொடிய காலமாயிருக்கும்.” என்றான். ஏன்? அவன் தீர்க்கதரிசியாயிருந்தான். அவனுக்குள் அந்த வார்த்தை இருந்தது. எனவே கடைசி காலத்தில் அது எவ்விதம் முடிவடையும் என்பதை முன்னறிவித்தது. “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்” என்று பவும் கூறினான். அதுதான் அந்திக்கிறிஸ்து. அவன் கூறினவிதமாகவே சம்பவித்தது. 90சபையானது இருளின் காலங்களில் பிரவேசித்த பின்னர், கவனியுங்கள், அது என்னவாயிருந்தது? அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோமாபுரி மத சம்பந்தமான ஆதிக்கத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் ஒருங்கே கொண்டதாயிருந்தது. ஆகவே அவர்கள் பாடுபட்டு, தங்களைப் பலியாக ஒப்புக்கொடுப்பதல்லாமல் வேறொன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் காளையின் ஆவியைக் கொண்டிருந்தனர். அவர்களால் அதைத்தான் செய்ய முடிந்தது. அந்தவிதமான ஆவியைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். தேவனுடைய ஆவி, காளை. பின்னர் சீர்திருத்தக்காரர் தோன்றினர். மனித முகம், சாதூர்யம், ஞானம் உள்ளவர்கள். மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, கால்வின், ஃபின்னி, நாக்ஸ் போன்றவர், அவர்கள் சீர்திருத்தக்காரர்களாயிருந்தனர். அவர்கள் சீர்திருத்தம் செய்து ஜனங்களை வெளியே கொண்டு வந்தனர். ஆயினும், வெளிவந்த ஜனங்கள். மறுபடியும் ஸ்தாபன முறைகளைப் பின்பற்றி அவைகளை மணந்து, அவர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். “வேசி” ஒருவள் இருக்கிறாளென்றும், அவளுக்கு “வேசிகுமாரத்திகள்” உள்ளனர் என்றும் வேதம் கூறுகின்றது. 91“அவள் மனந்திரும்பும்படி கொடுத்தேன். அவளோ மனந்திரும்பவில்லை . ஆகவே அவளையும் அவள் பிள்ளைகளையும் அவர்களுக்குரிய இடத்தில் தள்ளுவேன்” என்று தேவன் கூறியுள்ளார். அது முற்றிலும் சரி. இப்பொழுது அவர் அதை நிறைவேற்றுகிறார் என்று நாம் முத்திரையில் காண்கிறோம். அங்கேதான் அவள் இருந்தாள். அவர் அதைச் செய்கிறார். அவர் நிச்சயம் அதைச் செய்வார் என்று நாம் காண்கிறோம். அவர்களெல்லாரும் அவ்வழியே சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்ட அனைவரையும் தேவன் அழைப்பார். அவர்கள் அதற்குச் செவி கொடுப்பார்கள். “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்” என்று இயேசு கூறினார். நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம். அது செம்மறியாடுகளுக்கு குரல் கொடுப்பதாகும். அக்குரலை வெள்ளாடுகள் அறிந்துகொள்ளாது. கவனியுங்கள். ஆனால், நீங்கள் பாருங்கள், செம்மறியாட்டின் அழைப்பு, என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கும். ஏன்? சத்தம் என்றால் என்ன? சத்தம் என்றால் என்ன என்று நான் உங்களுக்கு கூறிட விரும்புகிறேன். சத்தம் என்பது ஆவிக்குரிய அடையாளமாயிருக்கிறது. 92தேவன் மோசேயிடம், “முந்தின அடையாளத்தின் சத்தத்தை அவர்கள் கண்டு உன்னை நம்பாமலும் உனக்குச் செவி கொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தை சத்தத்தை கண்டு நம்புவார்கள்.” என்று கூறினார். “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும்” என்றார். கடைசி நாட்களில் இவ்வித அடையாளங்கள் சம்பவிக்கும்போது, தேவனுடைய ஆடுகள் அறிந்துகொள்ளும். ஆம், ஐயா. பாருங்கள்? அவர்கள் அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்வார்கள். “என் ஆடுகள் என்னை அறிந்திருக்கின்றன.” பாருங்கள்? “அவை அன்னியனுக்குப் பின் செல்வதில்லை.” இக்காலத்துக்குரிய ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு அடையாளத்தை அவைகள் கண்டு கொள்ளும். இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது யாக்கோபைக் கவனியுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளுகின்ற முதல் காரியம் என்னவெனில் தன் சொந்த தேசத்துக்கு (எங்கே?) திரும்ப வேண்டுமென்ற வாஞ்சை அவனுக்குண்டானது. 93ஓ, இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அதே வாஞ்சை இப்பொழுது உண்டாயிருக்கிறது! அதுதான் இஸ்ரவேலருக்கு உண்டாகியுள்ளது. யாக்கோபு தான் இஸ்ரவேல். அவனுடைய பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது என்று நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? அவர். அவன் ஏமாற்றுதல், திருடுதல் போன்ற முறைகளைக் கையாண்டு அவன் தன் உறவினர், மற்றவரிடமிருந்து பணம் சம்பாதித்தான். பாருங்கள்? அவன் அதையே செய்தான். ஆகவே பிறகு, தன் தேசத்துக்குத் திரும்ப வேண்டுமென்ற வாஞ்சை அவனுடைய இருதயத்துக்குள் உண்டானது. அவ்வாறு திரும்பிச் செல்லும் வழியாய் அவன் தேவனைச் சந்தித்தான். அப்பொழுது அவன் பெயர் மாற்றப்பட்டது. பாருங்கள்? ஆனால் இந்த நேரத்தில் அவன் மிகவும் களைப்புற்றிருந்தான், ஏனென்றால், ஏசா அவனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தபடியால் அவன் பயந்து போயிருந்தான். புரிகிறதா? 94ஆகவே, கவனியுங்கள், ஏசாவுடன் பண விவாகரத்தில் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முயற்சித்தான். யூதர்களும் அவ்வாறே ரோமாபுரியிடன் பண விவகாரத்தில் உடன்படிக்கை செய்துகொள்வார்கள். இதைக் கவனியுங்கள். ஆனால் ஏசாவுக்கு யாக்கோபின் பணம் அவசியமில்லாமல் இருந்தது. அவ்வாறே ரோமாபுரி உலக செல்வமனைத்தையும் கொண்டுள்ளதால் அதற்கு யூதர்களின் பணம் அவசியமிராது. பாருங்கள்? அது செயல்படவில்லை. யாக்கோபு தனக்குண்டாயிருந்த இக்கட்டு காலத்தில் ஒரு மனிதனுடன் போராடி, உண்மையானதைப் பிடித்துக் கொண்டான் என்பதை நாம் காண்கிறோம். அங்கு ஒரு மனிதன் வந்தார். யாக்கோபு தன் கரங்களால் அவரை இறுகப் பிடித்துக்கொண்டு அவரைப் போகவிடவில்லை. அந்த நபரோ, “நான் போகட்டும், பொழுது விடிகிறது” என்றார். ஓ! அந்த பொழுது விடியும் நேரம், பாருங்கள்? காலை விடியப் போகின்றது. ஆனால் யாக்கோபு அந்த மனிதனிடம், “நான்- நான் உம்மைப் போக விடமாட்டேன், உம்மால் போகமுடியாது. நான் உம்முடனே இருக்கப்போகிறேன்.” பாருங்கள்? “காரியங்கள் இப்பொழுது மாறவேண்டும்” என்றான். இவன் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களுக்கு முன்னடையாளமாயிருக்கிறான். அவர்கள் பணம் சம்பாதிக்கும் வழியை வகுக்கும் யூதர்கள். அவர்கள் உண்மையான காரியத்தைப் பிடித்துக் கொள்ளும்போது, மோசேயும் எலியாவும் அங்கிருப்பார்கள். ஆமென். இஸ்ரவேலின் கோத்திரங்களைச் சேர்ந்த இந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களும் தெரிந்தெடுக்கப்படும் வரை அவர்கள் தேவனுடன் போராடுவார்கள். இது உபத்திரவ காலமாகிய “யாக்கோபின் இக்கட்டுக் காலத்தில்” நிகழும். பாருங்கள்? (ஓ எவ்வளவு அற்புதமாயுள்ளது) அப்பொழுதுதான். ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் அழைக்கப்படுகின்றனர். அது இரு தீர்க்கதரிசிகளும் யோவான் ஸ்நான்னைப் போன்று, “பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது. இஸ்ரவேலே மனந்திரும்பு” என்று பிரசங்கிப்பார்கள். எதனின்று அவர்கள் மனந்திரும்ப வேண்டும். “அவர்கள் பாவத்தினின்றும் அவிசுவாசத்தினின்றும் தேவனிடத்தில் திரும்ப வேண்டும்.” 95இப்பொழுது, நாம் இங்கு ஒன்றை ஞாபங்கொள்ள வேண்டும். இயற்கைக்குச் சம்பவிக்கும் இம்மகத்தான காரியங்கள் ஏற்கனவே சம்பவித்துள்ளன. அது பன்னிரண்டாம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. “சூரியன் கறுப்புக் கம்பளியைப்போல் கறுத்தது.” இப்பொழுது இதை ஒப்பிட்டுப் பார்ப்போம். இப்பொழுது, இது இஸ்ரவேலருக்கு நிகழ்கின்றது. புறஜாதிகளுக்கல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நான் அதை உங்களுக்குக் காண்பிக்கட்டும். இப்பொழுது இது அந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் அழைக்கப்படும் காலமாகும் என்று நான் உங்களிடம் கூறினேன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? இம்முறை இந்த உபத்திரவம் தான் அதைச் செய்கின்றது. உபத்திரவ காலத்தில் என்ன நேரிடுகிறது என்பதை இவ்வசனம் விவரிக்கிறது. 96இப்பொழுது, யாத்திராகமம். 10:21-23 வசனங்களைப் பார்ப்போம். இங்கே கவனிக்கும்பொழுது.. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்படுவதை யாத்திராகமம் எடுத்துரைக்கிறது. யாத்திராகமம் 10-ம் அதிகாரம் 21-23-ம் வசனங்கள், அவர்கள் புறப்படும் முன்னர் என்ன நிகழ்ந்ததென்று பார்ப்போம். இந்த குறிப்புகளை நான் எழுதும்போது சில சமயங்களில் வேறொன்றோடு இணைக்கும் அளவிற்கு நான் உணர்ச்சி வசப்பட்டு சத்தமிடத் தொடங்கினேன். சரி. யாத்திராகமம் 10:21-23 சரி. நாம் இப்பொழுது 21 முதல் 23ம் வசனம் வரை சென்று பார்ப்போம். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாக்கும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று, (பாருங்கள்) இப்பொழுது, மூன்று நாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை , ஒருவரும் தம்மிடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது. 97கவனியுங்கள். சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது“ என்பது இங்கே சரியாக வருவதைக் கவனியுங்கள். பாருங்கள்? அதே காரியம் இயற்கையில் சம்பவிக்கும். இவை, எதைக் காண்பிக்கின்றது? என்ன? இவ்விதம் இயற்கைக்குச் சம்பவிக்கும்பொழுது, இஸ்ரவேலரைத் தேவன் அழைக்கும் தருணம் வந்துவிட்டது என்பதைப் பாருங்கள்? தேவன் இஸ்ரவேலை அழைக்கிறார். இப்பொழுது, ”சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது.“ இப்பொழுது, அவர்கள் சத்துருவாகிய எகிப்தை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் வெளிவரும் தருணம் வந்தபோது, எகிப்தை இருள் சூழ்ந்தது. இப்பொழுது இங்கு ரோமாபுரியின் கரங்களிலிருந்து அவர் அவர்களை விடுவிக்கிறார். அவர்கள் ரோமாபுரியுடன் ஏற்கனவே உடன்படிக்கை செய்து கொண்டிருப்பார்கள். அதினின்று அவர்கள் விடுபட வேண்டும். அதே காரியம் தான் இங்கே சம்பவிக்கின்றது. அதே வாதை உண்டாகின்றது என்பதைக் கவனிக்கவும். அதே வாதைகள்தான், வாதைகளின் அந்த நேரத்தில் அவர்கள் அழைக்கப்படுகின்றனர். அந்த புறஜாதிகள் கூட்டத்தை அது வாதிக்கும். எனக்கு நேரம் இருந்தால், கைவிடப்பட்ட புறஜாதி சபைகளுக்கு என்ன நேரிடுமென்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். “வலுசர்ப்பம், சாத்தான் ஸ்திரீயின் மேல் (யூதர், இஸ்ரவேலர்) (கோபங்கொண்டு) வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை கணக்கற்ற ஜனத்தொகை ஊற்றிவிட்டது. அந்த வெள்ளம் ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களுடன் யுத்தம் பண்ணப்போயிற்று” என்று வேதம் கூறுகின்றது. வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரம். இப்பொழுது, அங்கு பாருங்கள், அது நமக்கு. அப்பொழுது இஸ்ரவேல் தன்னுடைய... ரோமாபுரி தன்னுடைய சேனையை ஸ்தீரீயின் சந்ததியான மற்றவர்களுடன் யுத்தம் செய்ய அனுப்புகிறது. 98இப்பொழுது. கவனியுங்கள். முதன் முறை, இஸ்ரவேலரை அவர்களுடைய சத்துருவின் கரங்களிலிருந்து அவர் விடுவித்தபோது, சூரியன் கறுத்தது. இப்பொழுது உபத்திரவ காலத்தின் முடிவிலும் அதுவே இரண்டாம் முறை சம்பவிக்கிறது. இப்பொழுது தானியேல் 12-ம் அதிகாரத்தில் நமக்கு சமயமிருந்தால் அதைப் படிக்கலாம். தானியேல், 12-வது12வது வசனம். அதாவது 12வது அதிகாரம். புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. எழுபதாம் வாரத்தின் முடிவில் இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டிருக்கும் காலத்தைக் குறித்து தானியேல் இங்கு குறிப்பிடுகின்றான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் விடுவிக்கப்படவிருக்கும் காலம் இதுவேயாகும். இப்பொழுது, கவனியுங்கள். தானியேல் 12ம் அதிகாரத்தை ஒரு நிமிடம் பார்ப்போம். உன் ஜனத்தின் புத்திரருக்காக (பாருங்கள், அது யூதர்கள்) நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும். மத்தேயு 24-ம் அதிகாரத்தில் இயேசு கூறியுள்ளதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். “ஏனெனில் உலகமுண்டானது முதல் இது வரைக்கும் சம்பவித்திராததும், இனிமேல் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” ஆறாம் முத்திரையையும் கவனியுங்கள். பாருங்கள், அதே காரியம், இவை யாவும் உபத்திரவ காலத்தைக் குறிக்கப்படுகின்றன. கவனியுங்கள். அக்காலத்திலே (அதாவது தானியேல் கடைசி ஏழு வருடங்களின் பிற்பகுதியில்) புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அதாவது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள முன்குறிக்கப்பட்டவர்கள் அந்த நேரத்தில் விடுவிக்கப்படுவர். நீங்கள் பாருங்கள். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். இப்பொழுது, ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். அதன் பின்பு அவர் தானியேலிடம் “புஸ்தகத்தை முத்திரைபோடக்” கூறினார். தானியேல், காலம் வரை இளைப்பாற வேண்டும். 99இப்பொழுது நீங்கள் மரித்தாலும் அல்லது உயிருடன் இருந்தாலும் யாதொரு வித்தியாசமில்லை. பாருங்கள்?... ஏனெனில் எப்படியாயினும் நீங்கள் உயிரோடு எழுந்திருப்பீர்கள். பாருங்கள்? கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது ஒன்றுமில்லை. ஏனெனில் அவன் மரிப்பதேயில்லை . பாருங்கள்? இப்பொழுது புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படும் அனைவரும் விடுவிக்கப்படுவார்களென்று தானியேல் 12-ம் அதிகாரம் எடுத்துரைக்கின்றது. உபத்திரவ காலத்திற்குப் பிறகு தேவன் தமது இரண்டாம் குமாரனான இஸ்ரவேலரை விடுவிக்கிறார். பாருங்கள், இரண்டாம் முறை, இஸ்ரவேல் அவருடைய குமாரன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இஸ்ரவேல் தேவனுடைய குமாரன், எனவே எகிப்தில் அவர் செய்தவிதமாகவே, உபத்திரவ காலத்தில் அவர் அவனை விடுவிக்கப் போகிறார். 100இப்பொழுது இதை நாம் மெய்ப்பிக்குமுன்பாக, இங்கு சற்று நிறுத்திவிட்டு, அதோடுகூட வேறொன்றைப் பார்ப்போம். இப்பொழுது, இங்கே கவனியுங்கள். இந்த இரண்டு தீர்க்கதரிகளைக் கவனியுங்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பாருங்கள்-மோசே எகிப்தில் செய்தது போன்று, “என்னிடத்தில்... ஒரு அளவுகோல் கொடுக்கப்பட்டது.” வெளிப்படுத்தல் 11:3-ம் வசனம். என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திற்கு நூற்றறுபது நாள்ளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும்... செருபாபேல் ஆலயத்தை மீண்டும் கட்டுவான் என்பதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு விளக்குத் தண்டுகளும் இவர்களே. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும். 101கிறிஸ்துவின் வாயிலிருந்து பட்டயம்- வார்த்தை - புறப்படுகிறது என்பது நினைவிருக்கிறதா? அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும். அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்பட வேண்டும். இப்பொழுது, “அக்கினி” என்ன என்பதை நாம் அறிவோம். வெளிப்படுத்தல்19-ம் அதிகாரத்தில் “கிறிஸ்துவின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டுச் செல்லுகிறதென்று” நாம் பார்த்தோம். அது தேவனுடைய வார்த்தை. அது சரியா? வார்த்தை! ஓ, நாளை இரவின் முத்திரைக்காக நீங்கள் இந்த தனிப்பொருட் கூற்றை (this material) இப்பொழுது பெறுவீர்களானால்! பாருங்கள். தேவன் தம் சத்துருக்களை அவருடைய வார்த்தையினால் நிர்மூலமாக்குகின்றனர். 102இப்பொழுது, இங்கு கவனியுங்கள். இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது யாராகிலும் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டால், அவர்களுக்குத் தீங்கிழைக்க முற்பட்டால், “அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்படுகின்றது.” பரிசுத்த ஆவியின் அக்கினி-வார்த்தை . வார்த்தையே தேவன் வார்த்தையே அக்கினி. வார்த்தையே ஆவி. பாருங்கள்? “அவர்கள் வாயிலிருந்து புறப்படுகின்றது.” மோசேயைப் பாருங்கள். அவனுடைய வாயிலிருந்து என்னப் புறப்படுகிறது என்பதைப் பார்ப்போம். எகிப்தில் இந்த இஸ்ரவேலரை அவர்கள் மிக மோசமாக நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களை பார்வோன் போகவிடவில்லை, தேவன் அப்பொழுது அவருடைய வார்த்தைகளை மோசேயின் வாயில் போட்டார். பாருங்கள், தேவனுடைய சிந்தனைகள் மோசேயின் இருதயத்திற்குள் நுழைந்தன. அவைகளை உச்சரிக்க மோசே அங்கு செல்கின்றனர். அப்பொழுது அவை தேவனுடைய வார்த்தையாக ஆகின்றது. அவன் தன் கையை நீட்டி, “வண்டுகள் உண்டாகக்கடவது” என்று கட்டளையிட்டான். அப்பொழுது வண்டுகள் உண்டாயின. இங்கு பாருங்கள். ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும். பாருங்கள்? அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், அங்கே அது உடனே சம்பவிக்கும். ஆமென்! யாராகிலும் அவர்களைச் சேதப்படுத்த முயன்றால், அவர்கள் இவ்விதம் கொல்லப்பட வேண்டும். சகோதரனே, தேவன் அங்கு காட்சியில் ஆதிக்கம் கொள்கிறார். “அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களில் மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு .“ 103எலியா, அதை எங்ஙனம் செய்ய வேண்டுமென்பதை அவன் அறிவான். ஏனெனில் ஏற்கனவே அவன் அதைச் செய்திருக்கிறான். ஆமென்! மோசேயும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிவான். ஏனென்றால் அவன் அதை ஏற்கனவே செய்திருக்கிறான். அதற்காகவே அவர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். இப்பொழுது...ஆமென்! ஒரு நல்ல காரியத்தை உங்களிடம் இப்பொழுது என்னால் கூற முடியும். ஆனால் நாளை இரவுக்காக அதை ஒதுக்கிவைத்து விடுகிறேன். பாருங்கள் சரி. “அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு .“ அது என்ன? தேவனுடைய வார்த்தையேயன்றி வேறெது இவைகளைக் கொண்டு வர முடியும்? இயற்கைக்கு அவர்கள் விரும்பின எதையும் செய்யலாம். அது இங்கே உள்ளது. அவர்கள்தான் ஆறாம் முத்திரையின் கீழ் சம்பவிப்பவைகளைச் செய்கின்றனர். அதைத் திறக்கின்றனர். தேவனுடைய வல்லமையானது இயற்கையைத் தடை செய்கின்றது. பாருங்கள்? ஆறாம் முத்திரை முழுவதுமே இயற்கையைத் தடை செய்யும் செயல்களாம். உங்களுக்கு இப்பொழுது புரிகின்றதா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.] அதுதான் ஆறாம் முத்திரை. அதைச் செய்கின்றவர்கள் யார்? எடுக்கப்படுதல் நிகழ்ந்த பின்பு தோன்றும் இவ்விரண்டு தீர்க்கதரிசிகள், தேவனுடைய வல்லமையைக் கொண்டு, தேவனுடைய வார்த்தையின் மூலம், இயற்கையைத் தடை செய்கின்றனர். அவர்கள் வேண்டுமானால் பூகம்பங்களை அனுப்பலாம், சந்திரனை இரத்தமாக்கவும், சூரியனை அஸ்தமிக்கவும் வேறெதையும் கட்டளையிடலாம். ஆமென்! 104அங்கேதான் காரியம் பாருங்கள். அங்கேதான் காரியம் பாருங்கள். பாருங்கள்? சபையின் காலத்தில் முத்திரைகள் திறக்கப்படுவதைப் பாருங்கள். ஐந்தாம் முத்திரை உயிர்த்தியாகம் செய்த யூதர்களைக் குறிக்கின்றது என்பதை நாம் அறிந்து கொண்டோம். இப்பொழுது இவ்விரண்டு தீர்க்கதரிகளும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டவர்களாய், அவர்கள் விரும்பின யாவையும் இயற்கைக்குச் செய்கின்றனர். அவர்கள் பூமியை அசைக்கின்றனர். யார் இவ்விதம் செய்வார்கள் என்பது நமக்குத் தெளிவானது. அது மோசேயும் எலியாவும், அவர்களிருவரும் தாங்கள் ஏற்கனவே செய்த ஊழியத்தை மறுபடியும் செய்கின்றனர். ஓ, என்னே! இப்பொழுது நீங்கள் அதை புரிந்துகொள்ளுகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) ஆறாம் முத்திரை என்ன என்பது உங்களுக்கு புரிகிறதா? இரண்டு தீர்க்கதரிசிகளும் அதைச் செய்கின்றனர். இப்பொழுது கவனியுங்கள். அது உங்களை தினறச் செய்ய வேண்டாம். இந்த ஆறாம் முத்திரையைத் திறந்தது யார்? தீர்க்கதரிசிகள்! ஆமென். பாருங்கள்? வ்யூ! ஆமென். அங்கேதான் காரியம். பாருங்கள். சகோதரனே, ஓ, நாம் கழுகின் நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் உயர மேகங்கள் நடுவில் உள்ளோம். அந்த தீர்க்கதரிசிகள் ஆறாம் முத்திரையின் சம்பவங்களை நிகழ்த்தினர். அவைகளைச் செய்ய அவர்களுக்கு வல்லமை கொடுக்கப்பட்டது. ஆமென்! அதோ உங்கள் ஆறாம் முத்திரையின் இரகசியம் இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கின்றது. பாருங்கள்? 105இப்பொழுது நாம் இங்கே இதை நிறுத்துவோம். இவை சம்பவிக்கும் என்பதாய் இயேசு கூறியுள்ளார். பழைய ஏற்பாட்டிலும் எசேக்கியல் போன்ற பண்டைய தீர்க்கதரிசிகளெல்லாரும் இவை சம்பவிக்கும் என்றே கூறியுள்ளனர். இங்கே ஆறாம் முத்திரை திறக்கப்பட்டது. அவர்கள், “அது ஒரு இரகசியமான காரியமாயுள்ளது. யார் அதை செய்தது?” என்று கேட்கிறார்கள். இதோ அதனுடைய இரகசியம், அந்த இரண்டு தீர்க்கதரிகள் அதை செய்வதாக நாம் இப்பொழுது அறிந்து கொண்டோம். வேதம் அவ்வாறே கூறுகின்றது. அவர்கள் எதை வேண்டுமனாலும் இயற்கைக்குச் செய்யலாம். அவர்கள் முன்பு செய்தவைகளையே அப்பொழுதும் செய்கின்றனர். ஆமென். ஏனெனில் அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஆமென்! மகிமை! இதனை நான் கண்டபோது, என் ஆசனத்தை விட்டு எழுந்திருந்து இங்குமங்குமாக நடந்து, “கர்த்தாவே, பரலோகப் பிதாவே! எப்படியாய் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று கூறி எண்ணிப்பார்த்தேன். அது அங்கே இருக்கின்றது. அதுவேதான். அவர்கள் அந்த ஆறாவது முத்திரையைத் திறந்தார்கள். ஆமென்! இரண்டு தீர்க்கதரிசிகளையும் கவனியுங்கள். “யாராகிலும் அவர்களைச் சேதப்படுத்த முயன்றால், அவர்கள் வாயிலிருந்து அக்கினி புறப்படுகின்றது.” தேவனுடைய வார்த்தை , பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் மேல் வருகின்றார். நீங்கள் பாருங்கள்? “அக்கினி அவர்கள் வாயிலிருந்து புறப்படுகின்றது.” 106இப்பொழுது கவனியுங்கள். வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் நாம் அதையே காண்கிறோம். “கிறிஸ்துவின் வாயிலிருந்து ஒரு பெரிய பட்டயம் புறப்படுகின்றது,” தேவனுடைய வார்த்தை, அதைக் கவனித்தீர்களா? கிறிஸ்து வரும்போது “அவர் சத்துருக்களை அதன் மூலம் நிர்மூலமாக்குகிறார்.” நான் கூறுவது சரியா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.] இப்பொழுது அவர் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது அவரைக் கவனியுங்கள். சரி. இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனம் உரைக்கும் நாட்களில் மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகின்றது. இயற்கையை அவர்கள் தடை செய்கின்றனர். இப்பொழுது மழை பெய்யதபடிக்கு எலியா எவ்வளவு காலம் வானத்தை அடைத்தான்? (சபையோர், “மூன்றரை வருடங்கள்” என்று கூறுகின்றனர்.-ஆசி.) அங்கே சரியாக இருக்கின்றது. தானியேலின் எழுபதாம் வாரத்தின் பாகம் எவ்வளவு காலம் நீடிக்கின்றது? (“மூன்றரை வருடங்கள்”.] அங்கே சரியாக இருக்கின்றது. 107மோசே என்ன செய்தான்? அவன்-அவன்-அவன் தண்ணீரை இரத்தமாக மாற்றினார்; ஆறாம் முத்திரையில் கூறப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் செய்தான். வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் இவ்விருவரும் அவர்கள் முன்பு செய்த அற்புதங்களையே செய்கின்றனர், ஆமென்! வேதத்தில் மூன்று வெவ்வேறு பாகங்களில் கூறப்பட்டவை ஒன்றாகப் பொருந்துகின்றன. அதுதான் ஆறாம் முத்திரை திறக்கப்பட்டுதலாம். அது இங்கே சரியாக இருக்கின்றது. ஆமென்! மகிமை! இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. 108ஓ, என்னே! அங்கே பாருங்கள், பாருங்கள், இப்பொழுது இங்கே வாதைகளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. ஆறாவது வாதையில் அல்லது ஆறாவது முத்திரை திறக்கப்படுதலில் இயற்கை யாவுமே தடை செய்யப்படுகின்றது. சம்பவிப்பதும் சரியாக அதுவேயாகும். இப்பொழுது, பாருங்கள்... இங்கே தேவன் எகிப்தில் அவர் செய்த வாதைகளையே மீண்டும் செய்து, தம் புத்திரனாகிய இஸ்ரவேலை மீட்டுக் கொள்கிறார். அங்கு மோசேயை அனுப்பி இஸ்ரவேல் புத்திரரை விடுவித்தார். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.- ஆசி.) இப்பொழுதும் அவர் அதேக் காரியங்களையேச் செய்கிறார். அவர் ஆகாபிடம் எலியாவை அனுப்பி ஏழாயிரம் பேரை வெளியே கொணர்ந்தனர். நான் கூறுவது சரியா? உபத்திரவ காலத்தில் அவர்களை அவர் மறுபடியும் அனுப்பி ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களை மீட்டுக் கொள்கிறார். 109இப்பொழுது நீங்கள் கவனியுங்கள், பாருங்கள், வெளிப்படுத்தல்... அல்லது ஆறாவது அதிகாரத்திற்கும் அல்லது ஆறாவது வாதை... முத்திரை, என்னை மன்னிக்கவும். ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே 1 ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மீட்கப்படுவதை அறிவிக்கும் வெளிப்படுத்தல் 7-ம் அதிகாரம் கணிதப்படி சரிவர அமைந்திருப்பதைக் கவனியுங்கள். அது அமெரிக்காவைப் போன்றே இருக்கின்றது. அமெரிக்காவின் எண் பதின்மூன்றாகும். ஆரம்பத்தில் அதற்கு பதின்மூன்று சிறு மாநிலங்கள் இருந்தன. அதன் கொடியில் பதின்மூன்று கோடுகள் உள்ளன. அனைத்தும் பதின்மூன்று, பதின்மூன்று என்றே உள்ளன. அது வெளிப்படுத்தல் பதின்மூன்றாம் அதிகாரத்தில் வருகின்றது. அது ஒரு ஸ்திரீயின் எண்ணாகும். 110இப்பொழுது தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுக்கும் போது என்ன நேர்ந்ததென்பதைக் காண்போம். யாக்கோபு அவர் குமாரன், ஆனால் இயேசுவோ அவருடைய ஒரே பேறான குமாரன். மத்தேயு 27-ம் அதிகாரத்தில் அவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம். மத்தேயு 27-ம் அதிகாரம். இப்பொழுது, அவருடைய குமாரன் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். அவர்கள் அவரைப் பரிகசித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் பெரிய வெள்ளிக்கிழமையன்று பகல் மூன்று மணிக்குச் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். அது ஏறக்குறைய சம்பவிக்க வேண்டிய நேரமாயிருந்தது. மத்தேயு 27-ம் அதிகாரம், அது 45-ம் வசனம் என்று நான் நினைக்கிறேன். ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அதிகாரம் உண்டாயிற்று. அதையே அவர் இங்கு மறுபடியும் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள், பாருங்கள்? அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன்: இதோ பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. கறுப்பு, அந்தகாரம்! எகிப்து; கறுப்பு, அந்தகாரம்! இயேசுவை உயிரோடு எழுப்புவதற்கு முன்னால் தேவன் அவரைச் சிலுவையில் ஒப்புக் கொடுக்கிறார். அப்பொழுது முதலாவதாக அந்தகாரம் உண்டானது. மத்தியான வேளையில் சூரியன் அஸ்தமித்தது. நட்சத்திரங்கள் பிரகாசிக்காமற்போயின. இரண்டு நாட்கள் கழித்து தேவன் மகத்தான வெற்றி கொண்டவராய் அவரை எழுப்பினார். அவ்வாறே எகிப்தில் சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இவை இருளடைந்த பின்னர், அவர் இஸ்ரவேலரை விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்கச் செய்தார். 111இங்கே உபத்திரவ காலத்தில் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் தேவன் அவர்களுக்களித்திருந்த வார்த்தையைக் கொண்டவர்களாயிருந்தனர். தேவன் பேசக் கூறின் வார்த்தைகளை மாத்திரமே அவர்களால் பேச முடியும். இப்பொழுது அவர்கள் தேவர்களல்ல, ஆனால் ஒருவகையில் அவர்கள் குட்டித் தேவர்கள்தான். ஏனெனில் இயேசு “தேவ வசனத்தைப் பெற்று கொண்டவர்கள் தேவர்கள் என்று சொல்லியிருக்க..” என்றார். ஆனால், பாருங்கள், அவர்களிடம் தேவனுடைய வார்த்தை அளிக்கப்படுகின்றது. அவன் பேசினபோது, அவன் கூறினவிதமாகவே சம்பவிக்கின்றது அவ்வளவு தான். ஆகவே இவர்களிருவரும் தேவனுடைய கட்டளையைப் பெற்று, அவர்கள் விரும்பும்போதெல்லாம் பூமியை வாதிக்கின்றனர். (ஓ, என்னே), அவர்கள் வானங்களை அடைக்கின்றனர். அவன் அதைச் செய்கிறான். அதன் அர்த்தம் என்ன? தேவன் மீட்பின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள 1 ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களை மீட்டெடுக்க தருணம் வந்துவிட்டது. அவர்கள் மீட்பின் புஸ்தகத்தில் முத்திரையின்கீழ்-ஆறாம் முத்திரையில் காணப்படுகின்றனர். என் அன்பார்ந்த நண்பர்களே, இதுவரை இரகசியமாயிருந்த ஆறாம் முத்திரை இதுவே. 112நான் இப்பொழுது இதை... நமக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. நாம் இன்னும் சிறிது இதைப் பார்ப்போம். இன்னும் இதைக் குறித்து நான் இரண்டு முதல் மூன்று பக்கங்கள் குறிப்பெழுதி வைத்துள்ளேன். நல்லது, நான்... நீங்கள் இதை இங்கே காணலாம். நான் குறிப்பெழுதியுள்ள பதினைந்து பக்கங்கள் இன்னமும் உள்ளன. இன்னும் அதே காரியங்களை வேதத்திலிருந்து எடுத்துக் கூற முடியும். என்னே! வேதத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் அதைத் தொடர்ந்து பார்க்க முடியும். ஆனால் இவை யாவும் கூறினால் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்து மென்று நான் ஐயப்படுகிறேன். 113நாம் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தை எடுப்போம். ஏசாயா தீர்க்கதரிசி ஆறாம் முத்திரையைக் கண்டு, இது முக்கியமானதா அல்லது இல்லையா என்பதைக் குறித்துப் பேசியிருக்கிறான். பாருங்கள்? நல்லது, அந்த முழு திட்டம், மீட்பின் முழு திட்டமும், இந்த முத்திரைகளின் கீழ் இருக்கின்றது. அந்த முழு புஸ்தகம். இப்பொழுது இயேசு அதைக் கண்டார் என்று நாம் பார்த்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் கூறுவது சரியா? பாருங்கள்? இயேசு அதைக் கண்டார். அதைக் கண்ட மற்றவர்களையும் நாம் இப்பொழுது பார்க்கிறோம். யாக்கோபு இதற்கு முன்னடையாளமாயிருக்கிறான் என்பதையும் நாம் கண்டோம். எகிப்தில் நடந்த முன்னடையாளத்தையும் நாம் கண்டோம். இயேசு சிலுவையிலறையப்பட்டபோது நிகழ்ந்தவைகளையும் முன்னடையாளமாக நாம் கண்டோம். இப்பொழுது ஏசாயா புத்தகத்திற்கு திரும்பிச் செல்வோம். இன்னும் அநேக தீர்க்கதரிசிகள் இதைக் குறித்து கூறியவற்றை நான் இங்கு அதிகமாக குறிப்பு எழுதி வைத்துள்ளேன். ஏசாயாவில் உள்ள இதை நான் விரும்புகிறேன். இப்பொழுது நாம் ஏசாயா 13-ம் அதிகாரத்திற்கு திரும்பிச் செல்வோம். நான் விரும்புவது... 114ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் ஒரு நிறைவான வேதாகமமாகும் என்பதை நீங்கள் அறிவீர்களா? பாருங்கள், ஏசாயா தொடக்கத்தில் சிருஷ்டிப்பைக் குறிப்பிட்டு, மத்தியில் யோவான் ஸ்நானனைக் குறித்துப் பேசி, ஆயிரம் வருஷ அரசாட்சியுடன் அதை முடிக்கிறான். வேதாகமத்தில் அறுபத்தாறு புஸ்தகங்கள் உண்டு. அது தன்னில்தானே ஒரு கலைக்களஞ்சியமாக (Encylopedia) இருக்கின்றது. ஏசாயா 13-ம் அதிகாரத்தைக் கவனிப்போம். ஏசாயா 13-ம் அதிகாரம் ஆறாம் வசனத்திலிருந்து படிப்போம். அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கின்றது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். 115கிறிஸ்து தோன்றுவதற்கு 713 வருடங்களுக்கு முன்னால் ஆறாம் முத்திரையை ஏசாயா அறிவிப்பதைப் பாருங்கள். அவன் ஏறக்குறைய 2700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தான். இந்த முத்திரை நிறைவேறுவதை அவன் காண்கிறான். சரி. ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம். இயேசு என்ன கூறினார்? “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்..” “மனுஷருடைய இருதயம் பயத்தினால் சேர்ந்துபோம், கடல் கொந்தளிப்பு.” பாருங்கள்? மனிதருடைய இருதயம் சோர்ந்து போகும். அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப் பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். இதைக் கவனியுங்கள். அவர்கள் முகங்கள் வெட்கத்தினால் மாறுபடுகின்றன. இன்னும் சில நிமிடங்கள் அதைக் குறித்து நாம் பார்ப்போம். நான் அதைப் படிக்கப் போகிறேன். பாருங்கள். இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும் உக்கிர கோபமுமாய் வருகிறது. 116“அந்த தேசம்”, அதைக் குறித்த, அதைக் குறித்த யாவற்றையும் நீங்கள் பாருங்கள். கவனியுங்கள். வானத்தின் நட்சத்திரங்கள் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும். பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்... நான்-நான் இதை எப்படி உச்சரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை . (சபையோர், “அகங்காரிகள்” என்கின்றனர்.-ஆசி.] என்னால் அதைக் கூற முடியவில்லை , பாருங்கள். பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன். பாருங்கள். இயேசு என்ன பேசினாரோ அதையே ஏசாயாவும் கண்டான். ஏழாம் முத்திரை அதை வெளிப்படுத்துகின்றது. அவர் தேசத்தை உபத்திரவங்களினால் சுத்திகரிக்கிறார். அது உபத்திரவ காலத்தில் சம்பவிக்கின்றது. ஆறாம் முத்திரை. ஆம், ஏசாயா ஒரு தீர்க்கதரிசி, ஆதலால் தேவனுடைய வார்த்தை வெளியாகிறது. இது 2700 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. உண்மையாக! இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். ஏசாயா கூறினாவாறு அனைத்துலகமே. “ஒரு ஸ்திரீ பிரசவவேதனைப்படுவது போன்று,” எல்லா சிருஷ்டியும் தவித்துக் கொண்டருக்கின்றன. இந்த அலறலும் தவிப்பும் எதற்காக? தாயாகப் போகும் ஒரு-ஒரு ஸ்திரீயைப் போன்று இந்த பூமியும்இயற்கையும் தவித்துக் கொண்டிருக்கின்றன. 117நம்முடைய சொந்தப் பட்டிணத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மற்ற பட்டணங்களைப் போலவே இதில் மதுபான கடைகளும், வேசித்தனமும் எல்லாவித அசுத்தமும் நிறைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பட்டினம் இருந்த நிலையில் அதைக் காண தேவன் நிச்சயம் விரும்புவார். ஒஹையோ நதி கீழே பாய்ந்து கொண்டிருந்தபோது, கடற்சுழிகளும், வெள்ளச் சேதங்களும் அப்பொழுது இல்லை. இந்தப் பள்ளத்தாக்கில் பாவம் என்பதே அப்பொழுது கிடையாது. எருமைகள் சுதந்தரமாக திரிந்து கொண்டிருந்தன. அப்பொழுது அங்கு வாழ்ந்திருந்த இந்தியர்கள் எருமைகளை வேட்டையாடித் தின்று ஜீவனும் நடத்தினர். எந்தவிதமான தொல்லையும் அப்பொழுது இல்லை. ஆனால் மனிதர் இந்தப் பட்டினத்தில் பிரவேசித்தபோது, பாவமும் பிரவேசித்தது, பூமியின்மேல் மனிதன் பலுகிப் பெருகினபோது, பாவமும் வன்முறைகளும் தோன்றின. ஆம், அது சரி. மனிதன்தான் இவைகளுக்குக் காரணம், ஏன், இவை அவமானமான செயல்களாகும். 118என் வசிக்கிற ஊராகிய அரிசோனாவிலே அன்றொருநாள் நான் நின்றுகொண்டிருந்தேன். நான் நான் சிறுவனாயிருந்தபோது ஜரோனிமோ (Geronimo), கோகைஸ் (Cochise) போன்ற அமெரிக்க இந்தியர்களைக் குறித்துப் படித்திருக்கிறேன். நான் ஊழியத்திற்கு வந்த பிறகு, இவ்விந்தியர்களுக்கு நான் பிரசங்கம் செய்திருக்கிறேன். அவர்கள் மிகவும் அருமையான ஜனங்கள். நீங்கள் மிக நல்லவர்களைச் சந்திக்க விரும்பினால், அவர்களை நீங்கள் சிவப்பு இந்தியர்களிலே சந்திக்கலாம். பின்னர் ஒருநாள், புரதானப் போரில் உபயோகித்த ஆயுதங்களை வைத்திருக்கும் டூம்ஸ்டோன் (Tombstone) என்ற இடத்திற்குச் சென்று அவைகளைப் பார்வையிட்டேன். அவர்கள் ஜெரோனிமோவைத் துரோகியாகக் கருதுவதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் வீரமுள்ள அமெரிக்கன். ஆம், அது உண்மை . எவருமே செய்யவிரும்புவதுபோன்று அவன் தன் உரிமைக்காகப் போரிட்டான். அவனுடைய தேசம் அசுசிப்படுவதை அவன் விரும்பவில்லை. இப்பொழுது அது எந்நிலையிலுள்ளது என்பதைக் கவனியுங்கள். வெள்ளையன் அதில் புகுந்து அவன் குமாரத்திகளை வேசிகளாக ஆக்கினான். வெள்ளையன் தான் அயோக்கியன். ஆனால் அமெரிக்க இந்தியனோ நடுத்தரமானவன். அவன்அவன் பழைய பழக்க வழக்கங்களில் பாதுகாக்கிறவன். அவன் ஒரு எருமையைக் கொன்றுவருவான். அந்த ஜாதியிலுள்ள அனைவரும் எருமையின் மாமிசம் எல்லாவற்றையும் வீணாக்காமல் புசிப்பார்கள். அதன் தோலை அவர்கள் ஆடைகளாகவும், கூடாரம் போடவும் பயன்படுத்தினர். ஆனால் வெள்ளையன் அங்கு வந்து, சுட்டுப் பழகுவதற்கான எருமைகளைக் குறிவைத்து சுட்டு வீழ்த்தினான். என்னே ஒரு அவமானச் செயல்! 119ஆப்பிரிக்கா கண்டத்தில் காட்டுமிருகங்கள் நிறைய உள்ளன. ஆர்தர் காட் ஃபிரேயும் (Arther Godfrey) அவரைச் சார்ந்தோரும் ஹெலிகாப்டரில் சென்று அவைகளைச் சுட்டு வீழ்த்தியதாக நான் பத்திரிக்கையில் படித்தேன். ஒரு பெண் யானை சுடப்பட்டு சாகுந்தருவாயில் கண்ணீர் வடிப்பதும், இரண்டு ஆண் யானைகள் அந்த பெண் யானையைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. அது பாவமான செயல். அது ஒரு விளையாட்டல்ல! நான் வேட்டையாடச் செல்லும் பகுதியில், வெள்ளையர்கள் வந்து மானை வேட்டையாடி அதன் பின்புறத்தை வெட்டிவிடுவர். சில நேரங்களில் எட்டு அல்லது பத்து பெண்மான்களைச் சுட்டு வீழ்த்திச் சென்று விடுவதையும், மான்குட்டி தங்கள் தாயைத் தேடி இங்குமங்கும் ஓடும் பரிதாபமான காட்சியை நான் கண்டிருக்கிறேன். அது நல்ல வேட்டைக்காரத்தனம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? என்னை பொறுத்தவரையில் அது கொடூரம் நிறைந்த கொலையாகும். 120இவ்விதம் வேட்டையாடும் அமெரிக்கத் துரோகிகள் தன் நாட்டில் நுழைய கனடா தேசம் அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன். அது உண்மை . அவர்கள் என் வாழ்க்கையில் நான் கண்டதிலேயே மிகவும் கீழ்த்தரமான வேட்டைக்காரர்கள். இப்பொழுது அனைவரும் அவ்விதம் செய்வதில்லை. அவர்களில் ஆயிரத்தில் ஒருவர் மாத்திரம் ஒருக்கால் நல்லவராயிருக்கக்கூடும் என்பதை நீங்கள் கண்டறியலாம். அவர்கள் கண்டதையெல்லாம் விருப்பப்படி சுட்டு வீழ்த்துகின்றனர். அது உண்மை . அவர்கள் இருதயக் கடினமுள்ள கொலை பாதகர். அது சரி. வேட்டையாட அனுமதிக்கப்படாத காலத்திலும் அவர்கள் அவ்விதம் செய்கின்றனர். நான் அலொஸ்காவிற்குச் சென்றிருந்தபோது, ஒரு மான் கூட்டமே ஐம்பது காலிபர் திறனுள்ள மெஷின் துப்பாக்கியால் சுடப்பட்டு, குண்டுகள் கொம்புகளில் பாய்ந்து இறந்து கிடந்ததைக் கண்டேன். அமெரிக்க விமானிகள் இவைகளைக் கொன்றதாக என்னுடன் வந்திருந்த வழிகாட்டி (guide) கூறினார். ஒரு மான் கூட்டமே அழிக்கப்பட்டது. இது வெறும் கொலை பாதகமாகும். 121எருமைகளைக் கொன்றுவிட்டால், இந்தியர்கள் பட்டினி கிடந்து சாவார்கள் என்று வெள்ளையர்கள் அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே கோகைஸம் அவனைச் சார்ந்த மரபின் இளவரசர்களும், மற்றவர்களும் சரணடைய நேர்ந்தது. ஏனெனில் அவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும் பட்டினியினால் அவதியுற்றனர். ஒரே பகலில் பப்பல்லோ பில் (Buffallo Bill) போன்றவர் நாற்பது அல்லது ஐம்பது எருமைகளைச் சுட்டு கொல்வார்கள். எருமைகளை அழித்துவிட்டால், இந்தியர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் ஓ, என்னே! இந்தியர்களை அவர்கள் இவ்வாறு துன்புறுத்தியதன் காரணமாக நமது தேசியக் கொடியில் கறைபடிந்துவிட்டது. அங்குதான் காரியம். 122“ஆனால் இப்பூமியை நாசம் செய்பவர்களை தேவன் நாசம் செய்யும் நேரம் வந்துள்ளது” என்று வேதம் கூறுகின்றது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். முழு-உலகமும்! அன்றொருநள் நானும் என் மனைவியும் தெற்கு மலையின் மேலேறி, பீனிக்ஸ் பள்ளத்தாக்கை நோக்கினோம். என் மனைவிடம் நான், “இது மோசமாகக் காணப்படுகின்றதல்லவா?” என்றேன். அதற்கு அவள், “மோசமாகவா? எனக்குப் புரியவில்லையே” என்றாள். நான் மேலும் விவரித்து அவளிடம், “இந்த ஸ்தலம் பாவத்தால் நிறைந்திருக்கின்றது. 1,50,000 அல்லது 2,00,000 ஜனத்தொகை கொண்ட இப்பள்ளத்தாக்கில் எவ்வளவாக விபச்சாரமும், மது அருந்துதலும், சபித்தலும் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதும் நிறைந்துள்ளது!” “ஐந்நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இங்கு முட்செடிகளும், புல் செடிகளும் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. நதியின் மணலில் ஓநாய்கள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வாறே தேவன் அதை சிருஷ்டித்தார்” என்றேன். ஆனால் மனிதன் அங்கு புகுந்தவுடன் என்ன செய்தான்? அவன் பூமியை அசுத்தத்தால் நிரப்பினான், தெருக்களும், நதிகளும் அசுத்தமாக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள தண்ணீரைக் குடித்தால் உங்களுக்கு எந்த வியாதியும் வரக்கூடும். பாருங்கள்? அதைப் பாருங்கள்? இங்கு மாத்திரமல்ல, உலகம் முழுவது இந்நிலையில் உள்ளது. எல்லாமே மாசுபட்டு தூய்மைக் கேடாக உள்ளது. 123இயற்கையும் பூமியில் அசுசிப்பட்டுள்ளன. (தேவனே கிருபையாயிரும்!) உலகம் முழுவது பிரசவவேதனையிலுள்ளதாக ஏசாயா கூறியிருக்கிறான். என்ன காரணம்? அவள் ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று புது உலகத்தைப் பிரசவிக்க முற்படுகிறாள். அந்த உலகம் பாவமற சுத்திகரிக்கப்பட்டிருக்கும். அங்கு புதிய ஜனங்கள் வாழ்வார்கள். அது உண்மை . அவர்கள் பாவம் செய்து பூமியை ஒருபோதும் அசுத்தப்படுத்தமாட்டார்கள். அது சரி. உலகம் பிரசவவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாமும் மணவாட்டியை உருவாக்குவதற்கென பிரசவ வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லாமே பிரசவவேதனையடைந்து வேதனை மிகுதியால் அலறிக்கொண்டிருக்கிறது. பாருங்கள், ஏதோ ஒன்று சம்பவிக்க இருக்கிறது என்பதனை இது காண்பிக்கிறது. ஆகவே இந்த ஆறாம் வாதையின் சம்பங்கள் புதிய உலகத்தை உருவாக்குகின்றது. சகோதரனே, பூமியதிர்ச்சியினால் பூமி பிளவுண்டுபோகும், நட்சத்திரங்கள் குலுக்கப்படும், எரிமலைக் குழம்பு பூமியின் மையத்திலிருந்து மேற்பரப்புக்கு வரும். பூமி இவ்விதம் புதுப்பிக்கப்படும், பூமி சுற்றிக்கொண்டு வரும்போது, எல்லாமே தவிடு பொடியாகிவிடும். 124ஒருநாள் காலையில் இயேசுவும் அவரது மணவாட்டியும் பூமிக்குத் திரும்ப வரும்போது, இது தேவனுடைய பரதீசியாக அமைந்திருக்கும். அது, ஓ, என்னே! ஆவிக்குரிய போரில் கலந்துகொண்ட வீரர்கள் அவர்களுக்கு அருமையானவர்களுடனும் நண்பர்களுடனும் இங்குமங்கும் உலாவுவர். பரம் சேனையின் தூதர்கள் இசைக்கும் பாட்டுகள் ஆகாயத்தை நிரப்பும். “ஓ, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உனக்கென்று ஆயத்தமாக்கப்பட்டிருக்கும் உன் எஜமானனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பாயாக. ஏவாள் பாவம் செய்து அதனை தோற்றுவிப்பதற்கு முன்பு இவ்வுலகம் இவ்வாறே இருந்தது” என்பார். ஆமென். வ்யூ! ஆம். ஆறாம் முத்திரை ஏதோ ஒன்றை செய்யப்போகின்றது. ஆம் ஐயா! முழு உலகமே ஆயிரம் வருஷ அரசாட்சிக்காக பிரசவ வேதனைப்பட்டு அலறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைய உலகம் அசுத்தத்தினால் நிறைந்துள்ளது! சில நாட்களுக்கு முன்பு இக்கூடாரத்தில் உலகம் விழுந்து போதல் என்பதைக் குறித்து பிரசங்கித்தது நினைவுக்கு வருகின்றது. அது முற்றிலும் சரியாகும். உலகத்தில் விழுந்து போகின்றது. எதனால் என்று பாருங்கள், அனைத்துமே அழித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வுலகில் எல்லாமே இடிந்துபோக வேண்டும். ஆம் ஐயா. 125பாருங்கள், அதனுடைய வெளிப்புறம்! உலகம் அந்தவிதமான நிலையைப் பெற்றுள்ளதற்கான காரணத்தை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். இப்பூமிக்கு வெளிப்புற ஆதாரமாக (Frame) அமைந்துள்ள இரும்பையும் செம்பையும் உலோகங்களையும் அவர்கள் தொழிற்துறைகளுக்காகவும் யுத்தத்தில் உபயோகிப்பதற்காகவும் வெட்டி எடுக்கின்றனர். சம்பத்தில் செயிண்ட் லூயி (St.Louis) போன்ற இடங்களில் பூகம்பம் உண்டானது. இதற்கு முன்பாக பூகம்பம் அங்கு உண்டாகவில்லை. ஏன்? இவ்வுலோகங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அவள் மெலிந்துகொண்டே போகின்றான். எல்லாவற்றையும் அங்கிருந்து அவர்கள் வெட்டி எடுத்துவிட்டனர். பாருங்கள்? அரசியலும் கறைப்பட்டு விட்டதால், உத்தமமான யாரையும் அதில் காண்பது அரிதாயிருக்கிறது. அவர்களின் நல்லொழுக்கம் மிகவும் கீழ்த்தரமான நிலையை அடைந்துள்ளது. அவ்வளவேதான். பாருங்கள்? நிச்சயமாக, அதனுடைய மதவழிபாடு அரிக்கப்படுள்ளது. ஆம் ஐயா! 126வெகுவிரைவில் ஆறாம் முத்திரையில் கூறியுள்ள சம்பவங்கள் நிகழவிருக்கின்றன. அவை நிகழும்போது அதுதான் முடிவு. அப்பொழுது ஏற்கனவே மணவாட்டி எடுக்கப்பட்டிருப்பாள். அரசி அவள் ஸ்தானத்தை வகித்து ஏற்கனவே சென்றிருப்பாள். அவள் ராஜாவை மணந்து கொள்ளுவார். இது நிகழும்போது, இஸ்ரவேலில் மீதியானவர்கள் முத்திரிக்கப்பட்டுச் செல்ல ஆயத்தமாயிருப்பார்கள். அவ்வமயம் இயற்கையும் தன் கிரியைகளைச் செய்கிறது. ஓ, என்னே ஒரு சமயம்! 127ஆறாம் முத்திரையை விவரிக்கும் பாகத்தின் கடைசி வசனத்தைக் கவனியுங்கள், அடையாளங்களால் உறுதியாக்கப்பட்ட ஜீவனுள்ள தேவனின் வார்த்தையைக் கேட்டு பரியாசம் செய்தவர் யாவரும். சூரியனையும், மற்றவைகளையும் அடைத்த தீர்க்கதரிசிகள் காலங்கள்தோறும் செய்துவந்த அற்புதங்களைக் கண்டு நகைத்தவர் யாவரும் ஆறாம் முத்திரையின்போது, “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி, ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்துக்கு எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்வார்கள். ஏன்? அவர்கள் பரிகசித்த அதே வார்த்தையாகிய கிறிஸ்து வருகிறதை அவர்கள் காண்கின்றனர். பாருங்கள் அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கண்டு நகைத்தனர். அதே வார்த்தைதான் மாம்சத்தில் வெளிப்பட்டது. அதை அவர்கள் பரிகசித்தனர். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவர்கள் பரிகசித்தனர். மாம்சமான அந்த வார்த்தை அவர்கள் மத்தியில் வந்தது. அவர்கள் ஏன் மனந்திரும்ப முடியாமற் போனார்கள்? ஏனெனில் காலதாமதமாகிவிட்டது. ஆதலால் அவர்கள் மேல் தண்டனை விழப்போகின்றது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். இத்தகைய ஆவிக்குரிய கூட்டங்களில் அவர்கள் பங்குகொண்டு பிரசங்கிக்கப்பட்ட அனைத்தையும் அறிந்திருந்தனர். தீர்க்கதரிசிகள் முன்னறிவித்துள்ளவை, அவர்கள் புறக்கணித்திருந்த அந்தக் காரியம். அவர்கள் முன்னால் அப்பொழுது நிற்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். கிருபையை அவர்கள் கடைசி முறையாக உதறித்தள்ளிவிட்டனர். 128ஆகவே நீங்களும் கிருபையை உதறித்தள்ளினால், நியாயத்தீர்ப்பேயன்றி, வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. நீ கிருபையை, இரக்கத்தை உதறித்தள்ளினால், அதை சற்று சிந்தனை செய்து பாருங்கள். தண்டனை வரும்போது அவர்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமற்போகும். அவர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி, “எங்கள் மேல் விழுந்து ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்துக்கு எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவார்கள் என்பதாக வேதம் எடுத்துரைக்கிறது. அவர்கள் மனந்திரும்ப முயன்றனர். ஆனால் ஏற்கனவே ஆட்டுக்குட்டியானவர் வந்து தமக்குச் சொந்தமானவர்களைக் கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி கெஞ்சினர். ஜெபம் செய்தனர். ஆனால் அப்பொழுது அந்த ஜெபங்கள் மிகவும் காலம் கடந்து ஏறெடுக்கப்பட்டதாயிருந்தன. 129என் சகோதரரே, சகோதரிகளே, தேவனுடைய கிருபையும் இரக்கங்களும் ஜனங்களுக்கு இப்பொழுது அளிக்கப்பட்டுள்ளன. நாம் மனந்திரும்பத் தருணம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளாக இஸ்ரவேலரின் கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன. இத்தகைய இரக்கத்தை நீ உதறித் தள்ளிவிட்டாயா? நீ அவ்விதம் செய்தாயா? அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாயா? நீங்கள் யாராயிருக்கிறீர்கள்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் இவைகளை எந்த வைத்தியரிடத்தில் கேட்க முடியாது. நீங்கள் உலகத்தில் வேறெந்த நபரிடத்தில் கேட்டறிந்துகொள்ள முடியாது. இந்த புஸ்தகத்தைத் தவிர வேறெந்த புஸ்தகத்திலும் நீங்கள் யாரென்றும், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்றும், எங்கு போகின்றீர்கள் என்பதையும் படித்து உங்களால் அறிந்துகொள்ள முடியாது. 130இப்பொழுது ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் உங்களுக்குப் பதிலாக உங்கள் ஸ்தானத்திலிருந்து கிரியை செய்யாவிட்டால் நீங்கள் எங்கு எதிர்நோக்கிச் செல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆகவே, தேவன் உங்களுக்காக இதைச் செய்திருக்கும்போது, நாம் செய்ய வேண்டிய சிறிய காரியம் அவர் நமக்கென செய்திருப்பதை ஏற்றுக் கொள்வதாகும். அதை நாம் செய்ய வேண்டுமென்று அவர் நம்மிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நான் தொடர்ந்து பிரசங்கிப்பேனேயாகில், நான் சரியாக அந்த வாதையைக் குறித்து பேசும்படியாகிவிடும். அதை நாம் நாளை இரவு ஆராதனையில் காண்போம். நான் இதை இப்பொழுது செய்ய முடியாது. என்னால் தொடர்ந்து செல்ல முடியாது. ஏனெனில் நான் இங்கே எழுதியிருக்கின்ற குறிப்பில், “இங்கேயே நிறுத்து” என்று குறிப்பிட்டு வைத்துள்ளேன். பாருங்கள். ஆகவே நான் நாளை வரை காத்திருத்தல் வேண்டும். இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை சற்றுநேரம் தாழ்த்துவோமாக. 131என் அன்பார்ந்த நண்பர்களே, நான் இதுவரை உங்களிடம் பேசிக்கொண்டிருந்த இந்த தேவனுடைய அன்பை ஏற்றுக்கொள்ளாமற்போனால், நீங்கள். இப்பொழுது நீங்கள் இதைக் கூர்ந்து கவனியுங்கள். அவருடைய அன்பையும், இரக்கத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளாமற்போனால், தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கும் கோபாக்கினைக்கும் ஆளாவீர்கள். இப்பொழுது, ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்த அதே நிலையில் தான் நீங்களும் இன்றிரவு இருக்கின்றீர்கள். உங்களுக்கு ஓர் உரிமை உண்டு. நீங்கள் சுயாதீனத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் ஜீவ விருட்சத்திற்குச் செல்லலாம்; அல்லது தேவன் வகுத்துள்ள நியாயத்தீர்ப்பின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று நீங்கள் புத்திசாலிகளும், சரியான சிந்தையுள்ளவர்களாகவும் எழுந்து நின்று, இயேசுவை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ஆரோக்கியமுள்ளவர்களாயுமிருந்து, அவரை இன்னும் ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் பின்னை ஏன் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது? இதுவரை அவரை ஏற்றுக்கொள்ளாதவர் இங்கிருந்தால், உங்கள் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். நான் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். தண்டனை என் மேல் விழுவதை நான் விரும்பவில்லை” என்று சொல்லுங்கள். நண்பர்களே, இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள்... தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. நான்... 132இப்பொழுது நான் உங்களிடம் கூறினது என் சொந்த கருத்துக்களல்ல. நான் நான்... இது நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒன்றல்ல; இது முற்றிலும் என்னிலிருந்து... ஆகவே எனக்கு உதவி செய்யுங்கள், பரிசுத்த ஆவியானவர் அதை அறிவார். கர்த்தருக்குச் சித்தமானால் நாளை இரவு, இக்கூட்டங்களில் இதுவரை இருந்த ஒரு இரகசியத்தை உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். அது நிகழ்ந்ததை நீங்கள் கண்டீர்களோ அல்லது இல்லையோ என்று நான் சந்தேகப்படுகிறேன். அது உங்கள் முன்னிலையில் நிகழ்ந்தது. உங்களில் எவராவது எழுந்து, “நான் அதைக் காண்கிறேன்” என்று சொல்வீர்களாவென்று நான் ஒவ்வொரு இரவும் அதை கவனித்து வந்தேன். பாருங்கள்? நீங்கள் இதை புறக்கணிக்க வேண்டாம் என்று தயவுகூர்ந்து நான் உங்களை வேண்டுகிறேன். நீங்கள் கிறிஸ்தவர்களாக இல்லாமலிருந்தால், நீங்கள் நீங்கள் அவர் இரத்தத்தின் கீழ் இல்லாமலிருந்தால், நீங்கள் மறுபடியும் பிறவாமலிருந்தால், பரிசுத்த ஆவியினால் நிரப்படாமல் இருந்தால், இதை புறக்கணிக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளுக்கு சாட்சியாயுள்ள ஞானஸ்நானத்தை அவருடைய நாமத்தில் பெற்று, அதன் மூலம் அவரை ஏற்றுக்கொண்டதாக நீங்கள் இதுவரை பகிரங்கமாக அறிக்கை செய்யாமலிருந்தால், தண்ணீர் உங்களுக்காக ஆயத்தமாயிருக்கிறது. ஞானஸ்நானத்திற்காக அங்கிகள் இங்கு ஆயத்தமாய் வழங்கப்பட உள்ளன. 133உங்களை ஏற்றுக்கொள்ள கிறிஸ்துவும் கரங்களை விரித்து நின்றுகொண்டு, உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒருக்கால் அவர் அளித்துள்ள கிருபை உங்களை விட்டு எடுபடக்கூடும். ஒருக்கால், இது நீங்கள் புறக்கணிக்கும் கடைசி முறையாக இருக்கலாம். மறுபடியும் அது உங்கள் இருதயத்தைத் தொடாமலிருக்கலாம். உங்களால் முடியும்போதே அவரை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது? இப்பொழுது... கைகளையுயர்த்தினவர்களைப் பீடத்தின் முன்னால் வரச் சொல்வது தான் செயலாகும் என்பதை நான் அறிவேன். நாமும் அதைப் பின்பற்றுவதுண்டு. அது முற்றிலும் சரி. ஆனால் பீடத்தைச் சுற்றிலும் கூட்டமிருப்பதால் அவ்விதம் செய்ய இயலாது. 134ஆனால் நான் ஒன்றை உங்களிடம் கூற விரும்புகிறேன். அப்போஸ்தலருடைய நாட்களில், “விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று சொல்லப்பட்டது. பாருங்கள்? அதை உண்மையாக உங்கள் இருதயத்தின் ஆழத்தில் நீங்கள் விசுவாசித்தால்! இங்கே அது முழுமையாக உள்ளது. உணர்ச்சிவசத்தின் காரணமாக இது நிகழ்கின்றது என்று நீங்கள் கருத வேண்டாம். ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்போது, அந்த அனுபவத்துடன் உணர்ச்சியும் கூட உண்டாகின்றது என்பது மெய்தான். நான் உங்களிடம் கூறியுள்ளதுபோல, புகைத்தல், குடித்தல் பாவமல்ல. அவை பாவத்தின் தன்மைகளாகும். அப்படியானால், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை என்றே காண்பிக்கின்றது. பாருங்கள்? ஆனால், நீங்கள் உண்மையாக உங்கள் இருதயத்தில் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் ஆசனத்திலிருந்தே அவரை முழு இருதயத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது அங்கேயே ஏதோக்காரியம் சம்பவிக்கப்போவதாயிருக்கும். அது சம்பவிக்கத்தான் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 135அப்பொழுது ஏதோக்காரியம் சம்பவித்தது என்பதற்கு ஒரு சாட்சியாக உங்களால் எழுந்து நிற்க முடியும். பிறகு நீங்கள் தண்ணீரண்டை சென்று, “நான் மணவாட்டியுடன் என் ஸ்தானத்தை வகிக்க விரும்புகிறேன் என்பதை சபையாருக்கு நிரூபிக்க சாட்சியாக அறிவிக்க, ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன்” என்று சொல்லுங்கள். இவ்வுலகில் இன்றிரவு அநேக நல்ல பெண்மணிகள் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்களில் ஒருத்தியை நான் காணும்போது நான் தனித்திருக்கிறேன் என்ற உணர்ச்சி எனக்குண்டாகிறது. அவள் தான் என் மனைவி. அவள் என்னுடன் வீட்டிற்குச் செல்கின்றாள். தொடக்கத்தில் அவள் என் மனைவியாயிருக்கவில்லை. ஆனால் அவள் எப்படி என் மனைவியானாள்? அவள் என் பெயரைத் தரித்துக் கொண்டாள். அவர் வருகிறார். அவ்வாறே இவ்வுலகில் அநேக பெண்மணிகள் - சபைகள் உண்டு. ஆனால் இயேசுவோ, தம் மனைவிக்காக வருகிறார். அவள் அவருடைய பெயரால் அழைக்கப்படுகின்றாள். “கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களைத் தேவன் அவருடன் கொண்டு வருவார்.” நாம் அதில் எவ்விதம் பிரவேசிக்க முடியும்? “ஒரே ஆவியினாலே ஒரு சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுவதன்மூலம்” அதனுள் நாம் பிரவேசிக்கலாம். 136இப்பொழுது நான் ஜெபம் செய்யும்போது, நீங்களும் ஜெபியுங்கள், கூடாரத்துக்குள் இருப்பவர்களும், வெளியில் நிற்பவர்களும், அநேகர் அறைகளில் குழுமியிருக்கின்றனர். உங்களை நாங்கள் இங்கே பீடத்திற்கு முன்னால் அழைக்க முடியாது. ஆனால் உங்கள் இருதயத்தை நீங்கள் பீடமாக்கிக் கொள்ளுங்கள். “கர்த்தராகிய இயேசுவே, இதை நான் விசுவாசிக்கிறேன். நான் இந்த இரவு வெளியில் நின்று கொண்டிருந்தேன். நான் இவ்வறைக்குள் கூட்டத்தில் இந்த ஜனங்கள் மத்தியில் இங்கே நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். இதை நான்-நான்-நான்நான் - நான் இவ்வாறு... நான் தவறவிடக் கூடாது” என்று உங்கள் இருதயத்தில் ஜெபியுங்கள். சென்ற இரவு நான் உங்களிடம் கூறினவாறு... நான் உண்மையை உங்களிடம் கூறினேன் என்பதை கர்த்தர் அறிவார். பவுல், “நான் பொய்யுரைக்கவில்லை” என்று சொன்னதுபோல் நானும் உங்களிடம் சொல்லுகிறேன். நான் உங்கள் முன்பாக நிற்பது எவ்வளவு உண்மையோ அதுபோல நான் கண்ட அத்தரிசனத்தில், மரித்து அங்கு சென்றவர்களை நான் கண்டேன், அவர்களைத் தொடவும் செய்தேன் என்பதும் உண்மையாகும். சகோதரனே, சகோதரியே, அதை இழந்து போகவேண்டாம், நீங்கள் அதைச் செய்யவேண்டாம். நீங்கள் பிரசங்கித்ததை கேட்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், நீங்கள் இதை, அதை மற்றும் அநேக கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள், அது உண்மையென்பது எனக்குத் தெரியும். பாருங்கள் அதை இன்னும் தெளிவாக எடுத்துரைக்க என்னால் முடியவில்லை. அதை நழுவவிட வேண்டும். அவை யாவும் உங்களுக்கே. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம். 137கர்த்தராகிய இயேசுவே, என் முன்னிலையில் உறுமால்கள் கொண்ட ஒரு பெட்டி இருக்கின்றது. இந்த உறுமால்கள் வியாதியஸ்தருக்குப் பதிலாக இங்கு வைக்கப்பட்டுள்ளன. நான் கைகளை அவைகளின் மேல் வைத்து ஜெபிக்கும்போது, “பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து போட, பொல்லாத ஆவிகள் ஜனங்களை விட்டுப் புறப்பட்டன என்றும், விசேஷித்த அற்புத அடையாளங்கள் செய்யப்பட்டன” என்றும் வேதம் உரைக்கின்றது. காரணம், பவுலுக்குள் தேவனுடைய ஆவி இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அவர்கள் அவனிடத்திலிருந்ததைக் கண்டனர். அவன் ஒரு விசித்திரமான மனிதன் என்பதையும், வார்த்தையையும் குறித்தும், அவள் பேசின மற்றக் காரியங்களையும் குறித்தும் அவர்கள் அறிந்திருந்தனர். அவன் எபிரேய சபையின் ஒரு எபிரெய வாக்கை எடுத்துக்கொண்டு, அதற்கு அர்த்தம் கொடுத்து அதனை உயிர்ப்பித்து, கிறிஸ்துவுக்குள் அது எவ்விதம் பொருந்துகின்றது என்பதைக் காண்பிப்பான். தேவன் அவனுக்குள் இருந்தார் என்பதை ஜனங்கள் அறிந்திருந்தனர். அவன் மூலம் தேவன் வல்லமையான, அதிசயமான கிரியைகளை நடப்பிப்பவைகளையும், அவன் முன்னறிவித்த காரியங்கள் அவ்வாறே நிகழ்வதையும் அவர்கள் கண்கூடாகக் கண்டு, அவன் தேவனுடைய ஊழியன் என்பதை அறிந்து கொண்டனர். 138கர்த்தாவே, இந்த மக்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் வைத்துள்ள மதிப்பை நீர் அங்கீகரித்து, இயேசுவினிமித்தம் அவர்களை சுகமாக்க வேண்டுகிறேன். பேதுருவின் காலத்தில், பெந்தேகோஸ்தே நாளன்று ஜனங்கள் அவன் பேசுவதைக் கேட்டது போன்று, கர்த்தாவே, இக்கூட்டத்திலும் பேசுவதை ஜனங்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். எப்படி அவன் வார்த்தையினுள் திரும்பிச் சென்று, வார்த்தையைப் பெற்றுக் கொண்டான்! ஆகவே அவன் “கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்ததன் நிறைவேறுதல் இதுவே” என்று கூறினான். அப்பொழுது அதைக் கேட்ட மூவாயிரம் பேர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றனர். பிதாவே, இன்றைக்கும் நாங்கள் உமது கிருபையால் நிற்கிறோம். இவர்கள் விசேஷித்தவர்கள் என்பதனால் அல்ல. சிங்கம், காளை, மனிதன் இவைகளின் காலம் உண்டாயிருந்ததுபோல், இப்பொழுதும் கழுகின் காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுதான் இந்த மணி நேரத்தின் அபிஷேகமாகும், இதுவே நாங்கள் வாழும் காலமாகும். இயேசு மரித்துப்போய்விடவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் நிரூபிக்கவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாய் இது உள்ளது. சாயங்கால வெளிச்சங்கள் மறையும் முன்பு அவர் செய்வதாகக் கூறினக் காரியங்களையே அவர் செய்வதை நாங்கள் கண்ணாரக் கண்டு வருகிறோம். இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பத்தை, பவுலை வழியில் சந்தித்த அந்த அக்கினி ஸ்தம்பத்தை, விஞ்ஞானம் ஆராய்ச்சியின் மூலம் இப்பொழுது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். 139அதே அக்கினி ஸ்தம்பம் மோசேயை வனாந்தரத்தில் வழி நடத்தினதென்றும், அந்த அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாகவே அவன் வார்த்தையின் அபிஷேகம் பெற்று, வேதாகமத்திலுள்ள அநேக புத்தகங்களை எழுதினான் என்பதை நாங்கள் அறிவோம். அதே அக்கினி ஸ்தம்பம் பவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தது, அதன் விளைவாக அவன் வேதாகமத்திலுள்ள அநேக புத்தகங்களை, தேவனுடைய வார்த்தையை எழுதினான். ஆகவே, இப்பொழுதும் கர்த்தாவே, அதே அக்கினி ஸ்தம்பத்தை, நாங்கள் வார்த்தையின் அத்தாட்சியின் மூலமாகவும், விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாகவும் காண்கிறோம். அது கர்த்தருடைய வார்த்தையை இப்பொழுது எங்களுக்கு இங்கே வெளிப்படுத்தித் தருகிறதை நாங்கள் காண்கிறோம். தேவனே, ஜனங்கள் சீக்கிரமாக விழிப்படையட்டும், கர்த்தாவே, ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர் எவரோ அவர்களுடைய பாதைக்கு முன்னால் இது பிரகாசிக்கும்போது, கிணற்றடியிலிருந்து துர்கீர்த்தி பெற்ற ஸ்திரீ அது வேதப்பூர்வமானது என்று உடனடியாகக் கண்டு கொண்டதுபோல், இவர்களும் அதைக் கண்டுகொள்ள அருள்புரியும். 140இப்பொழுதும் பிதாவே, இந்த நேரத்தில் உம்மை அவர்களுடைய இருதயங்களில் ஏற்றுக்கொண்டவர் அனைவரும் இந்த நேரத்திலேயே பாவத்திற்கு முற்றுப்புள்ளியிட்டுவிட்டு, அவர்களுடைய பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, தேவன் அவர்கள் பாவங்களை மன்னித்தாரென்றும், அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக் கொண்டனர் என்பதையும் பகிரங்கமாக அறிக்கை செய்ய எழும்பி ஆயத்தப்படட்டும். பிதாவே, அதன்பின்பு பரிசுத்த ஆவியாகிய எண்ணெயை அவர்கள் மேல் ஊற்றி, தேவனாகிய கர்த்தருடைய ஊழியத்தில் அவர்கள் ஈடுபடவும், பொல்லாத இக்கடைசி நாட்களில் உமது ஊழியக்காரராக விளங்கவும் அருள்புரியும். இன்னும் சிறிது காலமே உள்ளதென்றும், சபையானது எந்தநேரத்திலும் எடுக்கப்படக்கூடும் என்பதையும் நாங்கள் உணருகிறோம். ஆட்டுக்குட்டியானவர் எந்த நேரத்திலும் பிரகாரத்தை விட்டு, பலியானது வைக்கப்பட்டுள்ள தேவனுடைய சிங்காசனத்தைவிட்டு புறப்பட்டு வரக்கூடும். அப்பொழுது எல்லாம் முடிவடையும், அதன் பின்னர் இவ்வுலகத்திற்கு அவள் விமோசனமில்லை. அவள் ஏமாற்றம் கொண்டு, இயேசுவின் உயிர்த்தெழுதலின்போது நிகழ்ந்தவாறு பூமியதிர்ச்சிகளுக்கு ஆளாவான். மேலும்... 141கிறிஸ்து கல்லறையை விட்டு எழுந்ததுபோல, பரிசுத்தவான்கள் எழும்போது, அதே காரியம் சம்பவிக்கும். கர்த்தாவே, அது எந்த நிமிடத்திலும் நிகழும். அந்த சந்தோஷகரமான நாளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிதாவே, உம் பிள்ளைகளை இப்பொழுது உமது கரங்களில் ஏந்திக் கொள்ளும். உமது ஆட்டுக்குட்டிகளை உமது மடியில் இழுத்துக் கொள்ளும். இதை அருளும். உமது ஊழியத்திற்கென்று பலப்படும்வரை, அவர்கள் உமது வார்த்தையினால் போஷியும். கர்த்தாவே, அவர்களை உமது கரங்களில் ஒப்புவிக்கிறோம். இந்த ஜெபத்திற்கு பதிலளியும். பிதாவே, மாற்கு 11-ம் அதிகாரத்தில், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” என்பதாய் நீர் சொல்லியிருக்கிறீர். இத்தனை ஆண்டுகளாக சத்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டு வந்து, சென்ற வாரத்தில் முத்திரைகளின் இரகசியங்களை வெளிப்படுத்தின உம்மை மனப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, உம் வருகையின் சமயம் நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிக அருகாமையில் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். 142தயவு கூர்ந்து என் ஜெபத்திற்கு பதிலளியும். அழைக்கப்பட்ட தேவனுடைய ஒவ்வொரு பிள்ளையும் இந்தச் செய்தியை நேரடியாகவோ அல்லது ஒலிநாடாக்களின் மூலம் கேட்கும்போது... அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் சேரவேண்டுமென்று, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு உரிமை கோருகிறேன். பிதாவே, சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கட்டும். இவர்களை இயேசுவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். இப்பொழுது உள்ளோ அல்லது வெளியே இருப்பவர்களில் யாராவது தேவனை விசுவாசித்து, பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக, இதுவரை பகிரங்கமாக அறிக்கை செய்யாமலிருப்பவர்களாயின், தேவனுடைய இரக்கங்களைக் கோரி அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பெற்றுக் கொண்டிருந்தால், தண்ணீர் தொட்டி உங்களுக்காக ஆயத்தமாயுள்ளது. ஞானஸ்நானம் பெற விரும்புவோர் அனைவருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ ஞானஸ்நானம் கொடுக்க இங்கு ஆயத்தமாயிருப்பர். 143ஆறாம் முத்திரையை நீங்கள் கேட்டு களிகூர்ந்தீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) அது இப்பொழுது திறக்கப்பட்டிருப்பதை உங்களால் காணமுடிகின்றதா? (“ஆமென்.”] நீங்கள் அதை விசுவாசித்தீர்களா? [“ஆமென்.”] “எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” என்று எழுதப்பட்டுள்ளது. பாருங்கள்? செய்தியை விசுவாசியுங்கள். அப்பொழுது கர்த்தருடைய புயம் அதாவது, தேவனுடைய வார்த்தை-உங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால் நாளை காலை, என்னால் இயன்றவரை அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முற்படுவேன், அதற்கென்று அநேகமாக இன்றிரவு முழுவதையும் நான் ஜெபத்தில் கழிப்பேன். ஒவ்வொரு இரவும் நான் சுமார் மூன்று மணிநேரமே உறங்குகிறேன். சென்ற இரவு ஒரு மணிக்குத்தான் நான் படுக்கைக்குச் சென்றேன். மறுபடியும் மூன்று மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்கினேன். பாருங்கள்? பாருங்கள்? 144நான் இதற்காக பதில் கூறவேண்டியவனாயிருக்கப் போகிறேன். அது உண்மை . காலம் மிகவும் அருகாமையில் இருப்பதால், எந்தவிதமான மூடத்தனத்திற்கும், ஊகித்தலுக்கும், அறைகுறையாக விசுவாசிப்பதற்கும் இது ஏற்ற சமயமல்ல. முதலில் நான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு, அது வார்த்தையோடு ஒட்டியுள்ளதா என்பதை நான் பார்க்க வேண்டும். தேவனுடைய கிருபையால் இதுவரை எல்லாம் சரிவர அமைந்து வந்திருக்கிறது. நான் வேதத்திலிருந்து அநேக பாகங்களை குறிப்பிட்டேன். அவையாவும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. அது “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று அமைந்திருக்க வேண்டும். நான் அதினின்று அறிந்துள்ளபடி. அது அவ்விதம் கூறுவது மட்டுமல்ல. அந்த வார்த்தை கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகவே உள்ளது. எனவே வார்த்தையாகிய தேவன் எனக்களிக்கும் வெளிப்பாட்டை வேத வாக்கியங்களுடன் இணைத்துக் காண்பிப்பதன் மூலம், இவை கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். பார்த்தீர்களா? இவ்விதமாக வார்த்தை இங்கே கூறுகின்றது. தேவன் இப்பொழுது எனக்களித்த வெளிப்பாடு நாம் முன்பு கொண்டிருந்த கருத்துக்கு முரண்பாடாக, ஏன், நான் முன்பு கொண்டிருந்த கருத்துக்கு முற்றிலும் வேறுபட்டதாயுள்ளது. அதன் உண்மையான அர்த்தம் இதுவே என்று நான் சற்றேனும் நினைக்கவேயில்லை. ஆனால் அது வேதவாக்கியங்களுடன் சரிவர பொருந்துகிறது என்று நாம் காண்கிறோம். அது என்ன? அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. பாருங்கள்? அது சரியாக அவ்விதமாய் உள்ளது. இதுவரை வெளிப்படாமல் இந்த மணி நேரத்திற்கென்று வைக்கப்பட்டிருந்த இரகசியத்தை கர்த்தரே நம் சிந்தனைகளில் நுழையச் செய்கிறார். ஆகவே, இது இங்கே இருப்பதை நீங்கள் காணலாம். ஆம், அது அது கர்த்தர் தாம் அதைச் செய்தார். ஓ! நான் அவரை நேசிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் அவரை நான் நேசிக்கிறேன். 145எப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் உங்களை பீடத்தின் முன்னால் கொண்டுவர முடியவில்லை. அநேகர் தங்களுடைய கரங்களை மேலே உயர்த்தியுள்ளனர். இப்பொழுது பாருங்கள், இது உங்களோடு உள்ள தனிப்பட்ட ஓர் விவகாரம், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு சுயாதீனம் பெற்றிருக்கின்றீர்கள். பார்த்தீர்களா? காலம் மிகவும் சமீபித்துவிட்டபடியால், மற்றவர் உங்களை உள்ளே தள்ளிவிட வேண்டும் என்றிராமல், உங்களால் எவ்வளவு கடினமாக முன்னேற முடியுமோ, அவ்வளவு கடினமாய் முன்னேறுங்கள்; உங்களால் இயன்றவரை உள்ளே நுழைய பிரயாசப்பட வேண்டும். “கர்த்தாவே, என்னை வெளியில் விட்டுவிடாதேயும்; கர்த்தாவே, என்னை வெளியில் விட்டு விடாதேயும்; கதவு அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது; நான் உள்ளே நுழைந்தால் போதும்” என்று நீங்கள் அவரிடம் மன்றாட வேண்டும். பாருங்கள்? ஒரு நாளன்று தேவன் கதவை அடைத்துவிடுவார். நோவாவின் காலத்தில் அவ்விதம் செய்தார். அதன்பின்பு அவர்கள் கதவைத் தட்டினர். அது சரிதானே? (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார்-ஆசி.) அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். ஏழாம் ஜாமத்திலே என்று வேதம் உரைத்துள்ளது. அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சிலர் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் ஜாமங்களில் நித்திரை அடைந்தனர். ஆனால் ஏழாம் ஜாமத்தில், “மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள்” என்னும் அறிவிப்பு உண்டாகிறது. அப்பொழுது புத்தியில்லாத கன்னிகளைகள், புத்தியுள்ள கன்னிகைகளிடம், “உங்கள் எண்ணெயில் சற்று தாருங்கள்” என்பார்கள். 146அப்பொழுது மணவாட்டி, “எனக்குப் போதுமான அளவு மாத்திமே இருக்கின்றது. உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் சென்று ஜெபம் செய்து அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்பார்கள். உறங்கிக் கொண்டிருக்கும் புத்தியில்லாத கன்னிகைகள் யாரென்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? எபிஸ்கோபிலியன், பிரஸ்பிடேரியன், லூதரன்கள் இவர்களனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள இப்பொழுது முயற்சிப்பதைப் பாருங்கள். ஆனால் அவர்களிடமுள்ள தவறுயாதெனில், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கும் பதிலாக அவர்கள் அன்னிய பாஷை பேச முயல்கின்றனர். அவர்களில் அநேகர் இப்பொழுது அன்னிய பாஷை பேசுகின்றனர். இந்த சபைக்கு வந்து ஜெபம் செய்துக் கொள்ள அவர்கள் வெட்கப்படுகின்றனர். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஜெபம் செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். அப்படியானால் அது பரிசுத்த ஆவி என்று எண்ணுகின்றீர்களா? அது அன்னிய பாஷை பேசுதலாகும். ஆனால் அது பரிசுத்த ஆவியல்ல. புரிகிறதா? இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அன்னிய பாஷை பேசுவாரென்பதை நான் நம்புகிறேன். நான் அதை நம்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதற்குப் போலியான ஒன்று நிலவுகின்றது. ஆம், ஐயா! ஆவியின் கனிகள் மாத்திரமே பரிசுத்த ஆவியைப் பெற்றதை நிரூபிக்க முடியும். அது என்ன மரம் என்பதை அதன் கனிகள்தான் நிரூபிக்கும். பட்டையல்ல, அதன் கனிகள். 147இப்பொழுது, கவனியுங்கள், கடைசி மணி நேரத்தில் அவள், “நான் இப்பொழுது அதைப் பெற்றுக் கொண்டேன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதைப் பெற்றுக்கொண்டேன் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், நாங்கள் அதைப் பெற்றுக் கொள்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே வருவாள். நான்-நான்- நான் இதைக் கூறாமல் இருப்பது நலமாயிருக்கும். பாருங்கள், ஏனெனில் இது ஒருவேளை உங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். நான் அன்றிரவு எடுத்துக் கொள்ளப்படுதல் எவ்விதம் வரும் என்று நான் கூறியபொழுது, நான் நான்... இப்பொழுது நீங்கள் நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பீர்களானால் சரி. [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) கவனியுங்கள், கவனியுங்கள். சரி, அது உங்களைப் பொறுத்ததாகும். 148பாருங்கள், அந்த உறங்கிக் கொண்டிருந்த புத்தியில்லாத கன்னிகை, பாருங்கள், செல்வதற்காக தனக்கு ஜெபிக்கப்பட்டதாக, ஜெபித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள், மணவாட்டியோ சென்று விட்டிருந்தார்கள். அவள் சென்றுவிட்டாள். மணவாட்டி சென்றதை அவள் அறியாதிருப்பாள். ஒரு திருடன் இரவில் வருவதைப்போல். அப்பொழுது அவர்கள் கதவைத் தட்டுவார்கள். என்ன சம்பவிக்கும்? ஆனால் என்ன நேரிடும்? அவர்கள் உபத்திரவ காலத்திற்குள் தள்ளப்படுவார்கள். “அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்று வேதம் உரைக்கின்றது. அது உண்மையா? சகோதரனே, சகோதரியே. அது எப்பொழுது நேரிடும்? எனக்கு தெரியாது. பாருங்கள்? ஆனால் நான்-நான்-அது மிக அருகாமையிலுள்ளது என்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது பாருங்கள். இது, இதுதான். இது என்னுடைய எண்ணமாகும். பாருங்கள்? அது மிக அருகாமையிலுள்ளது என்று நான் நான் - நான் நம்புகிறேன், நான்- நான். ஒவ்வொரு நாளும் நான்- நான்.. தினந்தோறும் என்னால் இயன்றவரை நான் மிருதுவாக நடக்க முயல்கிறேன். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் அறிவீர்கள், அது... 149இன்றைக்கு ஒரு காரியம் சம்பவித்தது. நான் ஏதோ ஒன்று வருவதைக் கண்டேன். நான் நான் அதைக் கண்டபோது என் மூச்சு நின்றுவிடும் போன்ற உணர்ச்சி உண்டானது. பாருங்கள். அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அந்த ஒளி அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த காரியம் எனக்கு வெளிப்பட்டது. அது உண்மை என்பதை நானறிவேன். நான் எனக்குள், “ஓ, தேவனே, அதை என்னால் கூற முடியாதே. என்னால் என்னால் அதை கூற முடியவில்லையே. என்னால் முடியவில்லை” என்று கூறிக்கொண்டே அறைக்கு வெளியில் வந்து இங்குமங்குமாக நடக்கத் தொடங்கினேன். சகோதரனே, நான் “என்னே ! நான் செய்யக் கூடும்? என்று நினைத்தேன். ஓ!” பாருங்கள்? நான் - நான் மீன்பிடிக்கவோ அல்லது வேறெதற்கோ சென்றுவிட வேண்டும். அல்லது நான்.. நான் நான் கண்டதை உங்களிடம் கூறமுடியாதவனாயிருக்கிறேன். பாருங்கள்? நாம் சந்தோஷமாக இந்த நேரத்தை கழித்து வருகிறோம். நாம் அவ்வாறில்லையா? கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆமென். பாருங்கள்? நாம் நாம் இப்பொழுது மகத்தான காலத்தில் வாழ்ந்துகொண்டு வருகிறோம், பாருங்கள், என் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பி வழிகின்றது. 150ஆனால் அதே சமயத்தில் உலகத்தையும், அதில் கறுத்த நிழலிடப்பட்டு, இழந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களைக் குறித்து நினைக்கும் போது, என் இருதயத்திலிருந்து இரத்தம் கசிகின்றது. “நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் என்னதான் செய்ய முடியும்.” பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய இருதயத்தில் கறுதுவதை என்னால் உணர முடிகின்றது. நமது கர்த்தர் எருசலேமையும், அதன் ஜனங்களையும் நோக்கி, “எருசலமே, எருசலமே, நோக்கி, கோழி தன் குஞ்சுகளைத் தன் செட்டைகளின் கீழ் கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக, நான் எத்தனைத் தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” என்று சொன்னபோது இவ்விதம்தான் மனஸ்தாபப்பட்டிருக்க வேண்டும். “நான் எத்தனை தரமோ உங்களைக் கூட்டிச் சேர்க்க மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” என்று பரிசுத்த ஆவியானவர் கூறுவதை உங்களால் உணர முடியும். பாருங்கள்? நண்பர்களே, ஏதோ ஒன்று இங்கே நடைபெறவிருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். அது என்னவாயிருந்தாலும் சரி, தேவனறிவார். அது எப்பொழுது நிகழப்போகிறது என்பது யாருக்குமே தெரியாது. அது ஒரு இரகசியம். அது எப்பொழுது நிகழப்போகிறது என்று யாருக்குமே தெரியாது. 151ஆனால் இயேசு, “இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது,” என்று கூறினார். நான் ஆறாவது முத்திரையையும், மத்தேயு 24-ல் அவர் கூறினதையும் நான் ஒப்பிட்டுக் காண்பித்தது போல. இப்பொழுது அவர் என்ன கூறினார் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். “இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறிவீர்கள்” என்று கூறியிருக்கிறார். அதே அதிகாரத்தில் அடுத்து வருகிற 30 மற்றும் 31-ம் வசனங்களையும், அதற்கு கீழே சென்று 32 மற்றும் 33ம் வசனங்களையும் கவனியுங்கள். “அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பர்” என்று இயேசு கூறியுள்ளார். அது சரியா? அவர், “இப்பொழுது கற்றுக்கொள்ளுங்கள்...” என்றார். 152அதோடு அவர் நிறுத்தி விட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆறாம் முத்திரைக்கு மேல் அவர் ஒன்றும் கூறவில்லை . ஏழாம் முத்திரையைக் குறித்து அவர் எதையுமே கூறவில்லை . அவர் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் முத்திரைகளைப் பற்றி கூறிவிட்டு அதனுடன் நிறுத்திக் கொண்டார். அதன்பின் அவர் அதைக் குறித்து ஒன்றையுமே குறிப்பிடவில்லை. அதன் பின்பு அவர் என்ன கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள். “இப்பொழுது அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்” பாருங்கள். அவர் உவமைகளைச் சொல்லத் தொடங்கி விடுகிறார். “இவையாவும் நிறைவேறும்” என்று அவர் கூறுகின்றார். 153அவர் மூன்று கேள்விகளுக்கு அவர்களுக்கு பதிலளிக்கின்றார். “இந்த அடையாளங்கள் என்ன? உமது வருகையின் அடையாளம் என்ன? உலகத்தின் முடிவில் அடையாளம் என்ன?” ஆறாம் முத்திரையின் சம்பவங்கள் உலக முடிவைக் குறிக்கின்றது. ஏழாம் தூதனுடைய சத்தமானது... நான் கண்ட தூதன் தன் கையை உயர்த்தி, “இனி காலம் செல்லாது” என்று சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். பூமியானது ஒரு புதிய பூமியைப் பிறப்பிக்கும். அது முடிவுறுகின்றது. அதற்கு மிக அருகாமையில் வாசலருகே நாம் இருக்கிறோம். ஓ! எனக்கு நடுக்க முண்டாகிறது. “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்? என்னால் வேறு என்ன செய்ய முடியும்?” பார்த்தீர்களா? நான் தரிசனத்தில் கண்ட அந்த ஸ்தலத்தையும் அங்குள்ள அருமையான மக்களையும் குறித்து அப்படியே நினைத்துப் பார்க்கிறேன். “ஓ, தேவனே, இதை அவர்கள் இழந்து போகக் கூடாதே, நான் அவர்களை உள்ளே கொண்டுவர வேண்டுமே. அவர்களுக்கு இதை எடுத்துக் கூறி அவர்களெல்லாரையும் உள்ளேக்கொண்டுவர முயற்சிக்க வேண்டுமே” என்று எண்ணினேன். உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள்... 154ஏனெனில், “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடம் வரமாட்டான்.” ஆனால் நமக்கு ஓர் ஆறுதல் உண்டு. அதாவது, “பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்.” ஆனால் ஏனையோர் ஸ்தாபனங்களைச் சார்ந்துள்ளோர் - “உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத யாவரையும் அவன் மோசன் போக்கினான்.” ஓ, என்னே! ஆகையால், நீங்கள் பாருங்கள், அது பரிதாபமான் ஓர் காரியம். ஆனால் நாம் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று. தேவனுடைய வார்த்தையில் நிலைநின்று, அவர் செய்யக் கூறின யாவையும் கவனமாகச் செய்தலாகும். பாருங்கள், அவர் என்னவெல்லாம் செய்யச் சொல்லுகிறாரோ, அதைச் செய்யுங்கள். “ஓ, என்னே! அவர்கள் இதைச் செய்கிறார்களே, இவர்கள் அதைச் செய்கிறார்களே” என்று ஸ்தாபனங்கள் செய்வதை நீங்கள் ஆலோசிக்க முற்பட்டால்...ஓ! அது வெறும்... 155அது எவ்வளவாக உங்களைப் பாதிக்கும் என்பதை நீங்கள் உணருவதில்லை! இப்பொழுது இதை நான் கூற விரும்புகிறேன். ஒலிநாடாக்களில் இதை நீங்கள் பதிவு செய்யப் போவதில்லை என்று நான் எண்ணுகிறேன். அநேக ஜனங்கள், “சகோதரன் பிரான்ஹாம் அந்த மாதிரியான ஒரு ஊழியத்தினால்...” என்று ஏதோ ஒன்றைக் கூற வருகிறார்கள். (ஏனெனில் ஒலி நாடாக்களில் கேட்பவர்கள் இங்குமங்குமாக சிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்த அர்த்தத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர். எனவே நான் அதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் அதை அறிவீர்கள்.) ஆகையால் அவர்கள், என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே இத்தகைய ஊழியம் எங்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்கும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஓ, என்னே! சகோதர, சகோதரியே, ஆனால் அவ்வூழியத்தினால், உண்டாகும் உத்திரவாதத்தின் தன்மையை உணராமல் நீங்கள் இவ்விதம் பேசுகின்றீர்கள். நீங்கள் சொல்லுவதை ஜனங்கள் அப்படியே நம்புகின்றனர். தவறான ஒன்றை நீங்கள் அவர்களிடம் கூறி, அதை ஜனங்கள் விசுவாசித்துப் பின் தொடர்ந்தால், நீங்கள் அதற்கு பதில் கூற வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். தேவன் அவர்கள் இரத்தப்பழியை உங்களிடம் கேட்பார். அப்படியானால் அதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள். அது மிகவும் பயங்கரமான ஒரு செயலாகும். ஆகையால் அன்பாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தராகிய இயேசுவினிடத்தில் அன்பு கூறுங்கள். எளிமையாயிருங்கள். எதையும் ஆலோசனை செய்து, அதன் அர்த்தத்தை அறிந்துகொள்ள ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம். தேவனுக்கு முன்பாக எளியவர்களாயிருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஆலோசிக்கின்றீர்களோ, அவ்வளவாக தேவனைவிட்டு புறம்பே செல்வீர்கள். பாருங்கள்? அவர் கூறுவதையே அப்படியே விசுவாசியுங்கள். இப்பொழுது, “அவர் அப்பொழுது வருவார்?” என்று நீங்கள் கேட்கலாம். 156அவர் ஒருக்கால் இன்றைக்கு வந்தாலும் பரவாயில்லை ; அவர் இருபது வருடங்கள் கழித்து வந்தாலும் அதுவும் சரிதான். நான் இப்பொழுது அவரைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறவிதமாகவே அவரைப் பின்பற்றிக் கொண்டிருக்கப் போகிறேன். “வேறெங்காவது என்னை உபயோகிக்க நீர் சித்தம் கொண்டால், இதோ கர்த்தாவே, நான் ஆயத்தமாயிருக்கிறேன்.” ஒருக்கால் உமது வருகை நூறு ஆண்டுகள் கழித்து இருந்தாலும் இருக்கலாம். “கர்த்தாவே, அது எப்பொழுது நிகழப்போகிறது என்று எனக்குத் தெரியாது. என் சந்ததியில் ஐந்தாம் தலைமுறையிலுள்ளவர்கள் அதை ஒருவேளை காணலாம். ஆனால் எவ்வாறாயினும் நான் உம்முடன் சரியான பாதையில் நடக்க விரும்புகிறேன்.” உம் வருகைக்கு முன்னர் நான் நித்திரையடைந்தால், அந்நாளில் நான் நிச்சயம் உயிரோடெழுவேன். அப்பாலுள்ள அந்த மகிமை ஸ்தலத்திற்கு சென்று வந்தேன்.. அந்த தேவனுடைய ராஜ்யத்தில் வயது சென்றவர் அனைவரும் வாலிப தோற்றம் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்திருப்பார்கள். ஆண்களும் பெண்களும் வாலிப பருவத்தையடைந்து மிகவும் அழகாயிருப்பார்கள். அவர்கள் அங்கே அழகான வாலிபர்களாகவும், வாலிப ஸ்திரீகளாகவும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இனி ஒருபோதும் வயோதிகர்களாக முடியாது. அவர்கள் இனி பாவம் செய்வதில்லை. அங்கு பொறாமையோ அல்லது வெறுப்போ காணப்படுவதில்லை. ஓ, என்னே! 157இப்பொழுது ஒலிநாடாக்கள் பதிவு செய்யப்படவில்லையென்று நான் எண்ணுகிறேன். நான் நான் இன்னும் மூன்று நான்கு நிமிடங்கள் உங்களிடம் பேசவிரும்புகிறேன். அவ்வாறு பேசலாமா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.ஆசி.] இப்பொழுது நான் கூறப் போவது தனிப்பட்ட விஷயமாகும். ஏனெனில் நாளை, நான்நான்... நாளைய ஆராதனை மிகவும் சிறந்ததாக இருக்கும். ஆகவே, நான் கூற விரும்புவதை இப்பொழுது கூறிவிடுவது மேலானதாகும் என்று நான் நினைக்கிறேன். இதை நமக்கென்று பிரத்தியேகமாகக் கூறுகின்றேன். நான்... என் மனைவியாகிய மேடாவை (Meda) நான்-நான் நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் முதல் மனைவியை நான் அதிகமாக நேசித்ததன் காரணத்தால், நான் இரண்டாம் முறை விவாகம் செய்துக்கொள்ள விரும்பவில்லை. தேவன் விவாகம் செய்துக்கொள்ள கூறாமலிருந்தால், நான் இரண்டாம் முறை விவாகம் செய்துக்கொண்டிருக்கவே மாட்டேன். அவள் எவ்விதம் ஜெபிக்கச் சென்றாள் என்பதையும், நான் செய்தது என்ன என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். “நீ போய் அவளை விவாகம் செய்துகொள்,” என்றும், நான் அதை எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்றும் தேவன் எனக்குச் சரியாகக் கூறியிருந்தார். அவள் மிகவும் அருமையானவள், இன்றிரவு அவள் எனக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். இப்பொழுது அங்கு இரவு எட்டு மணி. அவள் ஒருவேளை இப்பொழுது ஜெபித்துக்கொண்டிருக்கலாம். 158இப்பொழுது கவனியுங்கள். ஒருநாள் மேடா என்னிடம் “பில் (Bill) பரலோகத்தைக் குறித்த ஒரு கேள்வியை நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்” என்றான். நானும் “சரி. மேடா, அது என்ன?” என்றேன். அவள், “நான் உம்மை நேசிக்கிறேன் என்று நீர் அறிவீர்” என்றாள். நான் “ஆமாம்” என்றேன். நான் மேலே சென்று அவர்களைக் கண்டபிறகு இது நடந்தது. அவள், “உங்கள் மனைவியாகிய ஹோப் (Hope) உங்களை நேசித்தாள் என்பதை நீர் அறிவீர்” என்றாள். நான், 'ஆமாம்' என்றேன். அவள், “இப்பொழுது நான் பொறாமை கொள்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால் ஹோப் உங்களை நேசித்தாள்” என்றான். அவள் தொடர்ந்து, “நாம் பரலோகத்திற்குப் போகும்போது... அதாவது அவளை நீங்கள் அங்கு கண்டதாகக் கூறினீர்கள்” என்றாள். அதற்கு நான், “அவள் அங்கே இருக்கிறாள். நான் அவளை அங்கே இரண்டுமுறை கண்டிருக்கிறேன்” என்றேன். அவள் அங்கே இருக்கிறாள், என் வருகைக்காக அங்கே அவள் காத்துக்கொண்டிருக்கிறாள். ஆகவே நான் அங்கே சாரோனையும் (sharon) கண்டேன். நான் உன்னை இங்கே காண்பதுபோல அவளையும் அங்கே கண்டேன். நான் அவளை அங்கே கண்டேன். நான்... என்றேன். அப்பொழுது அவள், “நாம் அங்கு செல்லும்போது, எங்களில் யார் உங்கள் மனைவியாயிருப்பாள்?” என்று கேட்டாள். அதற்கு நான், “நீங்கள் இருவருமே. எனக்கு மனைவியென்று யாரும் இருக்கமாட்டார்கள். அதே சமயத்தில் நீங்கள் இருவருமே அங்கிருப்பீர்கள்” என்றேன். அப்பொழுது அவள், “என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே” என்றாள். அதற்கு நான், “தேனே, இங்கே அமர்ந்துக்கொள். நான் ஒன்றை உனக்கு விளக்கிக் காண்பிப்பேன்” என்றேன். நான், “நீ என்னை நேசிக்கிறாய் என்று நான் அறிவேன். நான் உன்னை எவ்வளவாய் நேசிக்கிறேன், மதிக்கிறேன், கனம் பண்ணுகிறேன் என்பதை நீயும் அறிவாய். இப்பொழுது உதாரணமாக, நான் நன்கு ஆடையணிந்து, டவுண்டவுடன் என்ற இடத்திற்கு செல்ல, அங்கு உண்மையாகவே ஒரு அழகான வேசி என்னைக் கட்டித்தழுவி, 'ஓ, சகோதரன் பிரான்ஹாம், நான் உம்மை மிகவுமாக நேசிக்கிறேன்' என்று கூறி, அவளுடைய கரத்தை என்மீது போட்டு கட்டித் தழுவ ஆரம்பித்தால், அப்பொழுது நீ என்ன நினைப்பாய்?” என்று கேட்டேன். அவள், “நான் ஒருக்காலும் அதை விரும்பமாட்டேன் என்றே நினைக்கிறேன்” என்று பதிலுரைத்தாள். நான் மேலும் அவளிடம், “நான் உன்னிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கும் கர்த்தராகிய இயேசுவுக்குமிடையே ஒருவரை மாத்திரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பலப்பரீட்சை உண்டானால், அப்பொழுது நீ யாரைத் தெரிந்து கொள்வாய்?” என்று கேட்டேன். இது எங்கள் இருவருக்குமிடையே எழுந்த குடும்ப சம்பாஷணையாய் இருந்தது. அவள் “கர்த்தராகிய இயேசுவை ” என்றாள். “ஆம், பில், நான் உம்மை நேசித்தாலும், நாம் உம்மைவிட்டு, அவரைத்தான் தெரிந்துகொள்வேன்” என்றாள். நான் அதைக்கேட்டு, “தேவனே, உனக்கு நன்றி! இப்பொழுது நீ அதைக் கூற கேட்கவே நான் சந்தோஷமடைகிறேன்” என்றேன். மேலும் நான், “இப்பொழுது என்னைக் கட்டித் தழுவிய அதே வேசி இயேசுவண்டை வந்து, அவரைக் கட்டித் தழுவி, இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று கூறினால், அதைக்குறித்து நீ என்னை நினைப்பாய்?” என்று கேட்டேன். அதற்கு அவள், “அதைக்குறித்து நான் சந்தோஷப்படுவேன்” என்றாள். 159பாருங்கள், அது மாம்சப் பிரகாரமான அன்பிலிருந்து (Phileo) தெய்வீக அன்பாக (agapo) மாறுகின்றது. பாருங்கள்? அது மேலான அன்பு. பாருங்கள்? பரலோகத்தில் கணவன், மனைவி என்னும் நிலையும், குழந்தைகள் பெறுவதென்பதும் கிடையாது. அங்கு ஆண், பெண் இருவருக்குமிடையே காணப்படும் பாலினச் சுரப்பி வேறுபாடு இருக்காது. நாம் ஒரேவிதமாக இருப்போம். அங்கு இனச்சேர்க்கைக்குரிய சுரப்பிகள் (glands) இருக்காது. பாருங்கள்? நீங்கள். ஆம், ஐயா இச்சுரப்பிகள் இல்லாதவர்களாய் உங்களைப் பாவனை செய்து பாருங்கள். பூமியின் ஜனத்தொகை அதிகரிக்க வேண்டுமென்று கருதியே நமக்கு இவை அளிக்கப்பட்டன. ஆனால் பரலோகத்தில் இச்சுரப்பிகள் இருக்கமாட்டா. இல்லை. அங்கு ஆண் சுரப்பிகளும் பெண் சுரப்பிகளும் இருப்பதில்லை. ஆனால் தேவனுடைய சிருஷ்டிப்பின் வடிவம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாயிருக்கும். அது முற்றிலும் சரியாகும். அங்கு மாம்சப் பிரகாரமான அன்பு காணப்படுவதில்லை. எல்லாமே தெய்வீக அன்பாய் இருக்கும். பாருங்கள்? ஆகவே, மனைவியென்பவள் அழகான உருவமாய் இருப்பாளேயன்றி மனைவியென்றும் ஸ்தானத்தை வகிக்கமாட்டாள். அங்கே... மாம்சப்பிரகாரமான பாகம் என்பதே அங்கு இராது. பாருங்கள். அங்கே பொறாமைபட்ட ஒன்றுமே இல்லாததால், அங்கே பொறாமை என்பதே இருக்காது. அவ்விதமான காரியம் என்பதே அங்கு கிடையாது. அவ்விதமான ஒன்று உண்டு என்பதையே நீ ஒருபோதும் அறியாதிருப்பாய். பாருங்கள்? அங்கு அழகான வாலிபனும், வாலிப ஸ்திரீயாக மட்டுமே இருப்பீர்கள். இதைக் கேட்ட என் மனைவி பில் இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. என்றாள். நான், “சரி” என்றேன். 160நான் சம்பவித்த ஒரு சிறு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். இது ஒரு சொப்பனமாகும். நான் அப்பொழுது உறக்கத்திலிருந்தேன். நான் இதை இதற்கு முன்பு பகிரங்கமாக வெளியேக் கூறினதில்லை. ஒரு சிலருக்கு மாத்திரமே இதை நான் கூறியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த மட்டில் இதற்கு முன்பு நான் இதை பகிரங்கமாகக் கூறினதில்லை . மேற்கூறிய தரிசனம் கண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் நான் ஒரு சொப்பனம் கண்டேன். அது நியாயத்தீர்ப்பு அல்ல. சபையானது நியாயத்தீர்ப்புக்கு, அதாவது மணவாட்டி நியாயத்தீர்ப்புக்குள்ளாவதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த சொப்பனத்தில், பரலோகத்தில் கிரீடங்கள் அளிக்கப்படும்போது நான் அங்கு இருந்தேன். பாருங்கள். ஒரு பெரிய சிங்காசனம் இங்கே வைக்கப்பட்டிருந்தது. இயேசு அதின் மேல் வீற்றிருந்தார். பதிவுசெய்யும் தூதனும் (Recording angel) மற்றவரும் அங்கு நின்றுகொண்டிருந்தனர். தந்தத்தால் செய்யப்பட்ட சுருள்வடிவமுள்ள ஒரு பிரமாண்டமான படிக்கட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடந்து கொண்டிருந்ததை அங்கு கூடியிருந்த அனைவரும் காணத்தக்கவாறு அது அமைந்திருந்தது. நான் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் அந்தப்படிக்கட்டில் ஏறிச் செல்வேன் என்னும் எண்ணம் எனக்குச் சற்றேனும் இருக்கவில்லை. நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன். 161பதிவு செய்யும் தூதன் ஒரு குறிப்பிட்டப் பெயரைக் கூப்பிடுவான். அது எனக்குத் தெரிந்த பெயராயிருக்கும். பெயர் கூப்பிடப்பட்ட சகோதரன் சகோதரியுடன் அங்கு நடந்து வரும்போது நான் அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பதிவு செய்யும் தூதன் அங்கு கிறிஸ்துவின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். (இப்பொழுது இது ஒரு சொப்பனம் ஆகும்) அவர்களுடைய பெயர் அங்கே இருந்தன. ஜீவ புஸ்தகத்தில் அது காணப்பட்டது. இயேசு அவர்களைப் பார்த்து. “நல்லது” உத்தமும் உண்மையுள்ள ஊழியக்காரனே, உள்ளே “பிரவேசி” என்பார். அவர்கள் அங்கு சென்று கொண்டிருந்ததை நான் பின்னால் நின்று பார்த்தேன். அவர்கள் ஒரு புதிய உலகத்திற்குள்ளும், சந்தோஷத்திற்குள்ளும் பிரவேசித்தனர். “உலகத்தோற்றத்துக்கு முன்னால் உங்களுக்கென்று ஆயத்தமாக்கப்பட்ட கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். பாருங்கள்? நான் நினைத்தேன். 'ஓ' அவர்கள் சந்தோஷங்கொண்டு ஒருவரையொருவர் சந்தித்தது மலைகளையும் பெரிய ஸ்தலங்களையும் கடந்து செல்வது அற்புதமான காட்சியல்லவா?' என்று நினைத்தவாறே நின்று கொண்டிருந்தேன். 162ஆனால் நான், “ஓ, அது அற்புதமானதல்லவா? மகிமை அல்லேலூயா!” என்று எண்ணி மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்தேன். அதன்பின், வேறொரு பெயர் அழைக்கப்படுவதை நான் கேட்டேன். அப்பொழுது, “ஓ, நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறிந்திருக்கிறேன். நான்.. அதோ அவர் அங்கே செல்கிறார்” என்று நினைத்தேன். இவ்விதமாக நான் அவரைக் கவனித்தேன். “நல்லது...கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி...” அப்பொழுது நான், “ஓ தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றேன். உதாரணமாக. “ஆர்மன் நெவில்” என்று அழைப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம், பாருங்கள். அப்பொழுது நான், “அதோ, அந்த வயதான சகோதரன் நெவில் அவர் அங்கே இருக்கிறார்.” என்பேன்- பாருங்கள்? அவர் ஜனக் கூட்டத்திலிருந்து வெளியே வந்து, மேலே சென்றார். அப்பொழுது அவர், “உலகத் தோற்றத்துக்கு முன்னால் உனக்கென்று ஆயத்தமாக்கப்பட்ட கர்த்தரின் சந்தோஷத்துக்குள் பிரவேசி. அதற்குள் பிரவேசி” என்று கூறினார். அப்பொழுது முதிர்ந்த சகோதரன் நெவில் ரூபம் மாறி, அங்கு நடந்து சென்றார். சந்தோஷத்துடன் சத்தமிட்டுக் கொண்டே சென்றார். அப்பொழுது நான், “தேவனுக்கு மகிமை” என்று கூச்சலிடுவேன், நான் நின்று, அற்புதமான நேரத்தை உடையவனாய் என் சகோதரர் செல்லுவதைக் கவனித்து கொண்டிருந்தேன். அதன்பின்னர் அங்கு நின்றுகொண்டிருந்த பதிவுசெய்யும் தூதன், “வில்லியம் பிரான்ஹாம்” என்று பெயரை வாசித்தான். நானும் நடந்து செல்ல அழைக்கப்படுவேனென்று நான் நினைக்கவேயில்லை. ஆகையால் நான் சிறிது அச்சமுற்றேன். “ஓ, என்னே! நான் அதைச் செய்ய வேண்டுமா?” என்று நான் நினைத்தேன். நான் நடந்து செல்லும்போது அங்கு குழுமியிருந்த அனைவரும் என் முதுகில் தட்டி, [எப்படி தட்டுகிறார் என்பதை விளக்க சகோதரன் பிரான்ஹாம் அநேகமுறை தம்மிலேயே தட்டிக் காண்பிக்கிறார்.—ஆசி.] “சகோதரன் பிரான்ஹாமே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!” என்றனர். அந்த பெரிய ஜனக்கூட்டத்தின் நடுவே நான் சென்றபோது, அவர்கள் இவ்வாறு என் முதுகில் தட்டிக் கொண்டிருந்தனர். [எப்படி தட்டுகிறார்கள் என்பதை விளக்க சகோதரன் அநேகமுறை தம்மிலேயே தட்டிக் காண்பிக்கிறார்.- ஆசி.] “சகோதரனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றனர். 163அப்பொழுது உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு ஜனக்கூட்டத்திலிருந்து வருவதுபோன்று, “உங்களுக்கு நன்றி, உங்களுக்கு நன்றி, உங்களுக்கு நன்றி” என்று கூறிக்கொண்டே நடந்து செல்வதுபோல சென்றேன். நான் அந்தப் பெரிய தந்தப் படிக்கட்டின் மேல் நடந்து செல்ல வேண்டியவனாயிருந்தேன். நான் இவ்வாறு மேலேறிச் செல்ல ஆரம்பித்தேன். நான் முதற்படிக்கட்டில் கால் வைத்து நின்றேன். நான் எண்ணினேன். அவருடைய முகத்தை நான் நோக்கிப் பார்த்தேன். “அவரை நன்றாகக் காணட்டும்” என்று நினைத்தேன். எனவே நான் அங்கு நின்றேன். நான் என் கரங்களை இவ்விதம் வைத்திருந்தேன். இங்கே வேறு யாரோ ஒருவரின் கரம் என் கரத்தைப் பற்றியதுபோன்ற உணர்ச்சி ஏற்பட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, ஹோப் பெரிய கறுத்த கண்களுடனும், கறுத்த கூந்தல் பின்புறம் தொங்கினவாறு வெள்ளையங்கி தரித்தவளாய் அங்கு நின்று கொண்டிருந்தாள். நான் “ஹோப்” என்று அழைத்தேன். பின்பு வேறொரு கரம் என் இந்தக் கரத்தைப் பிடித்தது. நான் பார்த்தபோது மேடா, கறுத்த கண்களுடன், கறுத்த கூந்தல் பின்புறம் தொங்கினவாறு, வெள்ளையங்கி தரித்தவளாய் அங்கு நின்று கொண்டிருந்தாள், நான், “மேடா” என்றேன். 164இருவரும் ஒருவரையொருவர் இந்தவிதமாக நோக்கினர். அவர்கள். அவர்களிலிருவரும் என் கைகளைக் கோர்த்துக் கொண்டனர். நாங்கள் வீட்டுக்கு (Home) நடந்து சென்றோம். நான் உறக்கத்திலிருந்து எழுந்தேன். ஓ, நான் உறக்கத்தினின்று எழுந்து, நான் நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து அழ ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா? அப்பொழுது நான், “ஓ, தேவனே, நான் சொப்பனத்தில் கண்டது உண்மையாகவே நிறைவேறட்டும்” என்றேன். இவ்விருவரும் என் வாழ்க்கையில் ஈடுபட்டு, குழந்தைகளைப் பெற்றனர். இதோ நாங்கள் மூவரும் பரிபூரணப்பட்ட புதிய உலகத்திற்குள் நடந்து சென்றோம். ஓ, என்னே! இல்லை, ஒன்றுமேயில்லை... ஓ, அது மிகவும் அற்புதமான ஒரு காரியமாய் இருக்கப் போகிறதே! அதை இழந்து போக வேண்டாம்! அதை இழந்துபோக வேண்டாம். ஓ, தேவக் கிருபையினால், உங்களால் செய்ய முடிந்த அனைத்தும் செய்யுங்கள், மற்றவைகளை தேவன் பார்த்துக் கொள்வார். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் முன்பு அவர் என்னை நேசித்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் நாம் நம் முழு இருதயத்தோடும் அதை மீண்டும் பாடுவோம். தேவனுக்கு நேராக நம்முடைய கண்களை உயர்த்துவோம். நான் அவரை நேசிக்கிறேன். [சபையோர், நான் அவரை நேசிக்கிறேன் என்று மீண்டும் ஒரு முறை பாடிக் கொண்டிருக்கையில், சகோதரன் பிரான்ஹாம் மேடையை விட்டு இறங்கி, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீக்காக ஜெபிக்கிறார்.-ஆசி.) ... அவரை நேசிக்கிறேன். முன்பு அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 165சரி. இப்பொழுது இக்கூட்டம் முடியும் வரை அவள் உயிரோடிருப்பாளென்று நினைக்கவில்லை. அது உண்மை. இப்பொழுது அவள் இரண்டு கரங்களையும் உயர்த்தி தேவனைத் துதிக்கின்றாள். அதற்காகவே நான் இவ்வளவு நேரமாக இங்கு தாமதித்தேன். நான் எதைக் காண்கிறேன் என்று உங்களுக்கு கூறவில்லை. மேடாவைக் குறித்தும் மற்றவரைக் குறித்தும் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த ஒளி முன்னும் பின்னுமாக சுழன்றுகொண்டே வந்து அவள் மேல் நின்றதை நான் கவனித்தேன். அப்பொழுது நான், “அதுதான்” என்று நினைத்தேன். ஓ, அவர் அற்புதமானவரல்லவா? [சபையோர் களிகூருகின்றனர்.- ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முன்பு அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 166இப்பொழுது, நம் முழு இருதயத்துடன் பாடுவோம். (நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலை சகோதரன் பிரான்ஹாம் மெதுவாக வாய்திறவாமல் பாடத்துவங்குகிறார்-ஆசி.) அவருடைய நன்மையும், கிருபையுங் குறித்து நினைவு கூறுவோம். நான் அவரை நேசிக்கிறேன் (ஆமென்) நான் அவரை நேசிக்கிறேன் (ஆமென்!) முன்பு அவர் நேசித்ததால் 167இப்பொழுது நீங்கள் சுகமடைந்துவிட்டீர்களா? ஆமென்! அதுதான், இப்பொழுது...?... நீங்கள் சென்று சுகமடைவீராக. ஆமென். உங்களை சுகப்படுத்துவதற்காக தேவனுடைய கிருபை உங்களுக்குப் பிரத்தியட்சமானது. ஆமென். கல்வாரி மரத்திலே ஓ, தேவனுக்கு மகிமை! நான் அவரை நேசிக்கிறேன்... சரி உங்கள் போதகர். நான்... (யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் நாளை ஒன்பதரை மணிக்கு ஆரம்பிக்கிறதா?” என்று கேட்கிறார்.-ஆசி.] ஒன்பதிலிருந்து ஒன்பதரை மணிக்கு. ஒன்பது மணியளவில் உள்ளே ஆரம்பியுங்கள். (“காலை உணவிற்கு பிறகா? ஒன்பது மணிக்கா?”] நீங்கள் ஒன்பது மணிக்கு ஆரம்பியுங்கள். நான் ஒன்பதரை மணிக்கு ஆரம்பிப்பேன்.